மேலும் அறிய

’அலுவல் மொழியை தேசிய மொழியாக்குவதை மக்களால் ஏற்றுக்கொள்ள முடியாது’ - கனிமொழி எம்.பி.

ஒவ்வொரின் அடையாளமும் அவர்களின் மொழி. என் மீது ஒரு மொழியை பேச வேண்டுமென கட்டாயப்படுத்தும் உரிமை யாருக்கும் கிடையாது - கனிமொழி

கோவை குனியமுத்தூர் பகுதியில் உள்ள ஸ்ரீ கிருஷ்ணா கல்லூரியில் இளைஞர் தலைமை பண்பு உச்சி மாநாடு நடைபெற்றது. இந்த மாநாட்டில் தலைமை விருந்தினராக திமுக துணை பொதுச்செயலாளர் கனிமொழி எம்.பி. கலந்து கொண்டார். இந்த நிகழ்வில் கனிமொழி எம்பி மாணவர்களிடையே பேசும் போது, “சத்துணவு திட்டத்தை முதலில் தொடங்கிய மாநிலம் தமிழ்நாடு. காலை உணவு திட்டத்தை இந்திய அளவில் துவங்கி வைத்துள்ளது தமிழ்நாடு. இந்திய அளவில் ஐ.டி. பாலிசியை உருவாக்கியவர் கலைஞர். மிகச்சிறந்த தலைவர்கள் மக்களை படிக்கக் கூடியவர்கள். கம்யூனிகேசன் என்பது வளர்ந்து வருகிறது. மாறிக் கொண்டே வருகிறது.

’அலுவல் மொழியை தேசிய மொழியாக்குவதை மக்களால் ஏற்றுக்கொள்ள முடியாது’ - கனிமொழி எம்.பி.

அரசியலில் தவறுகள் நடைபெறும் போது தொழில் நுட்பத்தால் வைரல் ஆகிறது. இது இளைஞர், இளம் பெண்களின் உலகமாக உள்ளது. தந்தை பெரியார், அண்ணா ஆகியோரை இணைத்து கருத்துகளை தெரிவிக்கும் தலைவராக கலைஞர் இருந்துள்ளார். தமிழ்நாட்டில் இன்று அறிவியல் பூர்வமாக நல்ல கம்யூனிகேஷன் தொடர்பு உள்ளதற்கு காரணம் மேலே குறிப்பிட்ட 3 தலைவர்கள். பெண்கள் போலியான பாதுகாப்பில் இருந்து வெளியே வர வேண்டும். நாம் கம்யூனிகேஷனில் எந்த இடத்தில் இருக்கோம் என்பதை தெரிந்து கொள்ள வேண்டும். தமிழ் உணர்வு அனைவருக்கும் உள்ளது. மொழி ,அடையாளம் ஆகியவை பெருமையாக இருக்கிறது” எனத் தெரிவித்தார்.

இதனைத் தொடர்ந்து செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த கனிமொழி, ”ஒவ்வொரின் அடையாளமும் அவர்களின் மொழி. என் மீது ஒரு மொழியை பேச வேண்டுமென கட்டாயப்படுத்தும் உரிமை யாருக்கும் கிடையாது. மொழி என்பது என்னுடைய அடையாளம் என்னை பற்றியும், என் வரலாற்றை தெரிந்துக் கொள்ள உதவுகிறது. நம்முடைய மொழி அடையாளம், சுயமரியாதை. மீண்டும் மொழி போர் நிலை வந்துவிடக்கூடாது என்று தான் முதல்வர் அறிக்கை வெளியிடுள்ளார். தமிழ், ஆங்கிலம் இரண்டு மொழிகள் இருக்ககூடிய சூழல் தான் தமிழகத்தில் உள்ளது. எதையும் அழித்து விட வேண்டுமென கிடையாது.

’அலுவல் மொழியை தேசிய மொழியாக்குவதை மக்களால் ஏற்றுக்கொள்ள முடியாது’ - கனிமொழி எம்.பி.

உலகத்துடன் தொடர்பு கொள்ள ஆங்கிலம், நம்முடன் பேசுவதற்கு தமிழ் இருக்கிறது. தமிழ்நாட்டில் இருக்கும் மாணவர்கள் கட்டாயம் தமிழ் கற்க வேண்டும் என்பதே தமிழக அரசின் நிலைப்பாடு. இந்தியாவை பொறுத்தவரை பட்டியல் 8ல் உள்ள மொழிகள் எல்லாம் இணையாக, ஒரே நிலையில் வைத்து பார்க்க வேண்டும். ஆனால் சில மொழிகளுக்கு முக்கியத்துவம் தருவது, அலுவல் மொழியை தேசிய மொழியாக கொண்டு வந்து சேர்ப்பதை மக்களால் ஏற்றுக்கொள்ள முடியாது. நம்முடைய முதல்வர் மட்டுமின்றி, மற்ற மாநில முதல்வர்கள் கூட எதிர்வினை ஆற்றி உள்ளார்கள். மக்களின் உணர்வுகளுக்கு மதிப்பு அளிக்க வேண்டும்” எனத் தெரிவித்தார். தமிழிசை செளந்தரராஜன் பெண்கள் ஆடை அணிவது குறித்த கருத்து தொடர்பான கேள்விக்கு ”பெரியார் குறிப்பிட்ட மாதிரி பெண் தனக்கு எது வசதியான உடையோ அலங்காரமோ அவர் தான் முடிவு செய்ய வேண்டும். அதை பெரியார் வலியுறுத்தியுள்ளார். கட்டுபாடு என்பதை நாம் தான் முடிவு செய்ய வேண்டும்” என பதிலளித்தார்.

மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்

ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்

பேஸ்புக் பக்கத்தில் தொடர

ட்விட்டர் பக்கத்தில் தொடர

யூடியூபில் வீடியோக்களை காண

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

GST Rate: இதற்கு ஜி.எஸ்.டி வரி 12 % லிருந்து 5% ஆக குறைப்பு; ஆனால் இதற்கு அதிகம்:  நிர்மலா சீதாராமன் தெரிவிப்பு
GST Rate: இதற்கு ஜி.எஸ்.டி வரி 12 % லிருந்து 5% ஆக குறைப்பு; ஆனால் இதற்கு அதிகம்: நிர்மலா சீதாராமன் தெரிவிப்பு
Nellai Murder: ”செல்போனில் மூழ்கி கிடக்கிறாங்க”: நெல்லை கொலை வழக்கில் போலீசை லெஃப்ட் - ரைட் வாங்கிய நீதிபதி
”செல்போனில் மூழ்கி கிடக்கிறாங்க”: நெல்லை கொலை வழக்கில் போலீசை லெஃப்ட் - ரைட் வாங்கிய நீதிபதி
மக்களே ரெடியாகுங்க! ஹெல்த் இன்சூரன்ஸ் பிரீமியம் குறைகிறதா? ஜிஎஸ்டி கவுன்சில் முக்கிய முடிவு!
மக்களே ரெடியாகுங்க! ஹெல்த் இன்சூரன்ஸ் பிரீமியம் குறைகிறதா? ஜிஎஸ்டி கவுன்சில் முக்கிய முடிவு!
அடித்துக்கொள்ளும் ஆளுநர்- அரசு; துணைவேந்தர் இல்லாமல் சீரழியும் 6 பல்கலை.கள், மாணவர்கள் தவிப்பு!
அடித்துக்கொள்ளும் ஆளுநர்- அரசு; துணைவேந்தர் இல்லாமல் சீரழியும் 6 பல்கலை.கள், மாணவர்கள் தவிப்பு!
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

21 நாட்கள் ராகுலின் சம்பவம்! PARLIAMENT-ஐ அலறவிட்ட I.N.D.I.A! விழிபிதுங்கிய பாஜக”இந்துக்களின் தலைவராகும் ப்ளான்” மோடி மீது RSS தலைவர் அட்டாக்!One Nation One Election  | பாஜக சதித் திட்டம்!அதிபர் ஆட்சியை நோக்கி இந்தியா?போட்டுடைத்த SPL! | SP LakshmananAmbedkar Controversy : பறிபோகும் தலித் வாக்குகள்!கடும் நெருக்கடியில் பாஜக!ஆட்டத்தை தொடங்கிய காங்கிரஸ்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
GST Rate: இதற்கு ஜி.எஸ்.டி வரி 12 % லிருந்து 5% ஆக குறைப்பு; ஆனால் இதற்கு அதிகம்:  நிர்மலா சீதாராமன் தெரிவிப்பு
GST Rate: இதற்கு ஜி.எஸ்.டி வரி 12 % லிருந்து 5% ஆக குறைப்பு; ஆனால் இதற்கு அதிகம்: நிர்மலா சீதாராமன் தெரிவிப்பு
Nellai Murder: ”செல்போனில் மூழ்கி கிடக்கிறாங்க”: நெல்லை கொலை வழக்கில் போலீசை லெஃப்ட் - ரைட் வாங்கிய நீதிபதி
”செல்போனில் மூழ்கி கிடக்கிறாங்க”: நெல்லை கொலை வழக்கில் போலீசை லெஃப்ட் - ரைட் வாங்கிய நீதிபதி
மக்களே ரெடியாகுங்க! ஹெல்த் இன்சூரன்ஸ் பிரீமியம் குறைகிறதா? ஜிஎஸ்டி கவுன்சில் முக்கிய முடிவு!
மக்களே ரெடியாகுங்க! ஹெல்த் இன்சூரன்ஸ் பிரீமியம் குறைகிறதா? ஜிஎஸ்டி கவுன்சில் முக்கிய முடிவு!
அடித்துக்கொள்ளும் ஆளுநர்- அரசு; துணைவேந்தர் இல்லாமல் சீரழியும் 6 பல்கலை.கள், மாணவர்கள் தவிப்பு!
அடித்துக்கொள்ளும் ஆளுநர்- அரசு; துணைவேந்தர் இல்லாமல் சீரழியும் 6 பல்கலை.கள், மாணவர்கள் தவிப்பு!
ITI Admission: உதவித்தொகை, இலவசக் கல்வி; புதிய ஐடிஐக்களில் டிச.31 வரை மாணவர் சேர்க்கை- விண்ணப்பிப்பது எப்படி?
ITI Admission: உதவித்தொகை, இலவசக் கல்வி; புதிய ஐடிஐக்களில் டிச.31 வரை மாணவர் சேர்க்கை- விண்ணப்பிப்பது எப்படி?
"பிரஷர் தாங்கல" மாணவர்களை பலி கேட்கும் நுழைவுத் தேர்வுகள்.. கோட்டாவில் மீண்டும் தற்கொலை!
TVK:
TVK: "எனக்கு எதிரிங்க வெளிய இல்ல" அடித்து கொள்ளும் தவெக நிர்வாகிகள்! ஆக்ஷன் எடுப்பாரா விஜய்?
கெஜ்ரிவாலுக்கு மீண்டும் சிக்கல்! ஸ்கெட்ச் போடும் ED.. தேர்தல் நேரத்தில் வேலையே காட்டும் பாஜக!
கெஜ்ரிவாலுக்கு மீண்டும் சிக்கல்! ஸ்கெட்ச் போடும் ED.. தேர்தல் நேரத்தில் வேலையே காட்டும் பாஜக!
Embed widget