மேலும் அறிய

தேர்தல் முடிவுகள் 2024

(Source: ECI/ABP News/ABP Majha)

கோடநாடு கொலை, கொள்ளை வழக்கு; ஜெயலலிதா கார் ஓட்டுநர் அய்யனிடம் சிபிசிஐடி விசாரணை

மறைந்த அதிமுக பொதுச்செயலாளர் ஜெயலலிதாவின் கார் ஓட்டுநராக இருந்த அய்யப்பனிடம் இன்று சிபிசிஐடி அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

கோடநாடு கொலை கொள்ளை வழக்கு சம்பந்தமாக மறைந்த அதிமுக பொதுச்செயலாளர் ஜெயலலிதாவின் கார் ஓட்டுநராக இருந்த அய்யப்பனிடம் இன்று சிபிசிஐடி அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இதற்காக அவருக்கு சம்மன் அனுப்பப்பட்டிருந்த நிலையில், காவலர் பயிற்சி பள்ளி மைதானத்தில் அவர் விசாரணைக்காக ஆஜரானர். முன்னதாக செய்தியாளர்களை சந்தித்த அய்யப்பன், முதல்முறையாக இங்கு விசாரனைக்காக வந்துள்ளதாகவும், உள்ளே சென்றதால் என்ன நடக்கும் போகிறது என தெரியவரும் என கூறினார். ஜெயலலிதாவிடம் 1991 ஆம் ஆண்டு அக்டோபர் மாதத்தில் இருந்து ஓட்டுநராக பணியில் இருந்ததாக தெரிவித்த அவர், 2021 ஆம் ஆண்டு வரை ஓட்டுநராக இருந்ததாக தெரிவித்தார்.

சசிகலா பெங்களூர் சிறையில் இருந்து வெளியில் வருவது வரை வாகனத்தை மெயின்டைன் செய்துவிட்டு, பின்னர் அதனைக் கொடுத்து விட்டு வந்துள்ளதாக தெரிவித்தார். மேலும் சொந்த காரணங்களால் தன்னால் வேலைக்கு செல்ல முடியாமல் போனதாகவும், தனது மகனை பள்ளிக்கு அழைத்து சென்று விடுவது மீண்டும் அழைத்து வருவது போன்ற வேலைகளை செய்து வருவதாக தெரிவித்தார்.  கனகராஜ் 2000 க்கு பிறகுதான் பணிக்கு வந்ததாக தெரிவித்தார். கனகராஜ் அவரது பழக்கவழக்கம் சரியில்லை என்பதாலும் சொல்வதைக் கேட்காமல் இருந்ததாலும் பணியில் இருந்து நிறுத்தி விட்டதாக தெரிவித்த அவர் ஜெயலலிதாவை பொருத்தவரை அவர் என்ன சொல்லினாலும் கேட்க வேண்டும் அதனை பின்பற்ற வேண்டும் என ஸ்ட்ரிட்டாக இருப்பார் என தெரிவித்தார். ஆம் சரியாக இல்லை என்றால் ஜெயலலிதா ஏற்றுக்கொள்ள மாட்டார் என தெரிவித்தார். அதனால் அவரை வேண்டாம் அனுப்பி விடுங்கள் என ஜெயலலிதா கூறிவிட்டதாக கூறினார். கோடநாட்டில் இது போன்று சம்பவம் நடக்கும் என்று நாங்கள் எதிர்பார்க்கவில்லை என தெரிவித்தார்.

கோடநாடு கொலை, கொள்ளை வழக்கு; ஜெயலலிதா கார் ஓட்டுநர் அய்யனிடம் சிபிசிஐடி விசாரணை

கனகராஜின் அண்ணன் தனபால் குறித்து எனக்கு தெரியாது கனகராஜ் மட்டும் சிறிது நாட்கள் வேலை பார்த்ததாக தெரிவித்தார். ஜெயலலிதா இறந்த பிறகு அவரது 5 வண்டிகள் எனது கண்ட்ரோலில் இருந்தது. அதன் பிறகு சசிகலா சிறைக்கு செல்லும் பொழுது இந்த வாகனங்களை எல்லாம் பார்த்துக் கொள்ளும்படி என்னிடம் தெரிவித்தார் எனக் கூறிய அவர் 2021 ஆம் ஆண்டு வரை பார்த்துக் கொண்டதாக தெரிவித்தார். மேலும் நாங்கள் அரசியல் சம்பந்தப்பட்டதில் தலையிட மாட்டோம் எனவும் அரசியலுக்குள் நாங்கள் செல்வது ஜெயலலிதாவிற்கும் பிடிக்காது என தெரிவித்தார். பத்தாண்டுகளாக பேச்சிலர் வாழ்க்கையில் ஜெயலலிதாவின் இல்லத்தில் தான் தங்கி இருந்ததாகவும் அதன் பின் திருமணமாகி தனியாக வந்துவிட்டதாக தெரிவித்தார். இந்த கோடநாடு வழக்கு சம்பந்தமாக ஊட்டியில் ஆஜரானதாகவும் தற்பொழுது இங்கு முதல்முறையாக வந்திருப்பதாக தெரிவித்தார்.

முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவிற்கு சொந்தமான நீலகிரியில் உள்ள கோடநாடு எஸ்டேட்டில் கடந்த 2017ஆம் ஆண்டு ஏப்ரல் 23 ஆம் தேதி கொள்ளை சம்பவம் நடைபெற்றது. பாதுகாவலராக இருந்த ஓம்பகதூர் என்பவரை கொலை செய்து விட்டு, சில மதிப்புமிக்க பொருட்கள் திருடப்பட்டது. இது தொடர்பாக சயான், சதீசன், உதயகுமார், ஜம்சிர் அலி, தீபு, சந்தோஷ், திலிப் ஜாய், வாளையார் மனோஜ், மனோஜ்  உள்ளிட்ட 10 பேர் மீது கைது செய்யப்பட்டனர். இவ்வழக்கில் முக்கிய குற்றவாளியாக கருதப்படும் முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் ஓட்டுநர் கனகராஜ், சேலம் மாவட்டத்தில் நடந்த கார் விபத்தில் உயிரிழந்தார். இது தொடர்பான வழக்கு நீலகிரி மாவட்ட நீதிமன்றத்தில் நடந்து வருகிறது. இந்த வழக்கை தனிப்படை காவல் துறையினர் விசாரணை நடத்தி வந்த நிலையில், சிபிசிஐடி விசாரணைக்கு மாற்றப்பட்டது குறிப்பிடத்தக்கது.

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

IPL Auction 2025 LIVE:  போட்டி போட்ட RCB மற்றும் MI.. 12.50 கோடிக்கு ஏலம் போன் ஹேசில்வுட்
IPL Auction 2025 LIVE: போட்டி போட்ட RCB மற்றும் MI.. 12.50 கோடிக்கு ஏலம் போன் ஹேசில்வுட்
IPL Expensive Player List: மாஸ் காட்டிய பண்ட், ஸ்ரேயஸ்.. ஐபிஎல்லில் அதிக விலைக்கு ஏலம் போன டாப் 10  வீரர்கள் பட்டியல் இதோ!
IPL Expensive Player List: மாஸ் காட்டிய பண்ட், ஸ்ரேயஸ்.. ஐபிஎல்லில் அதிக விலைக்கு ஏலம் போன டாப் 10 வீரர்கள் பட்டியல் இதோ!
Good Bad Ugly : காப்பியடிச்ச பாட்டு வேண்டாம்..கோபத்தில் இசையமைப்பாளரை மாற்றிய குட் பேட் அக்லி பட இயக்குநர்
Good Bad Ugly : காப்பியடிச்ச பாட்டு வேண்டாம்..கோபத்தில் இசையமைப்பாளரை மாற்றிய குட் பேட் அக்லி பட இயக்குநர்
"நாயகன் மீண்டும் வரான்" வீட்டுக்கு வரும் அஸ்வின்.. சிஎஸ்கேவின் மாஸ்டர் ஸ்ட்ரோக்!
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

IPL Auction 2025 | மீண்டும் இந்திரன் சந்திரன் Combo!CSK வில் RRR கேங்!தோனியின் மாஸ் ப்ளான் | AshwinIPL Auction 2025 | ராகுலின் STATS தெரியுமா?கோட்டைவிட்ட RCB - CSK..தட்டி தூக்கிய டெல்லி | KL RahulAR Rahman Saira Divorce Reason : வலியும் வேதனையும் அதிகம்  பிரிந்த AR ரஹ்மான்  சாய்ரா பானுIPL Auction 2025 :

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
IPL Auction 2025 LIVE:  போட்டி போட்ட RCB மற்றும் MI.. 12.50 கோடிக்கு ஏலம் போன் ஹேசில்வுட்
IPL Auction 2025 LIVE: போட்டி போட்ட RCB மற்றும் MI.. 12.50 கோடிக்கு ஏலம் போன் ஹேசில்வுட்
IPL Expensive Player List: மாஸ் காட்டிய பண்ட், ஸ்ரேயஸ்.. ஐபிஎல்லில் அதிக விலைக்கு ஏலம் போன டாப் 10  வீரர்கள் பட்டியல் இதோ!
IPL Expensive Player List: மாஸ் காட்டிய பண்ட், ஸ்ரேயஸ்.. ஐபிஎல்லில் அதிக விலைக்கு ஏலம் போன டாப் 10 வீரர்கள் பட்டியல் இதோ!
Good Bad Ugly : காப்பியடிச்ச பாட்டு வேண்டாம்..கோபத்தில் இசையமைப்பாளரை மாற்றிய குட் பேட் அக்லி பட இயக்குநர்
Good Bad Ugly : காப்பியடிச்ச பாட்டு வேண்டாம்..கோபத்தில் இசையமைப்பாளரை மாற்றிய குட் பேட் அக்லி பட இயக்குநர்
"நாயகன் மீண்டும் வரான்" வீட்டுக்கு வரும் அஸ்வின்.. சிஎஸ்கேவின் மாஸ்டர் ஸ்ட்ரோக்!
Rishabh Pant: 10 நிமிஷத்தில் ஸ்ரேயாஸை காலி செய்த ரிஷப் பண்ட்.. ஏலத்தில் தட்டித்தூக்கிய LSG!
10 நிமிஷத்தில் ஸ்ரேயாஸை காலி செய்த ரிஷப் பண்ட்.. தட்டித்தூக்கிய LSG!
Mohammed Siraj : கோலியின் செல்லப்பிள்ளையை கோட்டைவிட்ட ஆர்சிபி! சோகத்தில் RCB ரசிகர்கள்
Mohammed Siraj : கோலியின் செல்லப்பிள்ளையை கோட்டைவிட்ட ஆர்சிபி! சோகத்தில் RCB ரசிகர்கள்
PM Modi: ” சிட்டுக்குருவி ரெம்ப தூரமா போயிருச்சு ” சிட்டுக்குருவி குறித்து உருக்குமாக பேசிய பிரதமர் மோடி.!
PM Modi: ” சிட்டுக்குருவி ரெம்ப தூரமா போயிருச்சு ” சிட்டுக்குருவி குறித்து உருக்குமாக பேசிய பிரதமர் மோடி.!
Shreyas Iyer: அடிச்சது ஜாக்பாட்.. ஏத்திவிட்ட டெல்லி.. அடித்துத்தூக்கிய பஞ்சாப்
Shreyas Iyer: அடிச்சது ஜாக்பாட்.. ஏத்திவிட்ட டெல்லி.. அடித்துத்தூக்கிய பஞ்சாப்
Embed widget