மேலும் அறிய

கோவையில் பச்சை நிறமாக மாறிய நிலத்தடி நீர் - தொழிற்சாலை கழிவுகளால் வாழ்வாதாரம் பாதிப்பு

நிலத்தடி நீர் நிறம் மாறி இருப்பதால் விவசாயத்திற்கும், கால்நடை வளர்ப்புக்கும் தண்ணீரைப் பயன்படுத்த முடியாத சூழல் இருப்பதாக விவசாயிகள் வேதனை தெரிவிக்கின்றனர்.

கோவை மாவட்டம் சூலூர் அடுத்த கணியூர் கிராமத்தில் நிலத்தடி நீர் பச்சை நிறமாக மாறி உள்ளதால், அதனை பயன்படுத்த இயலாத சூழல் ஏற்பட்டுள்ளது. கோவை மாவட்டம் சூலூர் அருகே உள்ள கணியூர் ஊராட்சியில் சுமார் 20 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் வசித்து வருகின்றனர். தொழிற்சாலைகள் அதிகம் உள்ள இந்த பகுதியில், சில விவசாயிகள் விவசாயத்தை நம்பி இருக்கின்றனர். இந்த நிலையில் கடந்த சில ஆண்டுகளாக கணியூர் மற்றும் அதன் சுற்று வட்டார பகுதிகளில் உள்ள விவசாயக் கிணறுகள் மற்றும் ஆழ்துளை கிணறுகளில் கடந்த சில ஆண்டுகளாக தண்ணீரின் நிறம் பச்சை நிறமாக மாறி துர்நாற்றம் வீசி வருகிறது. நிலத்தடி நீர் நிறம் மாறி இருப்பதால் விவசாயத்திற்கும், கால்நடை வளர்ப்புக்கும் தண்ணீரைப் பயன்படுத்த முடியாத சூழல் இருப்பதாக விவசாயிகள் வேதனை தெரிவிக்கின்றனர். 


கோவையில் பச்சை நிறமாக மாறிய நிலத்தடி நீர் - தொழிற்சாலை கழிவுகளால் வாழ்வாதாரம் பாதிப்பு

இது குறித்து கணியூர் பகுதி விவசாயிகள் கூறுகையில், 10 ஆண்டுகளாக தனியார் தொழிற்சாலை கழிவுகளால் விவசாயம் பாதிக்கப்பட்டுள்ளது. தனியார் தொழிற்சாலையிலிருந்து வெளியேற்றப்படும் ரசாயன கழிவுகள் ஆழ்துளை கிணறுகள் மூலம் நேரடியாக பூமிக்கு அடியில் செலுத்தப்படுகின்றன. இதன் காரணமாக நிலத்தடி நீர் பாதிக்கப்பட்டு, பச்சை நிறமாக மாறிவிட்டது. கிணறு, போர்வேல் மூலம் வரும் தண்ணீர் பச்சை நிறமாகவே வருகிறது. இதனால் விவசாயம் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. விவசாய நிலத்தில் தண்ணீர் பாய்ச்சினால் பயிர்கள் கருகி விடுகிறது.


கோவையில் பச்சை நிறமாக மாறிய நிலத்தடி நீர் - தொழிற்சாலை கழிவுகளால் வாழ்வாதாரம் பாதிப்பு

நிலத்தடி நீரை ஆய்வுக்கு உட்படுத்தியதில் பல்வேறு ரசாயன வேதிப் பொருட்களின் தன்மை இருப்பதும்,  நீரை பயன்படுத்த உகந்தது அல்ல என்பதும் தெரியவந்தது. அந்த தண்ணீரை பயன்படுத்தினால் உடல் உபாதைகள் ஏற்படுகின்றன. கால்நடைகளுக்கும் பயன்படுத்த முடியவில்லை. நாளுக்கு நாள் கிணறுகள் பச்சை நிறமாக மாறுவது அதிகரித்து வருகிறது. பயிர்களுக்கும், கால்நடைகளுக்கும் தண்ணீரை விலை கொடுத்து வாங்கி பயன்படுத்த வேண்டிய நிலை உள்ளது. வாழ்வாதாரம் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. இதனால் ஊரை விட்டு செல்ல வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டுள்ளோம். இது குறித்து துறை சார்ந்த அலுவலர்களுக்கு புகார் அளித்துள்ளதாகவும், இந்த விவகாரத்தில் மாவட்ட நிர்வாகம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்” எனத் தெரிவித்தனர்.


கோவையில் பச்சை நிறமாக மாறிய நிலத்தடி நீர் - தொழிற்சாலை கழிவுகளால் வாழ்வாதாரம் பாதிப்பு

இது குறித்து கணியூர் ஊராட்சி மன்ற தலைவர் வேலுசாமி கூறுகையில், “கணியூர் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் நீரின் தன்மை மாறியுள்ளதாக புகார்கள் வந்தன. இதனைத் தொடர்ந்து கிராம ஊராட்சிக்கு சொந்தமான ஆள்துளை கிணறுகளில் நீர் மாதிரிகள் ஆய்வுக்கு அனுப்பப்பட்டுள்ளது. ஆய்வு முடிவுகளின் அடிப்படையில் மாவட்ட நிர்வாகம் மூலம் உரிய நடவடிக்கை மேற்கொள்ளப்படும்” என அவர் தெரிவித்தார்.

மேலும் செய்திகளை அறிய :ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்

பேஸ்புக் பக்கத்தில் தொடர

ட்விட்டர் பக்கத்தில் தொடர

யூடிபில் வீடியோக்களை காண

மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola

தலைப்பு செய்திகள்

சுற்றுலா சென்ற மாணவருக்கு விபத்து – அணையில் மூழ்கி பலி
சுற்றுலா சென்ற மாணவருக்கு விபத்து – அணையில் மூழ்கி பலி
கோவை மாவட்ட காவல்துறையினர் அதிரடி – சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு 32 ரவுடிகள் கைது!
கோவை மாவட்ட காவல்துறையினர் அதிரடி – சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு 32 ரவுடிகள் கைது!
பொள்ளாச்சி பஸ் ஸ்டாண்டில் ரகளை – பேருந்தை இயக்க முயன்ற பெண்
பொள்ளாச்சி பஸ் ஸ்டாண்டில் ரகளை – பேருந்தை இயக்க முயன்ற பெண்
இது மழையா? பனிக்கட்டியா? - பயிர்களை நாசமாக்கிய வரலாறு காணாத ஆலங்கட்டி மழை
இது மழையா? பனிக்கட்டியா? - பயிர்களை நாசமாக்கிய வரலாறு காணாத ஆலங்கட்டி மழை
West Bengal | Phase 1

152 Constituencies 23RD APRIL 2026 | Thursday

West Bengal | Phase 2

142 Constituencies 29TH APRIL 2026 | Wednesday

Tamil Nadu | Single Phase

234 Constituencies 23RD APRIL 2026 | Thursday

Puducherry | Single Phase

30 Constituencies 9TH APRIL 2026 | Thursday

Kerala | Single Phase

140 Constituencies 9TH APRIL 2026 | Thursday

Assam | Single Phase

126 Constituencies 9TH APRIL 2026 | Thursday

Counting Day 4th MAY 2026 | Monday

ABP Premium

வீடியோ

Annamalai on Vilathikulam Arrest |
Trichy Goverment Hospital | ”குழந்தை உயிர் போயிருச்சே” கதறி அழும் பெற்றோர்! அரசு மருத்துவமனை அவலம்
Parthiban Apology | ”நான் சாதி பார்க்குறவனா? வாய் தவறி பேசிட்டேன்” பார்த்திபன் அந்தர்பல்டி
Chennai Acid Attack | விவாகரத்து கேட்ட மனைவி ஆசிட் வீசிய கணவர் பதறவைக்கும் CCTV காட்சி
Annamalai Walking In Bridge | ’’கார் வேண்டாம்’’ நடுரோட்டில் இறங்கிய அ.மலை நடந்து செல்லும் காட்சிகள்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
TN Election 2026 News LIVE: தமிழ்நாடு யாருக்கு? பரபரக்கும் சட்டமன்ற தேர்தல் களம்- இங்கே உடனடி அப்டேட்
TN Election 2026 News LIVE: தமிழ்நாடு யாருக்கு? பரபரக்கும் சட்டமன்ற தேர்தல் களம்- இங்கே உடனடி அப்டேட்
Hormuz Sea Internet Cable: லட்டுல வெச்சேன்னு நினைச்சியா ட்ரம்ப்பே.! ஈரானிடம் இருக்கும் இன்னொரு ஆயுதம்; இது டேஞ்சரா இருக்கே.!
லட்டுல வெச்சேன்னு நினைச்சியா ட்ரம்ப்பே.! ஈரானிடம் இருக்கும் இன்னொரு ஆயுதம்; இது டேஞ்சரா இருக்கே.!
Crude Oil Price: ஐய்யோ பேச்சே.! போரால் கிடுகிடுவென உயரும் கச்சா எண்ணெய் விலை; அப்போ பெட்ரோல், டீசல்.?
ஐய்யோ பேச்சே.! போரால் கிடுகிடுவென உயரும் கச்சா எண்ணெய் விலை; அப்போ பெட்ரோல், டீசல்.?
NTK Election Manifesto: சீமான் அதிரடி; தமிழ்நாட்டுக்கு 5 தலைநகர்; புதிய இட ஒதுக்கீடு- நாம் தமிழர் தேர்தல் அறிக்கை வெளியீடு
NTK Election Manifesto: சீமான் அதிரடி; தமிழ்நாட்டுக்கு 5 தலைநகர்; புதிய இட ஒதுக்கீடு- நாம் தமிழர் தேர்தல் அறிக்கை வெளியீடு
Ranjana Nachiyaar: பெண்களுக்கு பாதுகாப்பு.. திமுகவில் இணைந்த ரஞ்சனா நாச்சியார்.. ஷாக்கில் தவெக!
Ranjana Nachiyaar: பெண்களுக்கு பாதுகாப்பு.. திமுகவில் இணைந்த ரஞ்சனா நாச்சியார்.. ஷாக்கில் தவெக!
Popular Cars Safety Rating: டாடா சியாரா, மாருதி விக்டோரிஸ், சிட்ராயன் பசால்ட்; எந்த காரில் பாதுகாப்பு அதிகம்.? Crash Test-ல் கலக்கியது எது.?
டாடா சியாரா, மாருதி விக்டோரிஸ், சிட்ராயன் பசால்ட்; எந்த காரில் பாதுகாப்பு அதிகம்.? Crash Test-ல் கலக்கியது எது.?
GOLD AND SILVER RATE TODAY : தங்கம் வாங்க வெயிட்டிங்கா!? இன்று தான் சூப்பர் சான்ஸ்- ஒரே நாளில் 5,360 ரூபாய் சரிவு- விலை நிலவரம் இதோ...
தங்கம் வாங்க வெயிட்டிங்கா!? இன்று தான் சூப்பர் சான்ஸ்- ஒரே நாளில் 5,360 ரூபாய் சரிவு- விலை நிலவரம் இதோ...
Best Resale Value Bikes: பழைய பைக்க விற்கணுமா.? ஸ்ப்ளெண்டர் முதல் ஆக்டிவா வரை; எந்த பைக்குக்கு நல்ல விலை கிடைக்கும்.?
பழைய பைக்க விற்கணுமா.? ஸ்ப்ளெண்டர் முதல் ஆக்டிவா வரை; எந்த பைக்குக்கு நல்ல விலை கிடைக்கும்.?
Embed widget