மேலும் அறிய

கோவையில் 270 பேருக்கு கொரோனா தொற்று ; 8 பேர் உயிரிழப்பு..!

தடுப்பூசி பற்றாக்குறை காரணமாக கோவை மாநகராட்சியில் நாளை பொதுமக்களுக்கு தடுப்பூசி செலுத்தப்படாது என மாநகராட்சி நிர்வாகம் தெரிவித்துள்ளது.

கோவை மாவட்டத்தில் கொரோனா பாதிப்புகள் குறைந்து வருகிறது. இருப்பினும் மற்ற மாவட்டங்களை காட்டிலும் கூடுதலாக தொற்று பாதிப்புகள் ஏற்பட்டு வருகிறது. இதன் காரணமாக  தமிழ்நாட்டில் தினசரி கொரோனா பாதிப்புகளில் தொடர்ந்து முதலிடத்தில் நீடித்து வருகிறது. கோவையில் இன்று 270 பேருக்கு கொரோனா தொற்று பாதிப்புகள் உறுதியாகியுள்ளது. இதனால் கோவை மாவட்டத்தில் இதுவரை கொரோனா தொற்று பாதித்தவர்களின் எண்ணிக்கை இரண்டு இலட்சத்து 25 ஆயிரத்து 889 ஆக உயர்ந்துள்ளது. மருத்துவமனைகள் மற்றும் சிகிச்சை மையங்களில்  3629 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். நாள்தோறும் சிகிச்சை பெற்று வருபவர்களின் எண்ணிக்கையும் படிப்படியாக குறைந்து வருகிறது. இன்று கொரோனா தொற்றில் இருந்து 414 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். இதனால்  குணமடைந்து வீடு திரும்பியவர்களின் எண்ணிக்கை 2 இலட்சத்து 20 ஆயிரத்து 144 பேராக உயர்ந்துள்ளது. கொரோனா தொற்றால் இன்று 8 பேர் உயிரிழந்தார். கோவை மாவட்டத்தில் இதுவரை உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 2116 ஆக உள்ளது. கோவையில் கொரோனா தொற்று விகிதம் 2.9 ஆக குறைந்துள்ளது.

தடுப்பூசி பற்றாக்குறை காரணமாக கோவை மாநகராட்சியில் நாளை பொதுமக்களுக்கு தடுப்பூசி செலுத்தப்படாது என மாநகராட்சி நிர்வாகம் தெரிவித்துள்ளது.

ஈரோடு,  திருப்பூர், நீலகிரி நிலவரம்

ஈரோடு மாவட்டம் தினசரி கொரோனா பாதிப்பில் தொடர்ந்து இரண்டாவது இடத்தில் நீடித்து வருகிறது. ஈரோட்டில் இன்று 175 பேருக்கு கொரோனா தொற்று பாதிப்புகள் ஏற்பட்டுள்ளன. 193 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்னர். மருத்துவமனைகள் மற்றும் சிகிச்சை மையங்களில் 2641 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். தொற்று பாதிப்பால் உயிரிழப்புகள் ஏற்படவில்லை. ஈரோடு மாவட்டத்தின் மொத்த கொரோனா பாதிப்புகள் 91472 ஆக உயர்ந்துள்ளது. குணமடைந்தவர்கள் எண்ணிக்கை 88215 ஆகவும், மொத்த உயிரிழப்புகள் 616 ஆகவும் உயர்ந்துள்ளது. ஈரோட்டில் தொற்று விகிதம் 2.1 ஆக குறைந்துள்ளது.

திருப்பூர் மாவட்டத்தில் இன்று 146 பேருக்கு இன்று கொரோனா பாதிப்புகள் ஏற்பட்டுள்ளன. 164 பேர் குணமடைந்துள்ள நிலையில், 1557 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். கொரோனா பாதிப்பால் இன்று 2 பேர் உயிரிழந்தனர். திருப்பூரின் மொத்த கொரோனா பாதிப்புகள் 86044 ஆகவும், குணமடைந்தவர்கள் எண்ணிக்கை 83679 ஆகவும் உள்ளது. உயிரிழப்புகளின் எண்ணிக்கை 808 ஆகவும் உள்ளது. திருப்பூரில் கொரோனா தொற்று விகிதம் 3.5 சதவீதமாக உள்ளது.

நீலகிரி மாவட்டத்தில் இன்று 68 பேருக்கு கொரோனா தொற்று பாதிப்புகள் ஏற்பட்டுள்ளன. 56 பேர் குணமடைந்துள்ள நிலையில், 898 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். தொற்றில் இருந்து குணமடைபவர்களின் எண்ணிக்கை குறைவாக இருப்பதால், சிகிச்சை பெறுவோரின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. தொற்று பாதிப்பால் இன்று உயிரிழப்புகள் ஏற்படவில்லை. நீலகிரி மாவட்டத்தின் மொத்த பாதிப்புகள் 29625 ஆகவும், குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 28555 ஆகவும் உயர்ந்துள்ளது. மொத்த உயிரிழப்புகளின் எண்ணிக்கை 172 ஆக உயர்ந்துள்ளது. நீலகிரியில் கொரோனா தொற்று விகிதம் 3.0 ஆக உள்ளது.

தொடர்ந்து கொரோனா பாதிப்புகள் குறைந்து வருவது மக்களிடையே நிம்மதியை ஏற்படுத்தியுள்ளது.

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

அண்ணா பல்கலை. மாணவி விவரங்களோடு வெளியான எஃப்ஐஆர்; உடன்பட வைத்தது எப்படி?- பரபரப்புத் தகவல்கள்!
அண்ணா பல்கலை. மாணவி விவரங்களோடு வெளியான எஃப்ஐஆர்; உடன்பட வைத்தது எப்படி?- பரபரப்புத் தகவல்கள்!
மாணவி பாலியல் வன்கொடுமை; குற்றவாளிக்கு நிகரானவர் உயிருக்கு பயந்து ஓடிய காதலன் - ஏன்?
மாணவி பாலியல் வன்கொடுமை; குற்றவாளிக்கு நிகரானவர் உயிருக்கு பயந்து ஓடிய காதலன் - ஏன்?
வெறும் ரூ.601 தான்... நண்பர்களுக்கு டேட்டாவை பரிசாக அளிக்கும் வசதி! அதிரடி ப்ளானை இறக்கிய ஜியோ!
வெறும் ரூ.601 தான்... நண்பர்களுக்கு டேட்டாவை பரிசாக அளிக்கும் வசதி! அதிரடி ப்ளானை இறக்கிய ஜியோ!
வாவ்! 1500ஆ? 2000ஆ? அதிகரிக்கப்போகும் மகளிர் உரிமைத் தொகை! மு.க.ஸ்டாலினின் மாஸ்டர் ப்ளான்!
வாவ்! 1500ஆ? 2000ஆ? அதிகரிக்கப்போகும் மகளிர் உரிமைத் தொகை! மு.க.ஸ்டாலினின் மாஸ்டர் ப்ளான்!
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

RN Ravi Delhi Visit: ”ஸ்டாலின் சொல்றத கேளுங்க!” RN.ரவிக்கு பறந்த ORDER! மோடியின் திடீர் முடிவு?Anna University Issue: அண்ணா பல்கலை. விவகாரம் குற்றவாளி குறித்து திடுக் தகவல்!  கைதானவர் யார்?Sri Ram Krishna Profile: தமிழனை அழைத்த TRUMP WHITE HOUSE-ல் முக்கிய பதவி! யார் ஸ்ரீராம் கிருஷ்ணன்?Anna University Student Sexual Assault |

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
அண்ணா பல்கலை. மாணவி விவரங்களோடு வெளியான எஃப்ஐஆர்; உடன்பட வைத்தது எப்படி?- பரபரப்புத் தகவல்கள்!
அண்ணா பல்கலை. மாணவி விவரங்களோடு வெளியான எஃப்ஐஆர்; உடன்பட வைத்தது எப்படி?- பரபரப்புத் தகவல்கள்!
மாணவி பாலியல் வன்கொடுமை; குற்றவாளிக்கு நிகரானவர் உயிருக்கு பயந்து ஓடிய காதலன் - ஏன்?
மாணவி பாலியல் வன்கொடுமை; குற்றவாளிக்கு நிகரானவர் உயிருக்கு பயந்து ஓடிய காதலன் - ஏன்?
வெறும் ரூ.601 தான்... நண்பர்களுக்கு டேட்டாவை பரிசாக அளிக்கும் வசதி! அதிரடி ப்ளானை இறக்கிய ஜியோ!
வெறும் ரூ.601 தான்... நண்பர்களுக்கு டேட்டாவை பரிசாக அளிக்கும் வசதி! அதிரடி ப்ளானை இறக்கிய ஜியோ!
வாவ்! 1500ஆ? 2000ஆ? அதிகரிக்கப்போகும் மகளிர் உரிமைத் தொகை! மு.க.ஸ்டாலினின் மாஸ்டர் ப்ளான்!
வாவ்! 1500ஆ? 2000ஆ? அதிகரிக்கப்போகும் மகளிர் உரிமைத் தொகை! மு.க.ஸ்டாலினின் மாஸ்டர் ப்ளான்!
Tsunami 2004 : மறக்குமா நெஞ்சம்.. ஆறாத வடுவாய் உள்ள காயங்கள்.. 20-ஆம் ஆண்டு சுனாமி நினைவு தினம்
Tsunami 2004 : மறக்குமா நெஞ்சம்.. ஆறாத வடுவாய் உள்ள காயங்கள்.. 20-ஆம் ஆண்டு சுனாமி நினைவு தினம்
IRCTC Down: தட்கல் நேரத்தில் தகராறு! முடங்கிய ஐஆர்சிடிசி இணையத்தளம்.. பயணிகள் தவிப்பு
IRCTC Down: தட்கல் நேரத்தில் தகராறு! முடங்கிய ஐஆர்சிடிசி இணையத்தளம்.. பயணிகள் தவிப்பு
"மாணவியை பாலியல் வன்கொடுமை செய்தது தி.மு.க நிர்வாகி" அண்ணாமலை பகிரங்க குற்றச்சாட்டு!
Accident: காலையிலே சோகம்! ஜிஎஸ்டி சாலையில் பிரிந்த 3 உயிர் - பீதியில் வாகன ஓட்டிகள்
Accident: காலையிலே சோகம்! ஜிஎஸ்டி சாலையில் பிரிந்த 3 உயிர் - பீதியில் வாகன ஓட்டிகள்
Embed widget