மேலும் அறிய

Kovai: ஆவின் பால் கொள்முதல் விலையை உயர்த்தி வழங்க வேண்டும்.. பாலை கொட்டி ஆர்ப்பாட்டம் செய்த விவசாயிகள்!

ஆவின் நிறுவனத்தால் கொள்முதல் செய்யப்படும் பாலுக்கு, கொள்முதல் விலையை லிட்டருக்கு 7 ரூபாய் உயர்த்தி வழங்க வேண்டும் என்று தமிழ்நாடு பால் உற்பத்தியாளர்கள் நலச்சங்கம் வலியுறுத்தியது.

கோவை அருகே ஆவின் பால் கொள்முதல் விலையை உயர்த்தி வழங்க கோரி விவசாயிகள் பாலை கொட்டி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

தமிழ்நாடு அரசின் கீழ் செயல்படும் ஆவின்  நிறுவனத்தால்  கொள்முதல் செய்யப்படும் பாலுக்கு, கொள்முதல் விலையை லிட்டருக்கு 7 ரூபாய் உயர்த்தி வழங்க வேண்டும் என்று தமிழ்நாடு பால் உற்பத்தியாளர்கள் நலச்சங்கம் வலியுறுத்தியது. அவ்வாறு உயர்த்தாத பட்சத்தில் பால் நிறுத்த போராட்டம் நடத்தப்படும் எனத் தெரிவிக்கப்பட்டு இருந்தது. இதன்படி பால் நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இதனிடையே பால் கொள்முதல் விலையை உயர்த்தித் தராததை கண்டித்து, பால் உற்பத்தியாளர்கள் பல்வேறு இடங்களில் ஆர்ப்பாட்டங்களை மேற்கொண்டு வருகின்றனர். 

தற்போது பசும்பால் 35 ரூபாய்க்கும், எருமைப்பால் 44 ரூபாய்க்கும் கொள்முதல் செய்யப்பட்டு வரும் நிலையில், 10 ரூபாய் உயர்த்தி தர வேண்டுமென கோரிக்கை விடுக்கபட்டது. அதனை தொடர்ந்து 3 ரூபாய் உயர்த்தப்பட்ட நிலையில் மீதமுள்ள 7 ரூபாயையும் உயர்த்த வேண்டுமென கோரி  ஆர்ப்பாட்டங்கள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. மாடுகளுக்கான தீவனம், பாலுக்கான உற்பத்தி செலவை ஒப்பிடும்போது தற்போது கொள்முதல் செய்யப்பட்டு வரும் விலை குறைவு என்பதால் கொள்முதல் விலையை உயர்த்த வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. 

இதன் ஒரு பகுதியாக இன்று கோவை ஆலாந்துறை பகுதியில் உள்ள தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்க அலுவலகம் முன்பு கோவை மாவட்ட பால் உற்பத்தியாளர் கூட்டுறவு சங்கம் மற்றும் கோவை மாவட்ட விவசாயிகள் சங்கம் இணைந்து கண்டன ஆர்ப்பாட்டம் மேற்கொண்டனர். இந்த ஆர்ப்பாட்டத்தில் பால் விலையை உயர்த்த வேண்டும் என்ற கோரிக்கை மட்டுமல்லாமல் மாட்டு தீவனம் மானியம் வழங்கிட வேண்டும், ஊக்கத்தொகை வழங்கிட வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளும் வலியுறுத்தப்பட்டது. அவர்களது இந்த கோரிக்கையை வலியுறுத்தி கண்டன பதாகைகளை ஏந்தி கண்டன முழக்கங்களை எழுப்பி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள் பாலை தரையில் கொட்டி அவர்களது கண்டனத்தை பதிவு செய்தனர். இதில் சுமார் 50க்கும் மேற்பட்ட பால் உற்பத்தியாளர்கள் விவசாயிகள் கலந்து கொண்டனர்.

மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்

ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்

பேஸ்புக் பக்கத்தில் தொடர

ட்விட்டர் பக்கத்தில் தொடர

யூடியூடிபில் வீடியோக்களை காண

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

சென்னைக்கு ரெட் அலர்ட்  வாபஸ்: வானிலை மையம் சொன்ன முக்கிய அறிவிப்பு
சென்னைக்கு ரெட் அலர்ட் வாபஸ்: வானிலை மையம் சொன்ன முக்கிய அறிவிப்பு
திக் திக்.. அவசரமாக தரையிறக்கப்பட்ட ஹெலிகாப்டர்.. தலைமை தேர்தல் ஆணையருக்கு என்னாச்சு?
திக் திக்.. அவசரமாக தரையிறக்கப்பட்ட ஹெலிகாப்டர்.. தலைமை தேர்தல் ஆணையருக்கு என்னாச்சு?
சென்னையில் ஏன் மழை குறைந்தது? காற்றழுத்த தாழ்வு மண்டலம் எங்கே.? வானிலை மையத்தின் புது அப்டேட்.!
சென்னையில் ஏன் மழை குறைந்தது? காற்றழுத்த தாழ்வு மண்டலம் எங்கே.? வானிலை மையத்தின் புது அப்டேட்.!
ஓடிடி சேவைகளுக்கு நெறிமுறைகளை ஏற்படுத்த வேண்டும் - மத்திய அமைச்சர் ஜோதிராதித்ய சிந்தியா
ஓடிடி சேவைகளுக்கு நெறிமுறைகளை ஏற்படுத்த வேண்டும் - மத்திய அமைச்சர் ஜோதிராதித்ய சிந்தியா
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

INDIA Vs BJP | பலத்தை காட்டுவாரா தாக்கரே?அடித்து ஆடும் I.ND.I.A! மகாராஷ்டிராவில் வெற்றி யாருக்கு?Priyanka Gandhi Wayanad : தெற்கில்  பிரியங்கா ராகுலின் மாஸ்டர் ப்ளான் கெத்து காட்டும் காங்கிரஸ்Woman Crying : Durai dhayanidhi : சீனுக்கு வந்த துரை தயாநிதி மனைவி! சர்ச்சைகளுக்கு ENDCARD..

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
சென்னைக்கு ரெட் அலர்ட்  வாபஸ்: வானிலை மையம் சொன்ன முக்கிய அறிவிப்பு
சென்னைக்கு ரெட் அலர்ட் வாபஸ்: வானிலை மையம் சொன்ன முக்கிய அறிவிப்பு
திக் திக்.. அவசரமாக தரையிறக்கப்பட்ட ஹெலிகாப்டர்.. தலைமை தேர்தல் ஆணையருக்கு என்னாச்சு?
திக் திக்.. அவசரமாக தரையிறக்கப்பட்ட ஹெலிகாப்டர்.. தலைமை தேர்தல் ஆணையருக்கு என்னாச்சு?
சென்னையில் ஏன் மழை குறைந்தது? காற்றழுத்த தாழ்வு மண்டலம் எங்கே.? வானிலை மையத்தின் புது அப்டேட்.!
சென்னையில் ஏன் மழை குறைந்தது? காற்றழுத்த தாழ்வு மண்டலம் எங்கே.? வானிலை மையத்தின் புது அப்டேட்.!
ஓடிடி சேவைகளுக்கு நெறிமுறைகளை ஏற்படுத்த வேண்டும் - மத்திய அமைச்சர் ஜோதிராதித்ய சிந்தியா
ஓடிடி சேவைகளுக்கு நெறிமுறைகளை ஏற்படுத்த வேண்டும் - மத்திய அமைச்சர் ஜோதிராதித்ய சிந்தியா
புயலாக மாற வாய்ப்பில்லை.. ரெட் அலர்ட் ஏன்? வானிலை மையம் தந்த விளக்கம்!
புயலாக மாற வாய்ப்பில்லை.. ரெட் அலர்ட் ஏன்? வானிலை மையம் தந்த விளக்கம்!
IND vs NZ 1st Test:இந்தியா - நியூசிலாந்து  ஆட்டம் ரத்து;‌ இரண்டாம் நாள் ஆட்டத்தில் மாற்றம்! என்ன?
IND vs NZ 1st Test:இந்தியா - நியூசிலாந்து ஆட்டம் ரத்து;‌ இரண்டாம் நாள் ஆட்டத்தில் மாற்றம்! என்ன?
அரசும் ஆளுநரும் புது காதலர்கள் போல உள்ளனர்- அதிமுக முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ
அரசும் ஆளுநரும் புது காதலர்கள் போல உள்ளனர்- அதிமுக முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ
Amaran Audio launch: சிவகார்த்திகேயனின் அமரன் படத்தின் இசை வெளியீட்டு தேதி அறிவிப்பு
Amaran Audio launch: சிவகார்த்திகேயனின் அமரன் படத்தின் இசை வெளியீட்டு தேதி அறிவிப்பு
Embed widget