மேலும் அறிய

'பேரவையில் நான் பேசுவதை மட்டும் தூக்கிடுறாங்க’ - கொந்தளிக்கும் எடப்பாடி பழனிச்சாமி

"திமுக எப்போதெல்லாம் ஆட்சிக்கு வருகிறதோ அப்போதெல்லாம் மின் தட்டுப்பாடு ஏற்படும். இவர்களது நிர்வாக திறமை இல்லாத காரணத்தினால் தான் தமிழகத்தில் மின்வெட்டு வந்துள்ளது"

கோவை விமான நிலையத்தில் எதிர்க்கட்சித் தலைவரும், அதிமுக பொதுச்செயலாளருமான எடப்பாடி பழனிச்சாமி செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர், அனைவருக்கும் தமிழ்ப்புத்தாண்டு நல்வாழ்த்துக்களை தெரிவித்துக் கொண்டார். பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை திமுக சொத்து பட்டியல் வெளியிடுவது குறித்த கேள்விக்கு, அது அண்ணாமலை வெளியிட்ட பிறகு தான் தெரியும்  என பதிலளித்தார்.

தொடர்ந்து பேசிய அவர், “நாங்கள் சட்டமன்றத்தில் பேசுவது எல்லாம் நீக்கி விடுகிறார்கள். அரசாங்கத்திற்கு எதிராக, நடக்கின்ற சம்பவங்களை நாங்கள் சட்டமன்றத்தில் எடுத்து வைத்து பேசினால் அதனை நீக்கி விடுகிறார்கள். சட்டம் ஒழுங்கு சரியில்லை என தொடர்ந்து குரல் கொடுத்து வருகிறோம்.

தமிழகத்தில் திமுக ஆட்சி வந்த பிறகு சட்டம் ஒழுங்கு அடியோடு சீர்கெட்டு விட்டது. எங்கு பார்த்தாலும் கொலை, கொள்ளை, பாலியல் வன்புணர்வு போன்றவை தொடர்ந்து நடைபெறுகிறது. விருதாச்சலம் பகுதியில் பள்ளி சிறுமிக்கு நடைபெற்ற, பாலியல் வன்கொடுமை குறித்து நாங்கள் தெரியப்படுத்தியப்படுத்தினோம். ஆனால் முதலமைச்சர் சட்டமன்றத்தில் தகவல் கிடைத்ததும் வழக்குப் பதிவு செய்யப்பட்டு விட்டதாக தெரிவிக்கிறார். ஆனால் தகவல் கிடைத்ததும் முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யப்படவில்லை.  குற்றம் சாட்டப்பட்டவர் 30 வது வார்டு திமுக கவுன்சிலராக இருப்பதால், அவரை தப்பிக்க வைக்க முயற்சி செய்தார்கள். ஆனால் அதிமுகவினர் பொதுமக்கள் அனைவரும் ஒன்று சேர்ந்ததால் அவர் மீது வேறு வழியில்லாமல் வழக்குப்பதிவு செய்துள்ளார்கள்.

சட்டப்பேரவையில் எனக்கு முன்னால் பேசியதும், எனக்கு பிறகு பேசியதும் உள்ளது. ஆனால் நான் பேசியதை நீக்கி விட்டார்கள். அங்கு ஜனநாயகம் கிடையாது. திமுகவினர் ஜனநாயகத்தை மதித்தால் தான் மக்கள் இவர்களை மதிப்பார்கள். இவர்கள் ஜனநாயகத்தை மதித்தால் தானே மற்றவர்களை பற்றி பேச முடியும். இவர்களுக்கு அந்த தகுதி இல்லை. தமிழகத்தில் நாங்கள் தடையில்லா மின்சாரம் கொடுத்து வந்தோம். விவசாயிகளுக்கு மும்முனை மின்சார இணைப்பும் வழங்கினோம். திமுக எப்போதெல்லாம் ஆட்சிக்கு வருகிறதோ அப்போதெல்லாம் மின் தட்டுப்பாடு ஏற்படும். இவர்களது நிர்வாக திறமை இல்லாத காரணத்தினால் தான் தமிழகத்தில் மின்வெட்டு வந்துள்ளது. கொரோனா தடுப்பு நடவடிக்கைகளில் எவ்வித முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளும் எடுக்கப்படவில்லை.

தமிழ்நாடு முழுவதும் ஒருவரே பார்களை எடுத்துக் கொண்டுள்ளார். அது யார் என அனைவருக்கும் தெரியும். அதிமுக ஆட்சி காலத்தில் குறிப்பிட்ட நேரத்தில் தான் மது விற்பனை நடைபெற்றது. அதனை மீறி செயல்பட்டால் காவல் துறை நடவடிக்கை எடுக்கும். ஆனால் தற்பொழுது 24 மணி நேரமும் மதுக்கடைகள் செயல்பட்டு வருகிறது. தற்போது காவலர் புகார் அளித்தும் கூட வழக்கு பதிவு செய்யப்படாமல் போராடும் போது, மக்களுக்கு எப்படி காவல்துறையில் நியாயம் கிடைக்கும்? எனவே தமிழகத்தில் ஜனநாயகம் இறந்து விட்டது. பெண் குழந்தைகளுக்கு பாதுகாப்பு கிடையாது. எங்கு பார்த்தாலும் போதைப் பொருள் விற்பனை செய்யப்படுகிறது” எனத் தெரிவித்தார்.

மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்

ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்

பேஸ்புக் பக்கத்தில் தொடர

ட்விட்டர் பக்கத்தில் தொடர

யூடியூபில் வீடியோக்களை காண

தலைப்பு செய்திகள்

coimbatore power cut: கோவையில் நாளை (20-8-2026) எங்கெல்லாம் மின்சாரம் இருக்காது? - மின்வாரியம் வெளியிட்ட லிஸ்ட்
கோவையில் நாளை (20-8-2026) எங்கெல்லாம் மின்சாரம் இருக்காது? - மின்வாரியம் வெளியிட்ட லிஸ்ட்
coimbatore power cut: கோவையில் நாளை (19-8-2026) எங்கெல்லாம் மின்சாரம் இருக்காது? - மின்வாரியம் வெளியிட்ட லிஸ்ட்
கோவையில் நாளை (19-8-2026) எங்கெல்லாம் மின்சாரம் இருக்காது? - மின்வாரியம் வெளியிட்ட லிஸ்ட்
coimbatore power cut: கோவையில் நாளை (18-8-2026) எங்கெல்லாம் மின்சாரம் இருக்காது? - மின்வாரியம் வெளியிட்ட லிஸ்ட்
coimbatore power cut: கோவையில் நாளை (18-8-2026) எங்கெல்லாம் மின்சாரம் இருக்காது? - மின்வாரியம் வெளியிட்ட லிஸ்ட்
coimbatore power cut: கோவையில் நாளை (14-8-2026) எங்கெல்லாம் கரண்ட் கட்? - மின்வாரியம் வெளியிட்ட லிஸ்ட்
கோவையில் நாளை (14-8-2026) எங்கெல்லாம் கரண்ட் கட்? - மின்வாரியம் வெளியிட்ட லிஸ்ட்

வீடியோ

SP Velumani On EPS : இபிஎஸ் எடுத்த தவறான முடிவுகள்? சசிகலா,டிடிவியை சேர்க்கணும்!அதிமுக சீனியர்கள் செக்
Kallakurichi Viral Video : ”என் கண்முன்னே வெட்டுறாங்களே! 10 ஆண்டு உழைப்பு போச்சே” கதறி அழுத தாய்
Vijay Sangeetha Divorce : விவாகரத்து வழக்கு வாபஸ்! சங்கீதா கொடுத்த திடீர் டிவிஸ்ட் காரணம் என்ன?
CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
மாநாட்டில் மாஸ் காட்டிய CM விஜய்!.! அமித்ஷா முன் நடந்தது என்ன? திரும்பிப் பார்த்த தென்மாநில முதல்வர்கள்
மாநாட்டில் மாஸ் காட்டிய CM விஜய்!.! அமித்ஷா முன் நடந்தது என்ன? திரும்பிப் பார்த்த தென்மாநில முதல்வர்கள்
190 எம்எல்ஏக்களிடம் ஏற்கெனவே கார்; ஊதாரித்தனம்- நெல் கிடங்குக்கு காசு இல்லை, இதுக்கு இருக்கா? சீமான் சரமாரி கேள்வி
190 எம்எல்ஏக்களிடம் ஏற்கெனவே கார்; ஊதாரித்தனம்- நெல் கிடங்குக்கு காசு இல்லை, இதுக்கு இருக்கா? சீமான் சரமாரி கேள்வி
மாஸ் காட்டும் ஐஐடி மெட்ராஸ்! பொறியியல் தாண்டி மருத்துவக் கல்வி- ஏன்? என்ன பயன்?
மாஸ் காட்டும் ஐஐடி மெட்ராஸ்! பொறியியல் தாண்டி மருத்துவக் கல்வி- ஏன்? என்ன பயன்?
ஸ்விஃப்ட், பலேனோவை முந்தி முதலிடம்; ரூ.4.99 லட்சம் மதிப்பில் கார்- ஹேட்ச்பேக் கார்களின் வரலாற்று கம்பேக்!
ஸ்விஃப்ட், பலேனோவை முந்தி முதலிடம்; ரூ.4.99 லட்சம் மதிப்பில் கார்- ஹேட்ச்பேக் கார்களின் வரலாற்று கம்பேக்!
Manav Suthar: இந்திய சுழலின் எதிர்காலம்.. மானத்தை காப்பாத்தப்போகும் மானவ் சுதர் - யார்?
Manav Suthar: இந்திய சுழலின் எதிர்காலம்.. மானத்தை காப்பாத்தப்போகும் மானவ் சுதர் - யார்?
Minister Vanniyarasu: ”திமுகவினர் பொறாமையில் பேசுகின்றனர்” கல்வி நிதி விவகாரம் - அமைச்சர் வன்னியரசு பதிலடி
”திமுகவினர் பொறாமையில் பேசுகின்றனர்” கல்வி நிதி விவகாரம் - அமைச்சர் வன்னியரசு பதிலடி
Upcoming Hyundai Cars: வரப்போது 5 ஸ்ட்ராங் ஹைப்ட்ரிட் கார்.. ஹுண்டாய் இறக்கப்போகும் அந்த பஞ்ச பாண்டவர்கள் யார்? யார்?
Upcoming Hyundai Cars: வரப்போது 5 ஸ்ட்ராங் ஹைப்ட்ரிட் கார்.. ஹுண்டாய் இறக்கப்போகும் அந்த பஞ்ச பாண்டவர்கள் யார்? யார்?
Gummidipoondi Gudur Train: தமிழ்நாட்டில் புது ரயில் வழித்தடம் - 90KM நீளம், ரூ.2,229 கோடி ப்ராஜெக்ட் - முழு விவரம்
தமிழ்நாட்டில் புது ரயில் வழித்தடம் - 90KM நீளம், ரூ.2,229 கோடி ப்ராஜெக்ட் - வேலைவாய்ப்பு, பலன் விவரங்கள்
Embed widget