மேலும் அறிய

’போருக்கு பின் இலங்கை தமிழர்களின் நிலையை என் புத்தகம் பேசும்’ - முன்னாள் இந்திய துணைத்தூதர் நடராஜன்

பூடான், இலங்கை ஆகிய நாடுகளில் துணைத்தூதராக பணியாற்றிய நடராஜன், வெளிநாடுகளில் பணியாற்றிய தனது அனுபவங்களை கொண்டு, ‘From the Village to the Global stage' என்ற ஆங்கில நூலினை எழுதியுள்ளார்.

இலங்கைக்கான இந்திய துணைத்தூதராக பணியாற்றி ஓய்வு பெற்றவர் நடராஜன். இவர் கோவை வடவள்ளி பகுதியில் வசித்து வருகிறார். இவர் ஏமன், ஸ்பெயின், பிரான்ஸ், சீனா, இந்தோனேசியா, பூடான், இலங்கை உள்ளிட்ட நாடுகளில் உள்ள இந்திய தூதரங்களில் பணி புரிந்துள்ளார். பூடான், இலங்கை ஆகிய நாடுகளில் துணைத்தூதராக பணியாற்றியுள்ளார். இவர் வெளிநாடுகளில் பணியாற்றிய தனது அனுபவங்களை கொண்டு, ‘From the Village to the Global stage' என்ற ஆங்கில நூலினை எழுதியுள்ளார். இந்த நூலின் வெளியீட்டு விழா அண்மையில் கோவையில் நடைபெற்றது.

இலங்கை போர்:

இது தொடர்பாக பேசிய நடராஜன், “இந்தியன் ஃபாரீன் சர்வீசில் 37 வருடங்கள் பல நாடுகளில் பணி புரிந்துள்ளேன். ஓய்வு பெறுவதற்கு 10 ஆண்டுகளுக்கு முன்பு இருந்து பூடான், கண்டி, யாழ்ப்பாணம் ஆகிய இடங்களில் துணைத் தூதராக பணி புரிந்துள்ளேன். யாழ்ப்பாணத்தில் வேலை செய்த போது இலங்கையில் 30 ஆண்டுகள் நடந்த உள்நாட்டு போரால் மக்கள் எவ்வாறு எல்லாம் போரால் பாதிக்கப்பட்டதை கண்ணால் பார்த்தேன். அந்த போரால் மக்களுக்கு பாதிப்புகள் ஏற்பட்டது. பொருளாதார சீரழிவு ஏற்பட்டது.

நிறைய உயிர் பலிகள் நடந்தன. முன்னாள் போராளிகளின் வாழ்க்கை ரொம்ப கஷ்டமானதாக இருக்கிறது. யாழ்ப்பாண தமிழர்கள், கிழக்கு மாகாண தமிழர்கள் போரால் பாதிக்கப்பட்டனர். அவர்கள் போர் காலத்தில் பட்ட கஷ்டங்கள் கேட்க கஷ்டமாக இருந்தது. அவற்றை நம்மால் கனவில் கூட நினைத்து பார்க்க முடியாது. அவர்களின் கஷ்டங்களை ஓரளவிற்காகவது வெளிப்படுத்த வேண்டும் என இந்த புத்தகத்தை எழுதியுள்ளேன். இலங்கை பற்றியும், போர் பற்றியும் நிறைய எழுத்தாளர்கள் எழுதியுள்ளார்கள். ஆனால் போருக்கு பின்னான மக்களின் நிலையை பற்றி எந்த புத்தகத்திலும் வரவில்லை. அதனால் அவற்றைப் பற்றி இந்த புத்தகத்தில் எழுதியுள்ளேன்.

’போருக்கு பின் இலங்கை தமிழர்களின் நிலையை என் புத்தகம் பேசும்’ - முன்னாள் இந்திய துணைத்தூதர் நடராஜன்

யாழ்ப்பாண மக்களை சந்தித்ததால் தான் இந்த புத்தகம் எழுதும் எண்ணம் வந்தது. பல நாடுகளில் வேலை செய்த போது ஏற்பட்ட கசப்பான மற்றும் இனிப்பான அனுபவங்கள் பற்றி எழுதியுள்ளேன். குழந்தை பருவம், குடும்ப சூழல், கல்வி நிலை, அதிகாரியாக பணியாற்றியது உள்ளிட்ட எனது அனுபவங்கள் நூலில் இடம் பெற்றுள்ளன. கஷ்டப்பட்டால் நாம் நினைத்ததை அடைய முடியும் என்பதற்கு நானும் ஒரு உதாரணம். சிவில் சர்வீஸ் படிக்க நினைப்பவர்களுக்கு இந்தப் புத்தகம் பயனுள்ளதாக இருக்கும்.

மலையகத் தமிழர்கள்:

மலையகத் தமிழர்கள் கண்டி சுற்றுவட்டாரத்தில் உள்ளனர். இத்தனை நாடுகளில் பணியாற்றினாலும் கண்டியில் உள்ள மக்களை போன்ற அன்பான மாமனிதர்களை நான் பார்த்ததில்லை. அதேபோல தமிழ் உயிரோடு இருக்க யாழ்ப்பாண தமிழர்கள் முக்கிய காரணம். தமிழ் மீது அவர்களுக்கு அவ்வளவு பற்று உள்ளது. வடக்கு, கிழக்கு மாகாண தமிழர்கள் மத்தியில் இந்திய பற்றியும், இந்திய அமைதிப்படை பற்றியும் கசப்பான அனுபவங்கள் இன்றளவும் இருக்கிறது. அது உண்மையாகவும் இருக்கலாம். பொய்யாகவும் இருக்கலாம். இலங்கை இந்திய ஒப்பந்தப்படி தமிழர்களுக்கு உரிமைகள் கொடுக்க வேண்டும் என சென்ற  அமைதிப்படை தனது வேலையை முழுமையாக செய்யவில்லை. இன்றளவும் ஒப்பந்தம் முழுமையாக அமல்படுத்த முடியவில்லை.

2010 க்கு பிறகு இந்திய அரசு மூலம் 50 ஆயிரம் வீடுகள் இலவசமாக யாழ்ப்பாண தமிழர்களுக்கு கட்டித் தரப்பட்டுள்ளது. போரால் பாதிக்கப்பட்ட பாடசாலைகள் புனரமைப்பு, மருத்துவமனைகள் மேம்பாடு, விவசாயிகள், மாணவர்கள், மீனவர்கள் என நிறைய உதவிகள் செய்துள்ளோம். போர் காரணமாக வடக்கு, கிழக்கு மாகாண மக்களுக்கு அதிக உதவிகளை இந்திய அரசு செய்துள்ளது. ஆனால் மலையகத் தமிழர்களுக்கு இந்திய அரசு அவ்வளாக செய்யவில்லை என்பது எனது சொந்த கருத்து.

மலையகத் தமிழர்களுக்கு இந்தியா என்றால் உயிர். மீனவர்கள் கடல் எல்லையை தாண்டி மீன் பிடிப்பதை, இலங்கையின் மீன்களை இந்திய மீனவர்கள் திருடுவதாக அந்த மக்கள் நினைக்கின்றனர். நான் யாழ்ப்பாணத்தில் துணைத் தூதராக இருந்தபோது,  எல்லை தாண்டி செல்லாதீர்கள் என அறிவுரை செய்ததால் நான் இருந்த வரை தமிழக மீனவர்கள் கைது குறைந்து வந்தது. அவை பற்றி எல்லாம் விரிவாக இந்த புத்தகம் பேசும்” எனத் தெரிவித்தார்.

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

"மோடி அரசிடம் பணிந்த தேர்தல் ஆணையம்" கொதித்தெழுந்த தமிழக முதல்வர் ஸ்டாலின்!
Breaking: தண்டவாளத்தில் விரிசல்; பயணிகளின் உயிரைக் காப்பாற்றிய ரயில் ஓட்டுநர்
Breaking: தண்டவாளத்தில் விரிசல்; பயணிகளின் உயிரைக் காப்பாற்றிய ரயில் ஓட்டுநர்
சம்பவம் இருக்கு! 2025ல் விஜய்யின் மாஸ்டர் ப்ளான் - தளபதியின் வியூகம் இதுதான்!
சம்பவம் இருக்கு! 2025ல் விஜய்யின் மாஸ்டர் ப்ளான் - தளபதியின் வியூகம் இதுதான்!
TRB Raja:
"சேலத்திற்கு மிகப்பெரிய வளர்ச்சி காத்திருக்கிறது" - அமைச்சர் டி.ஆர்.பி. ராஜா கொடுத்த சூப்பர் அப்டேட்
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Rahul Gandhi | ’’ wow..பூரி சூப்பர்!’’அம்மா, பிரியங்காவுடன் DINNER சென்ற ராகுல் | Priyanka GandhiTVK Christmas Celebration | ’’ஐயோ..ஐயோ..கதறும் பெண்கள்’’தவெக விழாவில் பரபரப்பு | Vijay | Bussy AnandTN Local Body Election | உள்ளாட்சி தேர்தல் கேம் ஓவர்! ஸ்டாலினின் பழைய ப்ளான் குமுறலில் கவுன்சிலர்கள்Surmount Logistics Rewards | ஊழியர்களுக்கு பைக், கார் பரிசுகெத்து காட்டும் நிறுவனம்  அட நம்ம சென்னையில பா!

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
"மோடி அரசிடம் பணிந்த தேர்தல் ஆணையம்" கொதித்தெழுந்த தமிழக முதல்வர் ஸ்டாலின்!
Breaking: தண்டவாளத்தில் விரிசல்; பயணிகளின் உயிரைக் காப்பாற்றிய ரயில் ஓட்டுநர்
Breaking: தண்டவாளத்தில் விரிசல்; பயணிகளின் உயிரைக் காப்பாற்றிய ரயில் ஓட்டுநர்
சம்பவம் இருக்கு! 2025ல் விஜய்யின் மாஸ்டர் ப்ளான் - தளபதியின் வியூகம் இதுதான்!
சம்பவம் இருக்கு! 2025ல் விஜய்யின் மாஸ்டர் ப்ளான் - தளபதியின் வியூகம் இதுதான்!
TRB Raja:
"சேலத்திற்கு மிகப்பெரிய வளர்ச்சி காத்திருக்கிறது" - அமைச்சர் டி.ஆர்.பி. ராஜா கொடுத்த சூப்பர் அப்டேட்
Breaking News LIVE: திண்டுக்கல் ஆட்சியர் அலுவலகத்தில் முதியவர் தீக்குளிக்க முயற்சித்ததால்  பரபரப்பு
Breaking News LIVE: திண்டுக்கல் ஆட்சியர் அலுவலகத்தில் முதியவர் தீக்குளிக்க முயற்சித்ததால் பரபரப்பு
NEET Counselling: அப்படி போடு..! மருத்துவ இடங்கள், சிறப்பு நீட் கவுன்சிலிங், இன்று முதல் தேர்வு செய்யலாம்  - உச்சநீதிமன்றம் அதிரடி
NEET Counselling: அப்படி போடு..! மருத்துவ இடங்கள், சிறப்பு நீட் கவுன்சிலிங், இன்று முதல் தேர்வு செய்யலாம் - உச்சநீதிமன்றம் அதிரடி
Erode East : “காங்கிரஸ்க்கு பதில் இந்த முறை திமுக” ஈரோடு கிழக்கில் போட்டி..?
Erode East : “காங்கிரஸ்க்கு பதில் இந்த முறை திமுக” ஈரோடு கிழக்கில் போட்டி..?
Donald Trump: முதல் நாள் முதல் கையெழுத்து ”திருநங்கைகளுக்கு உரிமைகள் இல்லை” -  ட்ரம்ப் அதிரடி அறிவிப்பு
Donald Trump: முதல் நாள் முதல் கையெழுத்து ”திருநங்கைகளுக்கு உரிமைகள் இல்லை” - ட்ரம்ப் அதிரடி அறிவிப்பு
Embed widget