கொரோனா நிவாரணப் பணிகளுக்காக 43 கிராமங்களை தத்தெடுத்த ஈஷா

ஈஷாவின் கொரோனா நிவாரணப் பணிகள் 2020 ஆம் ஆண்டு ஏப்ரல் 1 ஆம் தேதி முதல் ஒரு வருடத்திற்கு மேலாக தொடர்ந்து நடைபெற்று வருவது குறிப்பிடத்தக்கது.

FOLLOW US: 

கொரோனா 2 ஆவது அலை தீவிரம் அடைந்து இருக்கும் இக்கட்டான சூழலில் ஈஷா அவுட்ரீச் அமைப்பு கோவையில் 43 கிராமங்களில் நிவாரணப் பணிகளை தீவிரப்படுத்தி உள்ளது. இதன்மூலம், 17 பஞ்சாயத்துக்களில் உள்ள சுமார் 2 லட்சம் கிராம மக்கள் பயன்பெறுகின்றனர். 

பொதுமக்கள் மட்டுமின்றி மருத்துவர்கள், செவிலியர்கள், சுகாதாரப் பணியாளர்கள் மற்றும் காவல் துறையினர் என பல தரப்பினருக்கும் உதவும் வகையில் இப்பணிகள் மேற்கொள்ளப்படுகிறது. இப்பணியில் ஈஷா பிரம்மாச்சாரிகள், தன்னார்வலர்கள் மற்றும் இளைஞர்கள்  உட்பட ஏராளமானோர் அர்ப்பணிப்புடன் ஈடுபட்டு வருகின்றனர்.கொரோனா நிவாரணப் பணிகளுக்காக 43 கிராமங்களை தத்தெடுத்த ஈஷா

அதன்படி, கீழ்கண்ட நிவாரணப் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

1. தினமும் சுமார் 1.2 லட்சம் பேருக்கு நிலவேம்பு அல்லது கபசுர குடிநீர் வழங்கப்படுகிறது. 

2. உடலில் நோய் எதிர்ப்பு சக்தி மற்றும் ஆக்சிஜன் அளவை அதிகரிக்கும் வகையில்  ‘சிம்ம க்ரியா’ மற்றும் ‘சாஷ்டாங்கா’ என்ற 2 எளிய யோக பயிற்சிகள் 1.5 லட்சம் பேருக்கு கற்றுக்கொடுக்கும் பணிகள் நடைபெற்று வருகிறது.

3. ஒலிப்பெருக்கிகளுடன் கூடிய ஆட்டோக்கள் மூலம் அனைத்து கிராமங்களிலும் கொரோனா தடுப்பு  வழிமுறைகள் மற்றும் தடுப்பூசியின் முக்கியத்துவம் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது.

4. 2,500 முன் களப்பணியாளர்களுக்கு முக கவசம் மற்றும் சானிடைசர்கள் வழங்கப்படுகிறது. 

5. 7 அரசு மருத்துவமனைகளிலும் தினமும் கிருமி நாசினிகள் தெளிப்பதற்கு உதவிகள் செய்து தரப்படுகிறது.கொரோனா நிவாரணப் பணிகளுக்காக 43 கிராமங்களை தத்தெடுத்த ஈஷா

6. கொரோனா பாதித்த நோயாளிகளை கொரோனா சிகிச்சை மையங்கள் மற்றும் மருத்துவமனைகளுக்கு அழைத்து சென்று உதவிகள் செய்யப்படுகிறது.

7. தேவை ஏற்பட்டால், கட்டுப்பாடு பகுதிகளில் இருக்கும் கொரோனா நோயாளிகள் மற்றும் அப்பகுதி மக்களுக்கும் தேவையான உதவிகள் செய்து தரப்படுகிறது.

ஈஷாவின் கொரோனா நிவாரணப் பணிகள் 2020 ஆம் ஆண்டு ஏப்ரல் 1 ஆம் தேதி முதல் ஒரு வருடத்திற்கு மேலாக தொடர்ந்து நடைபெற்று வருவது குறிப்பிடத்தக்கது.

Tags: Corona Virus kovai Tamilnadu isha isha adopted 43 villages for corona relief work

தொடர்புடைய செய்திகள்

கோவை : 1089 பேருக்கு உறுதியானது கொரோனா தொற்று ; 30 பேர் உயிரிழப்பு..!

கோவை : 1089 பேருக்கு உறுதியானது கொரோனா தொற்று ; 30 பேர் உயிரிழப்பு..!

கோவை : வேலை செய்யவந்த இளம்பெண்ணை கூட்டு பாலியல் வன்கொடுமை செய்த இருவர் கைது! ஒருவர் தலைமறைவு!

கோவை : வேலை செய்யவந்த இளம்பெண்ணை கூட்டு பாலியல் வன்கொடுமை செய்த  இருவர் கைது! ஒருவர் தலைமறைவு!

பழங்குடியின கிராமத்தின் முதல் பட்டதாரி; ஊரடங்கில் ஆசிரியரான நெகிழ்ச்சி கதை!

பழங்குடியின கிராமத்தின் முதல் பட்டதாரி; ஊரடங்கில் ஆசிரியரான நெகிழ்ச்சி கதை!

கோவை : 1227 பேருக்கு கொரோனா தொற்று எண்ணிக்கை ; 17 பேர் உயிரிழப்பு..!

கோவை : 1227 பேருக்கு கொரோனா தொற்று எண்ணிக்கை ; 17 பேர் உயிரிழப்பு..!

காவியுடை படத்தால் சர்ச்சை : எதிர்ப்புகளால் வெள்ளை உடைக்கு மாற்றப்பட்ட திருவள்ளுவர்..!

காவியுடை படத்தால் சர்ச்சை : எதிர்ப்புகளால் வெள்ளை உடைக்கு மாற்றப்பட்ட திருவள்ளுவர்..!

டாப் நியூஸ்

Tamil Nadu Coronavirus LIVE News : தமிழ்நாட்டில் இன்று கொரோனா பாதிப்பு என்ன தெரியுமா?

Tamil Nadu Coronavirus LIVE News : தமிழ்நாட்டில் இன்று கொரோனா பாதிப்பு என்ன தெரியுமா?

லாக்டவுனில் இத்தனை கோடி இந்தியர்களுக்கு கண் பார்வை பாதிப்பா? ஆய்வில் அதிர்ச்சிச் தகவல்..

லாக்டவுனில் இத்தனை கோடி இந்தியர்களுக்கு கண் பார்வை பாதிப்பா? ஆய்வில் அதிர்ச்சிச் தகவல்..

கொரோனா 2-ஆம் அலையில் கர்ப்பிணிகளுக்கு 7.6 மடங்கு அதிக பாதிப்பு : ICMR ஆய்வில் தகவல்..!

கொரோனா 2-ஆம் அலையில் கர்ப்பிணிகளுக்கு 7.6 மடங்கு அதிக பாதிப்பு : ICMR ஆய்வில் தகவல்..!

Jagame Thandhiram : ஜகமே தந்திரம் - ஆஃபாயில் அரசியலின் ஆபத்து..!

Jagame Thandhiram : ஜகமே தந்திரம் - ஆஃபாயில் அரசியலின் ஆபத்து..!