மேலும் அறிய

’திமுக அரசு நீட் தேர்வை வைத்து அரசியல் செய்து வருகிறது’ - ஜி.கே. வாசன் குற்றச்சாட்டு

"திமுக அரசு நீட் விலக்கு கையெழுத்து என்று துவங்கி அத்தேர்வை ரத்து செய்வதை போல மக்களை குழப்பி, பெற்றோர்களை அலைக்கழித்து வருகிறது"

கோவை இராமநாதபுரம் 80 அடி சாலை பகுதியில் தமாக இளைஞர் அணியின் சார்பாக அக்கட்சியின் பத்தாம் ஆண்டுவிழா, பொங்கல் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா மற்றும் மருத்துவம் படிக்கும் மாணவர்களுக்கு நுழைவு தேர்விற்கான இலவச வினா விடை புத்தகம் வழங்கும் விழா என முப்பெரும் விழா நடைபெற்றது. இதில் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்ட அக்கட்சியின் தலைவர் ஜி.கே. வாசன், மருத்துவ படிப்பிற்கு தயாராகிவரும் மாணவர்களுக்கு இலவச வினாவிடை புத்தகங்களை வழங்கினார். மேலும் இளைஞர் அணியின் சார்பாக ஏற்பாடு செய்யப்பட்டு இருந்த மருத்துவ முகாமையும் பார்வையிட்டார்.  அதை தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த ஜி.கே வாசன், “கோவையில் பல்வேறு இடங்களிலும் பாதாள சாக்கடைக்காக தோண்டப்பட்ட குழிகள் சரிவர மூடப்படாமல் சாலைகள் குண்டும் குழியுமாக காட்சி அளிக்கிறது. விரைந்து சாலை அமைக்கும் பணிகளை மாவட்ட நிர்வாகம் மேற்கொள்ள வேண்டும்.

அவிநாசி சாலையில் நடைபெற்று வரும் மேம்பால பணிகளையும், உக்கடம் ஆத்துப்பாலம் மேம்பால பணிகளையும் விரைந்து முடித்து மக்களின் பயன்பாட்டிற்கு கொண்டு வர வேண்டும். தற்போது கோவை மாவட்டத்தில் அதிகப்படியான போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு வருகிறது. போக்குவரத்து தொழிலாளர்களின் பிரச்சினைகளை தீர்க்க முடியாத அரசாக திமுக அரசு இருந்து வருகிறது. இன்று நடைபெறும் பேச்சுவார்த்தையிலாவது போக்குவரத்து தொழிலாளர்களின் நியாயமான கோரிக்கைகளை ஏற்றுக்கொண்டு, அவர்களும் தமிழர் திருநாளாம் பொங்கல் பண்டிகையை சிறப்பாக கொண்டாட வழிவகை செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும் கடந்த ஆட்சியில் கொண்டு வந்த 7.5% சதவீதம் இட ஒதுக்கீடு என்பது மருத்துவ மாணவர்களின் வரப்பிரசாதமாக இருந்துள்ளது.

திமுக அரசு நீட் விலக்கு கையெழுத்து என்று துவங்கி அத்தேர்வை ரத்து செய்வதை போல மக்களை குழப்பி, பெற்றோர்களை அலைக்கழித்து வருகிறது. தயவு செய்து மாணவர்களிடம் அரசியலை புகுத்த வேண்டாம். தேர்தலுக்காக இதுபோன்ற அரசியலை செய்து மாணவர்களையும், பெற்றோர்களையும் தொடர்ந்து குழப்பி அலைகழித்து வருகிறது. இன்று தமிழக முழுவதும் போதை பொருட்களின் நடமாட்டம் அதிகரித்து காணப்படுகிறது. டாஸ்மார்க் விவகாரத்தில் திமுகவிடம் வெளிப்படைத் தன்மையை எதிர்பார்க்க முடியாது. அதனால் தான் தமிழகத்தில் பல்வேறு போதைப் பொருள் பழக்கம் அதிகரித்து வருகிறது. கிளாம்பாக்கத்தில் எந்த அடிப்படை வசதிகளையும் மேற்கொள்ளாமல் தேர்தல் நெருங்கி வருவதை கணக்கில் கொண்டு, அவசரகதியில் பேருந்து நிலையத்தை திறந்துள்ளார்கள். அதனால் தற்போது மக்கள் அவதி அடைந்து வருகிறார்கள். அவ்வளவு அவசரகதியில் தற்போது கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்தை திறப்பதற்கான அவசியம் என்ன?” எனத் தெரிவித்தார்.

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

யார் அந்த சார்? ‘இனி இதுதான் நடக்கும்’ - நேரடியாக இபிஎஸ்க்கு எச்சரிக்கை விடுத்த அமைச்சர் சேகர் பாபு 
யார் அந்த சார்? ‘இனி இதுதான் நடக்கும்’ - நேரடியாக இபிஎஸ்க்கு எச்சரிக்கை விடுத்த அமைச்சர் சேகர் பாபு 
UDISE Report: அதிரடியாக வகுத்த 6 திட்டங்கள்! ஆர்வமுடன் பள்ளிசெல்லும் குழந்தைகள்- தமிழக அரசு  பெருமிதம்!
UDISE Report: அதிரடியாக வகுத்த 6 திட்டங்கள்! ஆர்வமுடன் பள்ளிசெல்லும் குழந்தைகள்- தமிழக அரசு பெருமிதம்!
எனக்கு யார் வந்திருக்கிறார்கள் என தெரியவில்லை: ரெய்டு குறித்து துரைமுருகன் பேட்டி
எனக்கு யார் வந்திருக்கிறார்கள் என தெரியவில்லை: ரெய்டு குறித்து துரைமுருகன் பேட்டி
ஸ்டாலின் vs இபிஎஸ் vs விஜய் - களமிறங்கிய MASTER MINDS: 2026-ல் அரியணை யாருக்கு?
ஸ்டாலின் vs இபிஎஸ் vs விஜய் - களமிறங்கிய MASTER MINDS: 2026-ல் அரியணை யாருக்கு?
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

ஸ்டாலின் vs இபிஎஸ் vs விஜய் ! களமிறங்கிய MASTER MINDS ! 2026-ல் அரியணை யாருக்கு?FORM-க்கு வரும் அதிமுக : வழிகாட்டும் MASTERMIND : திமுகவுக்கு பக்கா ஸ்கெட்ச்ஹெல்மெட் போட்டா தங்க காசு! NEW YEAR சர்ப்ரைஸ்! துள்ளிக் குதித்த வாகன ஓட்டிகள்Zomato Search in 2024 | ”எனக்கு Girlfriend வேணும்” மிரளவைத்த YOUNGSTERS! ஷாக்கான Zomato |

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
யார் அந்த சார்? ‘இனி இதுதான் நடக்கும்’ - நேரடியாக இபிஎஸ்க்கு எச்சரிக்கை விடுத்த அமைச்சர் சேகர் பாபு 
யார் அந்த சார்? ‘இனி இதுதான் நடக்கும்’ - நேரடியாக இபிஎஸ்க்கு எச்சரிக்கை விடுத்த அமைச்சர் சேகர் பாபு 
UDISE Report: அதிரடியாக வகுத்த 6 திட்டங்கள்! ஆர்வமுடன் பள்ளிசெல்லும் குழந்தைகள்- தமிழக அரசு  பெருமிதம்!
UDISE Report: அதிரடியாக வகுத்த 6 திட்டங்கள்! ஆர்வமுடன் பள்ளிசெல்லும் குழந்தைகள்- தமிழக அரசு பெருமிதம்!
எனக்கு யார் வந்திருக்கிறார்கள் என தெரியவில்லை: ரெய்டு குறித்து துரைமுருகன் பேட்டி
எனக்கு யார் வந்திருக்கிறார்கள் என தெரியவில்லை: ரெய்டு குறித்து துரைமுருகன் பேட்டி
ஸ்டாலின் vs இபிஎஸ் vs விஜய் - களமிறங்கிய MASTER MINDS: 2026-ல் அரியணை யாருக்கு?
ஸ்டாலின் vs இபிஎஸ் vs விஜய் - களமிறங்கிய MASTER MINDS: 2026-ல் அரியணை யாருக்கு?
மக்களே மறந்து போன மதகஜராஜா! 12 வருடங்களுக்கு பிறகு ரிலீஸ் - என்னய்யா சொல்றீங்க?
மக்களே மறந்து போன மதகஜராஜா! 12 வருடங்களுக்கு பிறகு ரிலீஸ் - என்னய்யா சொல்றீங்க?
ரயிலில் மதுரைக்கு பார்சலில் வந்த 240 கிலோ கணேஷ் புகையிலை பறிமுதல்
ரயிலில் மதுரைக்கு பார்சலில் வந்த 240 கிலோ கணேஷ் புகையிலை பறிமுதல்
Rohit Sharma: முடிவுக்கு வந்தது சகாப்தம்? பும்ராவிடம் கேப்டன்சி! பெஞ்சில் உட்கார்ந்த தலைவன் ரோகித்!
Rohit Sharma: முடிவுக்கு வந்தது சகாப்தம்? பும்ராவிடம் கேப்டன்சி! பெஞ்சில் உட்கார்ந்த தலைவன் ரோகித்!
Watch  video: அதே ஆள்.. அதே பந்து..  ஸ்லிப்பில் மீண்டும் அவுட்டான கோலி!
Watch video: அதே ஆள்.. அதே பந்து.. ஸ்லிப்பில் மீண்டும் அவுட்டான கோலி!
Embed widget