மேலும் அறிய

கடை மூடல்... விற்பனை ஜோர்... மகாவீர் ஜெயந்தியிலும் கள்ளச்சந்தையில் மது விற்பனை...

மகாவீர் ஜெயந்தி தினத்திலும் கள்ளச்சந்தையில் மது விற்பனை

கோவை: மகாவீர் ஜெயந்தி தினத்திலும் கள்ளச்சந்தையில் மது விற்பனை – வைரலாகும் வீடியோ

மகாவீர் ஜெயந்தியை முன்னிட்டு தமிழகம் முழுவதும் டாஸ்மாக் கடைகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், கோவையில் தடையை மீறி கள்ளச்சந்தையில் மது விற்பனை நடைபெற்றதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

கோவை மாவட்டத்தில் உள்ள அனைத்து டாஸ்மாக் கடைகள் மற்றும் இணைந்த பார்கள் மூடப்பட்டிருக்க வேண்டும் என மாவட்ட நிர்வாகம் உத்தரவிட்டிருந்தது. விதிகளை மீறி மது விற்பனை செய்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என காவல்துறை சார்பிலும் எச்சரிக்கை விடுக்கப்பட்டது.

புகார் இருந்தும் நடவடிக்கை இல்லை

இந்த நிலையில், கோவை குனியமுத்தூர் – பாலக்காடு சாலையில் உள்ள ஒரு தனியார் பாரில் மறைமுகமாக மது விற்பனை நடைபெற்றதாக தகவல் வெளியாகியுள்ளது. கடைகள் மூடப்பட்டிருந்த போதிலும், அந்த பாரின் உட்புறம் மற்றும் மறைவான இடங்களில் அதிக விலையில் மது பாட்டில்கள் விற்பனை செய்யப்பட்டதாக கூறப்படுகிறது.

புனித தினமான மகாவீர் ஜெயந்தி நாளிலேயே, அதுவும் பிரதான சாலையில் இவ்வாறு சட்டவிரோத விற்பனை நடைபெற்றது பொதுமக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சம்பவத்தை சிலர் செல்போனில் பதிவு செய்த வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது.

இதுகுறித்து பொதுமக்கள் குனியமுத்தூர் காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவித்ததாகவும், ஆனால் நீண்ட நேரமாகியும் காவல்துறையினர் உடனடி நடவடிக்கை எடுக்கவில்லை என குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டுள்ளது.

தற்போது தேர்தல் நடத்தை விதிகள் அமலில் உள்ள சூழலில், மது விற்பனை மற்றும் கடத்தலைத் தடுக்க சிறப்பு கண்காணிப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. இந்நிலையில் இவ்வாறு வெளிப்படையாக கள்ளச்சந்தையில் மது விற்பனை நடந்தது குறிப்பிடத்தக்கதாகும்.

தலைப்பு செய்திகள்

coimbatore power cut: கோவையில் நாளை (06-8-2026) எங்கெல்லாம் கரண்ட் இருக்காது? - உங்கள் பகுதி லிஸ்ட்டில் உள்ளதா? உடனே பாருங்கள்!
coimbatore power cut: கோவையில் நாளை (06-8-2026) எங்கெல்லாம் கரண்ட் இருக்காது? - உங்கள் பகுதி லிஸ்ட்டில் உள்ளதா? உடனே பாருங்கள்!
கோவையில் நாளை (06-08-2026) எத்தனை மணி நேரம் மின் தடை? மின்வாரியம் அறிக்கை
கோவையில் நாளை (06-08-2026) எத்தனை மணி நேரம் மின் தடை? மின்வாரியம் அறிக்கை
கோவையில் நாளை (05-08-2026) எங்கெல்லாம் கரண்ட் கட் ஆகும் - மின்வாரியம் வெளியிட்ட லிஸ்ட்
கோவையில் நாளை (05-08-2026) எங்கெல்லாம் கரண்ட் கட் ஆகும் - மின்வாரியம் வெளியிட்ட லிஸ்ட்
coimbatore power cut: கோவையில் நாளை (04-08-2026) மின்தடை: எந்தெந்த பகுதிகளில் கரண்ட் கட்? லிஸ்ட் இதோ
கோவையில் நாளை (04-08-2026) மின்தடை: எந்தெந்த பகுதிகளில் கரண்ட் கட்? லிஸ்ட் இதோ

வீடியோ

தமிழ்நாட்டுக்குத் தலைகுனிவு? அசிங்கப்படுத்திய DK சிவகுமார் வாயைதிறங்க விஜய்
Cauvery Issue :
Kayalvizhi Alagiri Arrest : மு.க அழகிரி மகள் கைது! சென்னை போலீஸ் அதிரடி.. வெளியான அதிர்ச்சி வீடியோ
இர்பானுக்கு புது சிக்கல் சுகாதாரத்துறை நடவடிக்கை! விரைவில் கைதாகிறாரா?

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Agriculture Budget: இதெல்லாம் ஒரு வேளாண் பட்ஜெட்டா? .. விஜயை விளாசிய மு.க.ஸ்டாலின், வானதி!
Agriculture Budget: இதெல்லாம் ஒரு வேளாண் பட்ஜெட்டா? .. விஜயை விளாசிய மு.க.ஸ்டாலின், வானதி!
பயிர்க்கடன் அறிவிப்பு இல்லை, குறைக்கப்பட்ட நிதி: வேளாண் பட்ஜெட்டில் புதுசா ஒண்ணுமே இல்லை- அன்புமணி
பயிர்க்கடன் அறிவிப்பு இல்லை, குறைக்கப்பட்ட நிதி: வேளாண் பட்ஜெட்டில் புதுசா ஒண்ணுமே இல்லை- அன்புமணி
பொன்முடியை கைது செய்து நேரில் ஆஜர் படுத்துங்க.! நீதிபதி அதிரடி உத்தரவு- என்ன காரணம்.?
பொன்முடியை கைது செய்து நேரில் ஆஜர் படுத்துங்க.! நீதிபதி அதிரடி உத்தரவு- என்ன காரணம்.?
Holiday Special Bus : 2 நாள் தொடர் விடுமுறை.! வெளியூருக்கு செல்ல போறீங்களா.? சிறப்பு பேருந்து அறிவிப்பு- எங்கிருந்து எங்கே.?
2 நாள் தொடர் விடுமுறை.! வெளியூருக்கு செல்ல போறீங்களா.? சிறப்பு பேருந்து அறிவிப்பு- எங்கிருந்து எங்கே.?
CM Vijay: தவெக அரசின் முதல் பட்ஜெட் எதை இலக்காக கொண்டது? முதலமைச்சர் விஜய் பெருமிதம்
தவெக அரசின் முதல் பட்ஜெட் எதை இலக்காக கொண்டது? முதலமைச்சர் விஜய் பெருமிதம்
Kia Offers: அதிரடி தள்ளுபடிகளை அள்ளிக் கொடுத்த கியா; எந்தெந்த கார்களுக்கு எவ்வளவு விலை குறைப்பு?
Kia Offers: அதிரடி தள்ளுபடிகளை அள்ளிக் கொடுத்த கியா; எந்தெந்த கார்களுக்கு எவ்வளவு விலை குறைப்பு?
போலி டிக்கெட்டை கண்டுபிடித்த கார்த்திக்.. நம்பரை ப்ளாக் செய்த சந்திரகலா - கார்த்திகை தீபத்தில் இன்று
போலி டிக்கெட்டை கண்டுபிடித்த கார்த்திக்.. நம்பரை ப்ளாக் செய்த சந்திரகலா - கார்த்திகை தீபத்தில் இன்று
Agriculture Budget : வேளாண் பட்ஜெட்.! விவசாயிகளுக்கான அசத்தலான டாப் 10 அறிவிப்புகள்.? என்னென்ன தெரியுமா.?
வேளாண் பட்ஜெட்.! விவசாயிகளுக்கான அசத்தலான டாப் 10 அறிவிப்புகள்.? என்னென்ன தெரியுமா.?
Embed widget