மேலும் அறிய

இரவு ரோந்தில் சிக்கியது 5 டன் ரேஷன் அரிசி... கடத்தலை முறியடித்த கோவை போலீஸ்...

ஐந்து டன் எடையுள்ள ரேஷன் அரிசி மூட்டைகள் மற்றும் கடத்தலுக்கு பயன்படுத்தப்பட்ட மூன்று வாகனங்களை பறிமுதல்.

கேரளாவிற்கு கடத்த முயன்ற ஐந்து டன் ரேஷன் அரிசியை உணவு கடத்தல் தடுப்பு பிரிவு போலீசார் பறிமுதல் செய்ததுடன், இந்த சம்பவத்தில் தொடர்புடைய இரண்டு பேரை கைது செய்துள்ளனர். இந்த சம்பவம் கோவை மாவட்டம் கவுண்டம்பாளையம் பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

போலீசாருக்கு கிடைத்த ரகசிய தகவல்

கோவை, கவுண்டம்பாளையம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதிகளில் இருந்து கேரளாவிற்கு ரேஷன் அரிசி கடத்தப்படுவதாக உணவு கடத்தல் தடுப்பு பிரிவு போலீசாருக்கும், கவுண்டம்பாளையம் போலீசாருக்கும் ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து உடனடியாக இணைந்து போலீசார் தீவிர கண்காணிப்பு மற்றும் ரோந்து பணியில் ஈடுபட்டனர்.

அப்போது இடையர்பாளையம் அண்ணா நகர் பகுதியில் சந்தேகத்திற்கிடமான முறையில் நிறுத்தப்பட்டிருந்த இரண்டு சரக்கு வேன்கள் மற்றும் ஒரு சரக்கு ஆட்டோவை போலீசார் கவனித்தனர். வாகனங்களை சுற்றிவளைத்து பிடித்த போலீசார், அவற்றை சோதனை செய்தனர். சோதனையில் வாகனங்களுக்குள் அதிக அளவில் அரிசி மூட்டைகள் அடுக்கி வைக்கப்பட்டிருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.

5 டன் ரேஷன் அரிசி பறிமுதல்

விசாரணையில், அந்த அரிசி மூட்டைகள் அனைத்தும் பொதுமக்களுக்கு வழங்கப்பட வேண்டிய ரேஷன் அரிசி என்பதும், அதை சட்டவிரோதமாக கேரளாவிற்கு கடத்த முயன்றதும் தெரிய வந்தது. இதையடுத்து போலீசார் உடனடியாக சுமார் ஐந்து டன் எடையுள்ள ரேஷன் அரிசி மூட்டைகள் மற்றும் கடத்தலுக்கு பயன்படுத்தப்பட்ட மூன்று வாகனங்களை பறிமுதல் செய்தனர்.

இந்த சம்பவம் தொடர்பாக இடையர்பாளையம் நீலிம்மன் நகரைச் சேர்ந்த குணசேகரன் மற்றும் பீகார் மாநிலத்தைச் சேர்ந்த முகேஷ் குமார் ஆகிய இருவரை போலீசார் கைது செய்தனர். கைது செய்யப்பட்ட இருவரிடமும் தொடர்ந்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.

ரேஷன் பொருட்கள் கடத்தலில் ஈடுபடுவோர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என போலீசார் எச்சரிக்கை விடுத்துள்ளனர். மேலும், இந்த கடத்தல் வலையமைப்பில் வேறு யாரேனும் தொடர்புடையவர்களா என்பது குறித்தும் விசாரணை தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.

தலைப்பு செய்திகள்

சாக்கு மூட்டையில் கட்டி சாக்கடையில் வீசப்பட்ட இளைஞர் உடல்! கோவையில் கொலை மர்மம் அம்பலம்.
சாக்கு மூட்டையில் கட்டி சாக்கடையில் வீசப்பட்ட இளைஞர் உடல்! கோவையில் கொலை மர்மம் அம்பலம்.
அனைத்து திட்டங்களையும் உடனே செயல்படுத்த முடியாது.தவெக அரசுக்கு ஆதரவாக துரை வைகோ கருத்து!
அனைத்து திட்டங்களையும் உடனே செயல்படுத்த முடியாது.தவெக அரசுக்கு ஆதரவாக துரை வைகோ கருத்து!
கோவாவில் கலக்கிய வீல்சேர் கிரிக்கெட் வீரர்கள்... 265 ரன்கள் குவித்து அசத்திய தமிழ்நாடு...
கோவாவில் கலக்கிய வீல்சேர் கிரிக்கெட் வீரர்கள்... 265 ரன்கள் குவித்து அசத்திய தமிழ்நாடு...
Coimbatore power cut: கோவையில் நாளை எங்கெல்லாம் மின்தடை? இதோ முழு லிஸ்ட்
Coimbatore power cut: கோவையில் நாளை எங்கெல்லாம் மின்தடை? இதோ முழு லிஸ்ட்

வீடியோ

BJP Breaks TMC | 50 MLA ராஜினாமா.. உடைந்தது திரிணாமுல் காங்.,? மம்தாவை காலி செய்யும் மோடி
கேரளாவை உலுக்கிய மரணம் 1 1/2 வயது குழந்தை கொலை காதலுனுடன் தாய் செய்த கொடூரம்!
Duraimurugan DMK | ”எனக்கு பதவி வேணாம்” ஒதுங்கும் துரைமுருகன்? அடுத்த பொதுச்செயலாளர் யார்?
Minister Keerthana |
Minister Ramesh | அமைச்சரிடமே லஞ்சம் வாங்கி கையும் களவுமாக சிக்கிய அர்ச்சகர்! ”4000 ரூபாய் கொடுங்க”

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Edappadi Palanisamy: “தூரசக்தி, ஓரசக்தி என்று சொன்ன கட்சியை காப்பாற்ற முயல்கிறதா இந்த பேரசக்தி.?“; அரசை விளாசிய EPS
“தூரசக்தி, ஓரசக்தி என்று சொன்ன கட்சியை காப்பாற்ற முயல்கிறதா இந்த பேரசக்தி.?“; அரசை விளாசிய EPS
Udhayanidhi Vs CM Vijay : “அலட்சியம் காட்டாம உடனடி நடவடிக்கை எடுங்க“ - முதலமைச்சர் விஜய்க்கு உதயநிதி கடிதம்; எதற்காக.?
“அலட்சியம் காட்டாம உடனடி நடவடிக்கை எடுங்க“ - முதலமைச்சர் விஜய்க்கு உதயநிதி கடிதம்; எதற்காக.?
Priya vs Pallavi: அசிங்கப்படுத்திய மேயர் பிரியா; பதிலடி கொடுத்த எம்எல்ஏ பல்லவி- பள்ளிகளில் அடுத்தடுத்து பரபரப்பு!
Priya vs Pallavi: அசிங்கப்படுத்திய மேயர் பிரியா; பதிலடி கொடுத்த எம்எல்ஏ பல்லவி- பள்ளிகளில் அடுத்தடுத்து பரபரப்பு!
TN Govt., Vs Ration Workers: ‘தாயுமானவர் திட்டம்‘; அரசுக்கு ரேஷன் கடை ஊழியர்கள் சங்கம் எச்சரிக்கை; என்ன பிரச்னை தெரியுமா.?
‘தாயுமானவர் திட்டம்‘; அரசுக்கு ரேஷன் கடை ஊழியர்கள் சங்கம் எச்சரிக்கை; என்ன பிரச்னை தெரியுமா.?
TN Govt MoU: அட்ரா சக்க..! முதல் கையெழுத்திலேயே ரூ.18,600 கோடி முதலீடு, சிஎம் விஜய் போட்ட தொழில் ஒப்பந்தங்கள்
அட்ரா சக்க..! முதல் கையெழுத்திலேயே ரூ.18,600 கோடி முதலீடு, சிஎம் விஜய் போட்ட தொழில் ஒப்பந்தங்கள்
Maruti Flex Fuel Car: பெட்ரோல், டீசல் பத்தின கவலைய விட்டுடுங்க; வந்துடுச்சு நாட்டின் முதல் Flex Fuel கார்; அசத்திய மாருதி
பெட்ரோல், டீசல் பத்தின கவலைய விட்டுடுங்க; வந்துடுச்சு நாட்டின் முதல் Flex Fuel கார்; அசத்திய மாருதி
Priya vs Pallavi: ’’ஆணவத்திலும் திமிர்லயும் இருக்கீங்க’’ பள்ளி வளாகத்தில் மேயர் பிரியா- எம்எல்ஏ பல்லவி ஷாக் மோதல்!
Priya vs Pallavi: ’’ஆணவத்திலும் திமிர்லயும் இருக்கீங்க’’ பள்ளி வளாகத்தில் மேயர் பிரியா- எம்எல்ஏ பல்லவி ஷாக் மோதல்!
Netflix Free Subscription: ஒரு ரூபாய் கூட செலவழிக்காம நெட்ஃபிளிக்ஸ் சந்தா கிடைக்கும்.! யாருக்கு.? அத எப்படி வாங்குறது.?
ஒரு ரூபாய் கூட செலவழிக்காம நெட்ஃபிளிக்ஸ் சந்தா கிடைக்கும்.! யாருக்கு.? அத எப்படி வாங்குறது.?
Embed widget