கோவையில் இன்று 229 பேருக்கு கொரோனா தொற்று ; 2 பேர் உயிரிழப்பு..!
70 நாட்களுக்குப் பிறகு தினசரி கொரோனா பாதிப்பில் சென்னை முதலிடம் பிடித்தது. இதனால் கோவை இரண்டாவது இடத்திற்கு வந்துள்ளது.
கடந்த இரண்டு மாதங்களுக்கும் மேலாக கோவையில் மற்ற மாவட்டங்களை காட்டிலும் கூடுதலாக தொற்று பாதிப்புகள் ஏற்பட்டு வந்தது. இதன் காரணமாக, தமிழ்நாட்டில் தினசரி கொரோனா பாதிப்புகளில் தொடர்ந்து முதலிடத்தில் நீடித்து வந்தது. கோவையில் இந்த வாரத்தில் தினசரி கொரோனா பாதிப்புகள் ஏறுவதும், இறங்குவதுமாக உள்ளது. கோவையில் நேற்றைய தினத்தை விட இன்று 5 பேருக்கு கூடுதலாக தொற்று ஏற்பட்டுள்ளது. அதேசமயம் 70 நாட்களுக்குப் பிறகு தினசரி கொரோனா பாதிப்பில் சென்னை முதலிடம் பிடித்தது. இதனால் கோவை இரண்டாவது இடத்திற்கு வந்துள்ளது.
கோவையில் இன்று 229 பேருக்கு கொரோனா தொற்று பாதிப்புகள் உறுதியாகியுள்ளது. இதனால் கோவை மாவட்டத்தில் இதுவரை கொரோனா தொற்று பாதித்தவர்களின் எண்ணிக்கை இரண்டு இலட்சத்து 31 ஆயிரத்து 863 ஆக உயர்ந்துள்ளது. மருத்துவமனைகள் மற்றும் சிகிச்சை மையங்களில் 2259 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். நாள்தோறும் சிகிச்சை பெற்று வருபவர்களின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இன்று கொரோனா தொற்றில் இருந்து 203 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். இதனால் குணமடைந்து வீடு திரும்பியவர்களின் எண்ணிக்கை 2 இலட்சத்து 27 ஆயிரத்து 403 பேராக உயர்ந்துள்ளது. கொரோனா தொற்று பாதிப்பால் இன்று 2 பேர் உயிரிழந்தனர். கோவை மாவட்டத்தில் இதுவரை உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 2201 ஆக அதிகரித்துள்ளது.
ஈரோடு, திருப்பூர், நீலகிரி நிலவரம்
ஈரோட்டில் இன்று 167 பேருக்கு கொரோனா தொற்று பாதிப்புகள் ஏற்பட்டுள்ளன. நேற்றைய தினத்தை விட இன்று 2 பேருக்கு குறைவாக தொற்று ஏற்பட்டுள்ளது. 174 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்னர். மருத்துவமனைகள் மற்றும் சிகிச்சை மையங்களில் 1710 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். தொற்று பாதிப்பால் இன்று ஒருவர் உயிரிழந்தார். ஈரோடு மாவட்டத்தின் மொத்த கொரோனா பாதிப்புகள் 95559 ஆக உயர்ந்துள்ளது. குணமடைந்தவர்கள் எண்ணிக்கை 93208 ஆகவும், மொத்த உயிரிழப்புகள் 641 ஆக அதிகரித்துள்ளது.
திருப்பூர் மாவட்டத்தில் இன்று 73 பேருக்கு இன்று கொரோனா பாதிப்புகள் ஏற்பட்டுள்ளன. நேற்றைய தினத்தை விட இன்று 2 பேருக்கு கூடுதலாக தொற்று ஏற்பட்டுள்ளது. 67 பேர் குணமடைந்துள்ள நிலையில், 857 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். கொரோனா பாதிப்பால் இன்று 2 பேர் உயிரிழந்தனர். திருப்பூரின் மொத்த கொரோனா பாதிப்புகள் 88754 ஆகவும், குணமடைந்தவர்கள் எண்ணிக்கை 87021 ஆகவும் அதிகரித்துள்ளது. உயிரிழப்புகளின் எண்ணிக்கை 876 ஆகவும் அதிகரித்துள்ளது.
நீலகிரி மாவட்டத்தில் இன்று 43 பேருக்கு கொரோனா தொற்று பாதிப்புகள் ஏற்பட்டுள்ளன. நேற்றைய தினத்தை விட இன்று 6 பேருக்கு குறைவாக தொற்று ஏற்பட்டுள்ளது. 51 பேர் குணமடைந்துள்ள நிலையில், 493 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். தொற்று பாதிப்பால் சிகிச்சை பெறுவோரின் எண்ணிக்கை குறைந்து வருகிறது. தொற்று பாதிப்பால் இன்று உயிரிழப்புகள் ஏற்படவில்லை. நீலகிரி மாவட்டத்தின் மொத்த பாதிப்புகள் 31048 ஆகவும், குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 30369 ஆகவும் உயர்ந்துள்ளது. மொத்த உயிரிழப்புகளின் எண்ணிக்கை 186 ஆக உள்ளது.