மேலும் அறிய

மாஞ்சோலை எஸ்டேட்டை ‘டேன் டீ’ எடுத்து நடத்த வேண்டும் - டாக்டர் கிருஷ்ணசாமி கோரிக்கை

மாஞ்சோலை தேயிலை தோட்ட தொழிலாளர்களை விருப்ப ஓய்வு என்ற பெயரில் கட்டாயமாக கையெழுத்து வாங்கி வீட்டிற்கு அனுப்ப நடவடிக்கைகள் எடுத்து வருகின்றனர்.

கோவை குனியமுத்தூர் பகுதியில் உள்ள இல்லத்தில் புதிய தமிழகம் கட்சி தலைவர் டாக்டர் கிருஷ்ணசாமி செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது பேசிய அவர், “தமிழ்நாட்டில் நீலகிரி, நெல்லை, திண்டுக்கல் உட்பட 5 மாவட்டங்களில் தேயிலை தோட்டங்கள், காபி தோட்டங்கள் உருவாக்கப்பட்டு 10 லட்சம் தொழிலாளர்கள் வேலையில்  இருக்கின்றனர். நெல்லை களக்காடு முண்டந்துறை வனப்பகுதியில் மாஞ்சோலை தேயிலை தோட்டங்கள் ஆங்கிலேயர் காலத்தில் உருவாக்கபட்டவை. இவை 99 வருட குத்தகைக்காக பிபிடிசி என்ற நிறுவனத்திற்கு கொடுக்கப்பட்டது. குத்தகை காலம் முடிவடைய உள்ள நிலையில், மாஞ்சோலை தேயிலை தோட்ட தொழிலாளர்களை விருப்ப ஓய்வு என்ற பெயரில் கட்டாயமாக கையெழுத்து வாங்கி வீட்டிற்கு அனுப்ப நடவடிக்கைகள் எடுத்து வருகின்றனர். இன்றுடன் வேலையை நிறுத்தி விட்டனர். 45 நாட்களுக்குள் இருப்பிடத்தை காலி செய்ய வலியுறுத்துகின்றனர்.

டேன் டீ எடுக்க வேண்டும்

8700 ஏக்கர் நிலம் வனத்துறைக்கு சொந்தமான நிலம். இந்த நிர்வாகத்திற்கான ஒப்பந்தம் முடிவடைகின்றதே தவிர, இதை காரணம் காட்டி வெளியேற்றுவது என்பது சரியல்ல. 20 முதல் 30 வருடம் பணிபுரிந்த தொழிலாளர் களுக்கு ஒரு லட்சம் தருவதாக கூறி விட்டு இப்போது 25 சதவீதம் மட்டுமே முதலில் கொடுப்பதாக சொல்லி மோசடி செய்து இருக்கின்றனர். தமிழகத்தை சார்ந்த இலங்கை மலையகத் தமிழர்கள் திரும்பி வந்த போது, அவர்களுக்கு வேலை வாய்ப்பிற்காக தேயிலை தோட்டங்கள் ஏற்படுத்தபட்டது. நான்கைந்து தலைமுறையாக இருப்பவர்களை வெளியேற சொல்வது என்பது சரியல்ல. முதல்வர் இந்த பிரச்சினையில் நேரடியாக தலையிட்டு தொழிலாளர் வாழ்வை காப்பாற்ற நடவடிக்கைகள் எடுக்க வேண்டும். குத்தகை முடிந்தால் அதை டேன்டீ நிர்வாகம் எடுத்து நடத்த வேண்டும். சட்டமன்றத்தில் இது குறித்து கவனத்திற்கு கொண்டு சென்று  தீர்வை கொடுக்க வேண்டும். இது தொடர்பாக எதிர் கட்சி தலைவர் எடப்பாடி பழனிச்சாமிக்கு கடிதம் கொடுத்துள்ளேன். இதில் அரசியல் பாராது அனைத்து கட்சிகளும் ஒருங்கிணைந்து குரல் கொடுக்க வேண்டும்.

அனுமதிக்க கூடாது

மாஞ்சோலை தேயிலை தோட்டங்கள் 8700 நிலத்தை ஹெச்டிஎப்சி வங்கியில் அடகு வைத்து கடன் வாங்கி இருக்கின்றனர். அதில் பல அத்துமீறல்கள் நடந்து இருக்கின்றது. வேறு ஏதோ தவறான செயலில் ஈடுபட சதி இருப்பதாகவே கருதுகின்றேன். 2015 ல் கடன் வாங்கி இருக்கின்றனர்.அரசு இவர்கள் மீது நடவடிக்கைகள் எடுக்க வேண்டும். தாசில்தார் எப்படி சர்டிபிகேட் கொடுத்தார்? அரசின் நிலத்தை எப்படி அடகு வைத்தனர்? சட்ட சிக்கலை ஏற்படுத்தி தொழிலாளர்களை வெளியேற்ற பார்க்கின்றனர். தமிழக அரசு மீண்டும் தேயிலை தோட்டங்களை அழிப்பற்கு அனுமதிக்க கூடாது” எனத் தெரிவித்தார்.

தலைப்பு செய்திகள்

coimbatore power cut: கோவையில் நாளை (18-8-2026) எங்கெல்லாம் மின்சாரம் இருக்காது? - மின்வாரியம் வெளியிட்ட லிஸ்ட்
coimbatore power cut: கோவையில் நாளை (18-8-2026) எங்கெல்லாம் மின்சாரம் இருக்காது? - மின்வாரியம் வெளியிட்ட லிஸ்ட்
coimbatore power cut: கோவையில் நாளை (14-8-2026) எங்கெல்லாம் கரண்ட் கட்? - மின்வாரியம் வெளியிட்ட லிஸ்ட்
கோவையில் நாளை (14-8-2026) எங்கெல்லாம் கரண்ட் கட்? - மின்வாரியம் வெளியிட்ட லிஸ்ட்
coimbatore power cut: கோவையில் நாளை (13-8-2026) எங்கெல்லாம் கரண்ட் இருக்காது? - மின்வாரியம் வெளியிட்ட லிஸ்ட்
கோவையில் நாளை (13-8-2026) எங்கெல்லாம் கரண்ட் இருக்காது? - மின்வாரியம் வெளியிட்ட லிஸ்ட்
கோவையில் பயங்கரம்: கல்லூரி மாணவர் அடித்துக் கொலை - பழிக்குப்பழியாக நடந்த கொடூரம்!
கோவையில் பயங்கரம்: கல்லூரி மாணவர் அடித்துக் கொலை - பழிக்குப்பழியாக நடந்த கொடூரம்!

வீடியோ

SP Velumani On EPS : இபிஎஸ் எடுத்த தவறான முடிவுகள்? சசிகலா,டிடிவியை சேர்க்கணும்!அதிமுக சீனியர்கள் செக்
Kallakurichi Viral Video : ”என் கண்முன்னே வெட்டுறாங்களே! 10 ஆண்டு உழைப்பு போச்சே” கதறி அழுத தாய்
Vijay Sangeetha Divorce : விவாகரத்து வழக்கு வாபஸ்! சங்கீதா கொடுத்த திடீர் டிவிஸ்ட் காரணம் என்ன?
CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Trump Threatens Oman: “குறுக்கால வந்தா குண்டுமழையால சின்னாபின்னமாக்குவோம்
“குறுக்கால வந்தா குண்டுமழையால சின்னாபின்னமாக்குவோம்"; ஓமனுக்கு ட்ரம்ப் எச்சரிக்கை; எதற்காக.?
US Iran Nuclear Attack: ஈரான் மீது ட்ரம்ப் அணு ஆயுத தாக்குதலா.? அமெரிக்க முன்னாள் எம்.பி-யின் குற்றச்சாட்டால் பரபரப்பு
ஈரான் மீது ட்ரம்ப் அணு ஆயுத தாக்குதலா.? அமெரிக்க முன்னாள் எம்.பி-யின் குற்றச்சாட்டால் பரபரப்பு
TN GOVT Announcements : 20 லட்சம் பேருக்கு வீட்டுமனைப்பட்டா.! சட்டமன்றத்தில் கொத்து கொத்தாக அறிவிப்பு- வருவாய்துறை அசத்தல்
20 லட்சம் பேருக்கு வீட்டுமனைப்பட்டா.! சட்டமன்றத்தில் கொத்து கொத்தாக அறிவிப்பு- வருவாய்துறை அசத்தல்
தமிழகத்தில் போதைப்பொருள் கோரத்தாண்டவம்: 24 மணி நேரத்தில் 5 படுகொலைகள்!- புது ஆட்சியிலும் இதே நிலையா?அன்புமணி
தமிழகத்தில் போதைப்பொருள் கோரத்தாண்டவம்: 24 மணி நேரத்தில் 5 படுகொலைகள்!- புது ஆட்சியிலும் இதே நிலையா?அன்புமணி
Crop Loan Waivers : தவெகவின் 100 நாள் ஆட்சியில் விவசாயிகளுக்கு ஜாக்பாட்.! 110 விதியில் CM விஜய் அசத்தல் அறிவிப்பு
தவெகவின் 100 நாள் ஆட்சியில் விவசாயிகளுக்கு ஜாக்பாட்.! 110 விதியில் CM விஜய் அசத்தல் அறிவிப்பு
TVK vs DMK:
TVK vs DMK: "உதயநிதிக்கு கண்ணியத்தை கற்றுக்கொடுங்கள்.." ஓ.பன்னீர்செல்வத்துக்கு அமைச்சர் ரமேஷ் அட்வைஸ்
வெட்கக்கேடு, மோசம்; திருப்புகழ் குழு அறிக்கையை தமிழக அரசு ஒளித்து வைத்திருப்பது ஏன்? பாமக கேள்வி
வெட்கக்கேடு, மோசம்; திருப்புகழ் குழு அறிக்கையை தமிழக அரசு ஒளித்து வைத்திருப்பது ஏன்? பாமக கேள்வி
Tesla Model Y Real World Range: டெஸ்லா மாடல் Y உண்மையிலேயே 500 கிமீ ரேஞ்ச் தருமா.? சோதனையில் தேறியதா.? சொதப்பியதா.? ரிசல்ட் இதோ
டெஸ்லா மாடல் Y உண்மையிலேயே 500 கிமீ ரேஞ்ச் தருமா.? சோதனையில் தேறியதா.? சொதப்பியதா.? ரிசல்ட் இதோ
Embed widget