மேலும் அறிய
Advertisement
தமிழ்நாட்டில் மேற்கு மாவட்டங்களில் கவனிக்க வேண்டிய முக்கியச் செய்திகள்...!
முன்னாள் அமைச்சரின் மகன் மரணம், ஆட்கொல்லியை புலியை தேடும் வனத்துறை, கோடநாடு வழக்கில் கூடுதல் விசாரணை அறிக்கை தாக்கல் உள்ளிட்ட முக்கியச் செய்திகள் இதோ...
- முன்னாள் அமைச்சர் வீரபாண்டி ஆறுமுகமுகத்தின் மகனும், வீரபாண்டி சட்டமன்ற தொகுதி முன்னாள் உறுப்பினரும், திமுக தேர்தல் பணிக்குழு மாநிலச் செயலாளர்களில் ஒருவருமான வீரபாண்டி ராஜா மாரடைப்பு காரணமாக உயிரிழந்தார். அவரது பிறந்தநாளை கொண்டாட இருந்த நிலையில் உயிரிழந்ததால் கட்சியினரிடையே சோகம்
- நீலகிரி மாவட்டம் கூடலூரில் இதுவரை 4 ஆட்களையும் 10 கால்நடைகளையும் கொன்ற டி-23 என்ற புலியை சுட்டுக்கொல்ல முதன்மை வன அதிகாரி சேகர் குமார் நீரஜ் உத்தரவிட்டுள்ளார். இதையடுத்து புலியை தேடும் பணியில் வனத்துறையினர் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்
- கோடநாடு கொலை கொள்ளை வழக்கு கூடுதல் விசாரணை அறிக்கையை காவல் துறையினர் நீலகிரி மாவட்ட அமர்வு நீதிமன்றத்தில் தாக்கல் செய்த நிலையில் வழக்கு விசாரணை வரும் அக்டோபர் 29ஆம் தேதிக்கு ஒத்தி வைக்கப்பட்டுள்ளது. இந்த வழக்கில் சாட்சிகளாக சேர்க்கப்பட்ட 37 பேரிடம் விசாரணை நடத்தப்பட்டுள்ளதாக அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது
- கோவை மாவட்டம் முழுவதும் நேற்று பரவலாக கனமழை பெய்தது. காலை முதல் வானம் மேக மூட்டத்துடன் காணப்படுவதால், இன்றும் மழை பெய்யும் என எதிர்பார்க்கப்படுகிறது.
- கோவையில் கொரோனா தொற்று பாதிப்புகள் படிப்படியாக குறைந்து வருகிறது. அதேபோல திருப்பூர், ஈரோடு, நீலகிரி ஆகிய மாவட்டங்களில் கொரோனா பாதிப்புகள் சற்று குறைந்து வருகிறது.
- கோவை மாவட்டம் ஆனைமலை பகுதியில் 5 வயது குழந்தை கடத்தப்பட்ட வழக்கில் 3 பேரை காவல் துறையினர் கைது செய்தனர். கர்நாடகா மாநிலம் மைசூர் பகுதியை சேர்ந்த மணிகண்டன் – சங்கீதா தம்பதியினரின் ஆனைமலை பகுதியில் சாலையோர வியாபாரம் செய்து வந்தனர். குழந்தையை பணத்திற்காக கேட்ட போது, சங்கீதா கொடுக்க மறுத்ததால் குழந்தையை கடத்தி விற்பனை செய்த ராமர், முருகேசன் ஆகியோர் கைது செய்யப்பட்டனர். குழந்தை இல்லாததால் குழந்தையை வாங்கிய முத்துச்சாமி என்பவரும் கைது.
- நாமக்கல் மாவட்டம் பள்ளிபாளையம் பகுதியில் பெய்த கனமழை காரணமாக. ஈரோடு செல்லும் சாலைகளில் வெள்ள நீர் சூழ்ந்தது. ஆறுகளில் செல்வதைப் போல தண்ணீர் சாலைகளில் பெருக்கெடுத்து ஓடி வருகிறது. இதன் காரணமாக அப்பகுதிகளில் உள்ள கடைகளுக்குள் மழை நீர் புகுந்தது.
- மகாத்மா காந்தியின் பிறந்த நாளை முன்னிட்டு பல்வேறு பகுதிகளில் காந்தியின் சிலைக்கு அரசியல் கட்சியினர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.
- காந்தி ஜெயந்தியை முன்னிட்டு இன்று கிராம சபைக் கூட்டங்கள் நடைபெறுகின்றன. கொரோனா பரவல் காரணமாக ஒன்றரை வருடங்களாக கிராம சபைக் கூட்டங்கள் நடைபெறாமல் இருந்தது குறிப்பிடத்தக்கது.
சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய Abpnadu-இல் செய்திகளைத் (Tamil News) தொடரவும்.
மேலும் காண
Advertisement
தலைப்பு செய்திகள்
தமிழ்நாடு
அரசியல்
மதுரை
கிரிக்கெட்
Advertisement
Advertisement
ட்ரெண்டிங் செய்திகள்
Advertisement
வினய் லால்Columnist
Opinion