மேலும் அறிய

கோவைக்கு தண்ணீர் பிரச்சனை வருது.? - சிறுவாணி நீர்மட்டம் வேகமாக சரிவு...

வழக்கமாக ஒரு நாளுக்கு 10 கோடி லிட்டர் வரை தண்ணீர் எடுக்கப்பட்ட நிலையில், தற்போது தினசரி 5 கோடி லிட்டர் மட்டுமே எடுக்கப்படுகிறது.

கோவை மாநகருக்கு குடிநீர் வழங்கும் முக்கிய ஆதாரமான சிறுவாணி அணையின் நீர்மட்டம் வேகமாக குறைந்து வருவதால், அணையில் இருந்து எடுக்கப்படும் குடிநீரின் அளவு குறைக்கப்பட்டுள்ளது. கோவை மாநகராட்சியில் 20 லட்சத்திற்கும் அதிகமான மக்கள் வசித்து வருகின்றனர். இவர்களின் குடிநீர் தேவையை பூர்த்தி செய்ய சிறுவாணி, பில்லூர் 1, பில்லூர் 2, பில்லூர் 3 உள்ளிட்ட குடிநீர் திட்டங்கள் மூலம் தண்ணீர் விநியோகம் செய்யப்பட்டு வருகிறது. இதில் சிறுவாணி அணை நீர், மாநகராட்சியின் 100 வார்டுகளில் 23 வார்டுகளுக்கு முக்கியமாக வழங்கப்படுகிறது. மேலும், அணைக்கு அருகிலுள்ள கிராமப்புற பகுதிகளுக்கும் இந்த நீர் பயன்படுத்தப்படுகிறது.

கோவை குடிநீர் ஆதாரத்தில் சரிவு

கடந்த ஆண்டு வடகிழக்கு மற்றும் தென்மேற்கு பருவமழை நல்ல அளவில் பெய்ததால், கோவை மாவட்டத்தில் உள்ள அணைகள், குளங்கள் மற்றும் நீர்நிலைகள் நிரம்பிய நிலையில் காணப்பட்டன. சிறுவாணி அணையும் முழு கொள்ளளவை எட்டியிருந்தது. இந்த அணையின் முழு உயரம் 49.5 அடி என்றாலும், பாதுகாப்பு காரணங்களால் கேரள அரசு 44 அடி வரை மட்டுமே தண்ணீர் தேக்க அனுமதி வழங்கி வருகிறது.

இந்நிலையில், இந்த ஆண்டின் தொடக்கம் முதல் கோவையில் வெயிலின் தாக்கம் அதிகரித்துள்ளதால், அணையின் நீர்மட்டம் தொடர்ந்து சரிந்து வருகிறது. தற்போது சிறுவாணி அணையின் நீர்மட்டம் 19.7 அடியாக குறைந்துள்ளது. நீர்மட்டம் குறைந்ததால், அணையில் இருந்து எடுக்கப்படும் குடிநீரின் அளவும் குறைக்கப்பட்டுள்ளது. வழக்கமாக ஒரு நாளுக்கு 10 கோடி லிட்டர் வரை தண்ணீர் எடுக்கப்பட்ட நிலையில், தற்போது தினசரி 5 கோடி லிட்டர் மட்டுமே எடுக்கப்படுகிறது.

சிறுவாணி அணை கேரள அரசின் கட்டுப்பாட்டில் உள்ள பகுதியில் அமைந்துள்ளது. கடந்த சில நாட்களாக அணையின் நீர்பிடிப்பு பகுதிகளில் லேசான மழை பெய்து வருகிறது. நேற்று மட்டும் சுமார் 20 மில்லி மீட்டர் மழை பதிவாகியுள்ளதாக குடிநீர் வடிகால் வாரிய அதிகாரிகள் தெரிவித்தனர். கோடை மழை தொடர்ந்து பெய்தால் அணையின் நீர்மட்டம் உயர வாய்ப்பு இருப்பதாகவும், மே மாத இறுதி அல்லது ஜூன் தொடக்கத்தில் பருவமழை தொடங்கும் என்பதால் குடிநீர் தட்டுப்பாடு ஏற்படும் நிலை இல்லை என்றும் அதிகாரிகள் தெரிவித்தனர்.

தலைப்பு செய்திகள்

coimbatore power cut: கோவையில் நாளை (06-8-2026) எங்கெல்லாம் கரண்ட் இருக்காது? - உங்கள் பகுதி லிஸ்ட்டில் உள்ளதா? உடனே பாருங்கள்!
coimbatore power cut: கோவையில் நாளை (06-8-2026) எங்கெல்லாம் கரண்ட் இருக்காது? - உங்கள் பகுதி லிஸ்ட்டில் உள்ளதா? உடனே பாருங்கள்!
கோவையில் நாளை (06-08-2026) எத்தனை மணி நேரம் மின் தடை? மின்வாரியம் அறிக்கை
கோவையில் நாளை (06-08-2026) எத்தனை மணி நேரம் மின் தடை? மின்வாரியம் அறிக்கை
கோவையில் நாளை (05-08-2026) எங்கெல்லாம் கரண்ட் கட் ஆகும் - மின்வாரியம் வெளியிட்ட லிஸ்ட்
கோவையில் நாளை (05-08-2026) எங்கெல்லாம் கரண்ட் கட் ஆகும் - மின்வாரியம் வெளியிட்ட லிஸ்ட்
coimbatore power cut: கோவையில் நாளை (04-08-2026) மின்தடை: எந்தெந்த பகுதிகளில் கரண்ட் கட்? லிஸ்ட் இதோ
கோவையில் நாளை (04-08-2026) மின்தடை: எந்தெந்த பகுதிகளில் கரண்ட் கட்? லிஸ்ட் இதோ

வீடியோ

தமிழ்நாட்டுக்குத் தலைகுனிவு? அசிங்கப்படுத்திய DK சிவகுமார் வாயைதிறங்க விஜய்
Cauvery Issue :
Kayalvizhi Alagiri Arrest : மு.க அழகிரி மகள் கைது! சென்னை போலீஸ் அதிரடி.. வெளியான அதிர்ச்சி வீடியோ
இர்பானுக்கு புது சிக்கல் சுகாதாரத்துறை நடவடிக்கை! விரைவில் கைதாகிறாரா?

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
’சட்டப்பேரவையில் உதயநிதி, எடப்பாடியை காட்டாமல் நேரலை’ ஆளுங்கட்சியினர் மட்டுமே காட்டப்படுவதாக புகார்
’சட்டப்பேரவையில் உதயநிதி, எடப்பாடியை காட்டாமல் நேரலை’ ஆளுங்கட்சியினர் மட்டுமே காட்டப்படுவதாக புகார்
Gold and silver rate today : சவரனுக்கு ரூ. 4,400 உயர்ந்தது.! இரண்டே நாளில் அதிரடி மாற்றம்- ஷாக் கொடுத்த தங்கம் - இன்றைய விலை இதோ
சவரனுக்கு ரூ. 4,400 உயர்ந்தது.! இரண்டே நாளில் அதிரடி மாற்றம்- ஷாக் கொடுத்த தங்கம் - இன்றைய விலை இதோ
TN Govt Debt: தமிழ்நாட்டின் ஒவ்வொரு குடும்பத்தின் மீதும் எவ்வளவு கடன்? அரசு வருவாய் - முழு விவரங்கள் இதோ..!
தமிழ்நாட்டின் ஒவ்வொரு குடும்பத்தின் மீதும் எவ்வளவு கடன்? அரசு வருவாய் - முழு விவரங்கள் இதோ..!
அமைச்சருடன் ரகசிய சந்திப்பு.! தவெகவிற்கு பல்டி அடித்த வைகோ- நடந்தது என்ன.? போட்டுடைத்த MLA-க்கள்
அமைச்சருடன் ரகசிய சந்திப்பு.! தவெகவிற்கு பல்டி அடித்த வைகோ- நடந்தது என்ன.? போட்டுடைத்த MLA-க்கள்
Ration Card : ஒரே நாளில் ரேஷன் கார்டில் திருத்தம்... விரல் ரேகை பதிவு செய்ய சூப்பர் சான்ஸ்.! தமிழக அரசு தேதி அறிவிப்பு
ஒரே நாளில் ரேஷன் கார்டில் திருத்தம்... விரல் ரேகை பதிவு செய்ய சூப்பர் சான்ஸ்.! தமிழக அரசு தேதி அறிவிப்பு
TN Weather News: 12 மாவட்டங்களுக்கு இன்று எச்சரிக்கை..! 4 மாவட்டங்களில் கனமழை - தமிழக வானிலை அறிக்கை
12 மாவட்டங்களுக்கு இன்று எச்சரிக்கை..! 4 மாவட்டங்களில் கனமழை - தமிழக வானிலை அறிக்கை
Sheikh Hasina: இந்தியா செய்த உதவி..! கடுப்பான வங்கதேசம் - டிசம்பரில் நாடு திரும்புவதாக ஷேக் ஹசீனா அறிவிப்பு
இந்தியா செய்த உதவி..! கடுப்பான வங்கதேசம் - டிசம்பரில் நாடு திரும்புவதாக ஷேக் ஹசீனா அறிவிப்பு
Ather Konarc Electric Scooter: 120KM ரேஞ்ச்..! குடும்பங்களுக்கான ஏதரின் புதிய மின்சார ஸ்கூட்டர் - பட்ஜெட், அம்சங்கள், வசதிகள் எப்படி?
120KM ரேஞ்ச்..! குடும்பங்களுக்கான ஏதரின் புதிய மின்சார ஸ்கூட்டர் - பட்ஜெட், அம்சங்கள், வசதிகள் எப்படி?
Embed widget