’புதிய கல்விக் கொள்கை மாணவர்களின் அறிவை வளர்க்கும்’ - துணை வேந்தர்கள் மாநாட்டில் ஆளுநர் ஆர்.என்.ரவி பேச்சு
”புதிய கல்விக் கொள்கை மாணவர்களின் அறிவை வளர்க்கும். வேலைவாய்ப்பு சிறப்பாக அமையும், புதிய கண்டு பிடிப்புகளையும், தன்னம்பிக்கையையும் ஊக்குவிப்பதாக இருக்கும்”
நீலகிரி மாவட்டம் உதகையில் உள்ள ஆளுநர் மாளிகையான ராஜ்பவன் மாளிகையில் பல்கலைக்கழக துணைவேந்தர்கள் மாநாடு துவங்கி நடைபெற்று வருகிறது. தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவி தலைமையில், இந்த மாநாடு 2 நாட்கள் நடைபெறுகிறது. இந்த மாநாட்டில் வளர்ந்து வரும் புதிய உலக ஒழுங்கில் இந்தியாவின் பங்கு, 2047க்குள் இந்தியா உலக தலைவராக இருக்க வேண்டும் உள்ளிட்ட யோசனைகள் மற்றும் செயல் திட்டங்கள் குறித்து இம்மாநாட்டில் விவாதிக்கப்பட உள்ளது. பல்கலைக்கழக துணைவேந்தர்கள் மாநாட்டினை தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என் ரவி துவக்கி வைத்தார். இந்த மாநாட்டில் தமிழக ஆளுநரின் முதன்மை செயலர் ஆனந்த்ராவ் விக்கி பட்டீல், பல்கலைக்கழக மானியக் குழு தலைவர் பேராசிரியர் எம். ஜெகதீஸ்குமார் அரசு மற்றும் தனியார் பல்கலைக்கழக துணை வேந்தர்கள் பங்கேற்றுள்ளனர்.
இதில் சிறப்புரையாற்றிய தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவி, ”2047க்குள் இந்தியா உலக அளவில் தலைவராக விளங்கும். பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் நாடு அனைத்து துறைகளிலும் பரிணாம வளர்ச்சி அடைந்து வருகிறது. இதன் காரணமாக இந்தியா உலக நாடுகளை வழிநடத்தும் அளவிற்கு மாற்றம் ஏற்பட்டு வருகிறது. அனைத்து தரப்பு மக்களின் ஒட்டு மொத்த வளர்ச்சி மூலமாகவே நாடு வளர்ச்சி அடைய முடியும் என்பதை கருத்தில் கொண்டு, சப்கா சாத் சப்கா விகாஸ் என்ற அடிப்படையில் பல்வேறு திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகிறது.
அனைத்து தரப்பு மக்களின் அடிப்படை தேவைக்கு முக்கியத்துவம் அளிக்கும் வகையில் கடந்த 3 ஆண்டுகளில் 800 பில்லியன் மக்களுக்கு இலவச உணவு, தானியம் வழங்கப்பட்டுள்ளது. எந்த ஒரு மனிதனும் நோயினால் உயிரிழக்க கூடாது என்ற நோக்கில் 5 லட்ச ரூபாய் வரை காப்பீடு வழங்கும் ஆயுஷ்மான் பாரத் திட்டம் செயல்படுத்தப்பட்டு வருதோடு, நலவாழ்வு மையங்கள் மூலம் உயர் தர சிகிச்சை அளிக்கப்படுகிறது. ஜன் ஹவுஷாதி மருந்தகங்கள் ஏற்படுத்தப்பட்டு மருந்துகள் குறைந்த விலையில் விற்கப்பட்டு வருகிறது. புதிய கல்விக் கொள்கை மாணவர்களின் அறிவை வளர்க்கும். வேலைவாய்ப்பு சிறப்பாக அமையும், புதிய கண்டு பிடிப்புகளையும், தன்னம்பிக்கையையும் ஊக்குவிப்பதாக இருக்கும்” என அவர் தெரிவித்தார். இந்த இரண்டு நாள் மாநாட்டில் தமிழகத்திலுள்ள பல்கலைக்கழக துணைவேந்தர்கள் மற்றும் பேராசிரியர்கள் கலந்து கொண்டுள்ளனர்.
துணைவேந்தர்களை அரசே நியமிக்கலாம்: பேரவையில் தாக்கல் ஆனது சட்டமசோதா
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்