மேலும் அறிய

கோவை: அதிகரிக்கும் கொரோனா தொற்று ; இன்று 89 பேருக்கு பாதிப்பு

கொரோனா தொற்று பாதிப்புகள் அதிகரித்து வருவதால் கொரோனா கட்டுப்பாடுகள் அதிகரிக்கப்பட்டுள்ளதோடு, பொது இடங்களில் முகக்கவசம் அணியாதவர்களுக்கு ரூ.500 அபராதம் விதிக்கப்படும் என மாவட்ட ஆட்சியர் தெரிவித்தார்.

தமிழ்நாட்டில் கடந்த சில மாதங்களாக கொரோனா தொற்று பாதிப்புகள் குறைந்திருந்த நிலையில், கடந்த சில நாட்களாக தினசரி கொரோனா தொற்று பாதிப்புகள் மீண்டும் அதிகரித்து வருகிறது. தினசரி தொற்று பாதிப்பில் சென்னை முதலிடத்தில் நீடித்து வருகிறது. தொற்று பாதிப்பில் செங்கல்பட்டு இரண்டாவது இடத்தில் உள்ள நிலையில், கோவை மூன்றாவது இடத்தில் உள்ளது. இந்நிலையில் கோவையில் கொரோனா தொற்று பாதிப்புகள் அதிகரித்து வருவதால் கொரோனா கட்டுப்பாடுகள் அதிகரிக்கப்பட்டுள்ளதோடு, பொது இடங்களில் முகக்கவசம் அணியாதவர்களுக்கு 500 ரூபாய் அபராதம் விதிக்கப்படும் என மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார்.

கோவையில் கடந்த இரண்டு வாரங்களாக மீண்டும் தினசரி கொரோனா தொற்று பாதிப்புகள் அதிகரித்து வருகிறது. நேற்றைய தினத்தை விட இன்று 25 பேருக்கு கூடுதலாக கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது. கோவையில் இன்று 89 பேருக்கு கொரோனா தொற்று பாதிப்புகள் ஏற்பட்டுள்ளது. கோவை மாவட்டத்தில் இதுவரை கொரோனா தொற்று பாதித்தவர்களின் எண்ணிக்கை 3 லட்சத்து 33 ஆயிரத்து 669 ஆக அதிகரித்துள்ளது. மருத்துவமனைகள் மற்றும் சிகிச்சை மையங்களில் 347 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். இன்று கொரோனா தொற்றில் இருந்து 31பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். இதனால் குணமடைந்து வீடு திரும்பியவர்களின் எண்ணிக்கை 3 லட்சத்து 27 ஆயிரத்து 705 பேராக உயர்ந்துள்ளது. கொரோனா தொற்று பாதிப்பால் இன்றும் உயிரிழப்புகள் ஏற்படவில்லை. இதனால் கோவை மாவட்டத்தில் இதுவரை உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 2617 ஆக உள்ளது.

ஈரோடு, திருப்பூர், நீலகிரி நிலவரம்

ஈரோடு மாவட்டத்தில் இன்று 5 பேருக்கு கொரோனா தொற்று பாதிப்பு ஏற்பட்டுள்ளது. நேற்றைய தினத்தை விட இன்று ஒருவருக்கு குறைவாக கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது. மருத்துவமனைகள் மற்றும் சிகிச்சை மையங்களில் 32 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். இன்று கொரோனா தொற்றில் இருந்து 6 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளார். கொரோனா தொற்று பாதிப்பால் இன்றும் உயிரிழப்புகள் ஏற்படவில்லை. அதேசமயம் ஈரோடு மாவட்டத்தின் மொத்த கொரோனா பாதிப்புகள் 132744 ஆக உள்ளது. குணமடைந்தவர்கள் எண்ணிக்கை 131978 ஆகவும், மொத்த உயிரிழப்புகள் 734 ஆகவும் உள்ளது.

திருப்பூர் மாவட்டத்தில் இன்று 4 பேருக்கு கொரோனா தொற்று பாதிப்பு ஏற்பட்டுள்ளது. நேற்றைய தினத்தை விட இன்று 6பேருக்கு குறைவாக கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது. மருத்துவமனைகள் மற்றும் சிகிச்சை மையங்களில் 37 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். இன்று கொரோனா தொற்றில் இருந்து 3 பேர் குணமடைந்துள்ளனர் . கொரோனா தொற்று பாதிப்பால் இன்றும் உயிரிழப்புகள் ஏற்படவில்லை. இதுவரை திருப்பூரின் மொத்த கொரோனா பாதிப்புகள் 129995 ஆகவும், குணமடைந்தவர்கள் எண்ணிக்கை 128906 ஆகவும் உள்ளது. உயிரிழப்புகளின் எண்ணிக்கை 1052 ஆக உள்ளது.

நீலகிரி மாவட்டத்தில் இன்று 5 பேருக்கு கொரோனா தொற்று பாதிப்பு ஏற்பட்டுள்ளது. நேற்றைய தினத்தை விட இன்று 3 பேருக்கு குறைவாக கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது.மருத்துவமனைகள் மற்றும் சிகிச்சை மையங்களில் 36 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். இன்று கொரோனா தொற்றில் இருந்து ஒருவர் குணமடைந்துள்ளார். கொரோனா தொற்று பாதிப்பால் இன்றும் உயிரிழப்புகள் ஏற்படவில்லை. அதேசமயம் நீலகிரி மாவட்டத்தின் மொத்த பாதிப்புகள் 42221 ஆகவும், குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 41959 ஆகவும் உள்ளது. மொத்த உயிரிழப்புகளின் எண்ணிக்கை 226 ஆக உள்ளது.

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

அதிகாலையில் அதிர்ச்சி – டெல்லியை உலுக்கிய நிலநடுக்கம்! யாருக்கு என்னாச்சு?
அதிகாலையில் அதிர்ச்சி – டெல்லியை உலுக்கிய நிலநடுக்கம்! யாருக்கு என்னாச்சு?
FasTag Rules: இன்று முதல் ஆப்பு, இரட்டிப்பு அபராதம் - அமலுக்கு வந்த ஃபாஸ்டேக் விதிமுறைகள், செய்யக்கூடாதவை..!
FasTag Rules: இன்று முதல் ஆப்பு, இரட்டிப்பு அபராதம் - அமலுக்கு வந்த ஃபாஸ்டேக் விதிமுறைகள், செய்யக்கூடாதவை..!
2026 தேர்தலில் கண்டிப்பா அ.தி.மு.க. கூட்டணி வைக்கும்! விஜய்க்கு அழைப்பு விடுக்கிறாரா எடப்பாடி?
2026 தேர்தலில் கண்டிப்பா அ.தி.மு.க. கூட்டணி வைக்கும்! விஜய்க்கு அழைப்பு விடுக்கிறாரா எடப்பாடி?
Delhi Railway Station Stampede: டெல்லி ரயில் நிலைய கூட்ட நெரிசலில் சிக்கி 18 பேர் உயிரிழப்பு! நடந்தது என்ன?
Delhi Railway Station Stampede: டெல்லி ரயில் நிலைய கூட்ட நெரிசலில் சிக்கி 18 பேர் உயிரிழப்பு! நடந்தது என்ன?
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

LIFT-ல் சிக்கிய எம்.பி! 1 மணி நேரம் திக்.. திக்! மயங்கிய காங்.கட்சியினர்”தமிழகத்திற்கு நிதி கிடையாது” தர்மேந்திர பிரதான் பேசியது என்ன? தமிழில் முழு வீடியோNamakkal Transgender Issue : ’’திருநங்கைகளை ஒதுக்காதீங்க’’மக்களுக்கு கலெக்டர் ADVICE | CollectorNainar Nagendran Join ADMK : அதிமுகவில் மீண்டும் நயினார்?பாஜகவில் வெடித்த கலகம்!அ.மலை பக்கா ஸ்கெட்ச்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
அதிகாலையில் அதிர்ச்சி – டெல்லியை உலுக்கிய நிலநடுக்கம்! யாருக்கு என்னாச்சு?
அதிகாலையில் அதிர்ச்சி – டெல்லியை உலுக்கிய நிலநடுக்கம்! யாருக்கு என்னாச்சு?
FasTag Rules: இன்று முதல் ஆப்பு, இரட்டிப்பு அபராதம் - அமலுக்கு வந்த ஃபாஸ்டேக் விதிமுறைகள், செய்யக்கூடாதவை..!
FasTag Rules: இன்று முதல் ஆப்பு, இரட்டிப்பு அபராதம் - அமலுக்கு வந்த ஃபாஸ்டேக் விதிமுறைகள், செய்யக்கூடாதவை..!
2026 தேர்தலில் கண்டிப்பா அ.தி.மு.க. கூட்டணி வைக்கும்! விஜய்க்கு அழைப்பு விடுக்கிறாரா எடப்பாடி?
2026 தேர்தலில் கண்டிப்பா அ.தி.மு.க. கூட்டணி வைக்கும்! விஜய்க்கு அழைப்பு விடுக்கிறாரா எடப்பாடி?
Delhi Railway Station Stampede: டெல்லி ரயில் நிலைய கூட்ட நெரிசலில் சிக்கி 18 பேர் உயிரிழப்பு! நடந்தது என்ன?
Delhi Railway Station Stampede: டெல்லி ரயில் நிலைய கூட்ட நெரிசலில் சிக்கி 18 பேர் உயிரிழப்பு! நடந்தது என்ன?
"திமுகவினர் நடத்தும் பள்ளிகளில் இந்தி இருக்கே" கொதித்த வானதி சீனிவாசன்!
Chennai Power Shutdown: சென்னையில் மின்தடை ( 18.02.2025 ); எங்கு தெரியுமா?
Chennai Power Shutdown: சென்னையில் மின்தடை ( 18.02.2025 ); எங்கு தெரியுமா?
IPL 2025 Schedule: ஐபிஎல் போட்டி அட்டவணை ரிலீஸ்! முதல் போட்டி யாருக்கு? சிஎஸ்கே-விற்கு முதல் போட்டி யாருடன்?
IPL 2025 Schedule: ஐபிஎல் போட்டி அட்டவணை ரிலீஸ்! முதல் போட்டி யாருக்கு? சிஎஸ்கே-விற்கு முதல் போட்டி யாருடன்?
"அதிகாரத் திமிர்! தமிழ்நாட்டுல இருந்து ஒரு ரூபாய் கூட தரமாட்டோம்" கொதித்தெழுந்த சீமான்
Embed widget

We use cookies to improve your experience, analyze traffic, and personalize content. By clicking "Allow All Cookies", you agree to our use of cookies.