மேலும் அறிய

‘யேசுவே இந்தியாவை ஆசிர்வதியும்’ தேசியக் கொடிக்கு கீழ் சர்ச்சை வாசகம் - பாஜகவினர் போலீசில் புகார்

தேசியக் கொடியின் கீழ் ‘யேசுவை இந்தியாவை ஆசிர்வதியும்’ என்ற வாசகங்கள் எழுதப்பட்ட பதாகை இருந்துள்ளது. இந்த சம்பவம் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

கோவையில் தேசியக் கொடியை அவமதிக்கும் வகையில் தேசியக் கொடிக்கு கீழ் ‘யேசுவே இந்தியாவை ஆசிர்வதியும்’ என சர்ச்சைக்குரிய வகையில் பதாகை வைத்தவர் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி பாஜகவினர் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர்.

இந்திய நாட்டின் 75 ஆண்டு நிறைவு சுதந்திர தின விழா, நாடு முழுவதும் உற்சாகமாக கொண்டாடப்பட்டது. இதையொட்டி மத்திய அரசு சார்பில் ஒவ்வொரு வீட்டிலும் மூவர்ண தேசியக்கொடி என்ற திட்டம் துவங்கப்பட்டது. இந்த திட்டத்தின் கீழ் ஆகஸ்ட் 13 முதல் 15 ம் தேதி வரை நாடு முழுவதும் ஒவ்வொரு வீட்டிலும் தேசியக் கொடி பறக்க விட வேண்டும் என பிரதமர் நரேந்திர மோடி வலியுறுத்தினார். இதன்படி நாடு முழுவதும் பெரும்பாலான வீடுகளில் பொதுமக்கள் தேசியக்கொடி ஏற்றி வைத்து, சுதந்திர தினத்தை கொண்டாடினர்.

கோவை மாவட்டத்திலும் பெரும்பாலான வீடுகளில் பொதுமக்கள் தேசியக் கொடி ஏற்றி, சுதந்திர தினத்தை கொண்டாடினர். இந்த நிலையில் கோவை சுந்தராபுரம் அருகே உள்ள மச்சாம்பாளையம் பகுதியில் ஒரு வீட்டின் முன்பு தேசியக் கொடி பறக்க விடப்பட்டுள்ளது. சுதந்திர தினம் முடிவடைந்த பின்னரும் அந்தக் கொடி அகற்றப்படாமல் உள்ளது. தேசியக் கொடியின் கீழ் ‘யேசுவை இந்தியாவை ஆசிர்வதியும்’ என்ற வாசகங்கள் எழுதப்பட்ட பதாகை இருந்துள்ளது. இந்த சம்பவம் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

‘யேசுவே இந்தியாவை ஆசிர்வதியும்’ தேசியக் கொடிக்கு கீழ் சர்ச்சை வாசகம் - பாஜகவினர் போலீசில் புகார்

இந்த நிலையில் தேசியக் கொடியை அவமதிப்பு செய்யும் வகையிலும், மதப்பிரச்சாரம் செய்யும் வகையிலும் செயல்பட்ட நபர் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி, பாஜகவினர் குனியமுத்தூர் காவல் நிலையத்தில் ஒரு புகார் மனு அளித்துள்ளனர். பாஜக கோவை மாநகர சுந்தராபுரம் மண்டல தலைவர் முகுந்தன் என்பவர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். அந்த புகார் மனுவில், “மச்சாம்பாளையம் வாரண்ட் ஆபீஸ் வீதியில் சண்முகம் என்பவரது வீட்டில் முன்பு ஒரு கம்பத்தில் தேசியக் கொடி பறக்க விடாமல் ஒரு பதாகையில் பொருத்தப்பட்டு இருந்தது. 

முதலமைச்சர் ஸ்டாலின் புகைப்படம் கொண்ட காலண்டர் அட்டையில் தேசியக் கொடி பின் செய்யப்பட்டு இருந்தது. அதன் முன்புறம் ‘ஏசுவே என் இந்தியாவை ஆசிர்வதியும்’ என்ற வாசகத்துடன் கட்டி வைக்கப்பட்டுள்ளது. மேலும் ஒரு காரில் மதப்பிரச்சாரத்திலும் ஈடுபட்டு வருகின்றனர். தேசியக் கொடியை அவமதித்த சண்முகம் மற்றும் அவரது மனைவி ஆகியோர் மீது தேசியக்கொடி அவமதிப்பு, பொது அமைதிக்கு பங்கம் விளைவித்தல், சுதந்திர தினம் முடிவடைந்தும் தேசியக்கொடியை அகற்றாமல் பறக்க விட்டு அவமதிப்பு செய்தல் ஆகிய குற்றங்களுக்காக சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டும்” எனத் தெரிவித்துள்ளார். சர்ச்சைக்குரிய வகையில்  தேசியக்கொடி வைக்கப்பட்ட சம்பவம் குறித்து குனியமுத்தூர் காவல் துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர். 

மேலும் படிக்க : OPS Case Judgement : அ.தி.மு.க. பொதுக்குழு கூட்டம் செல்லாது..! நீதிபதி பரபரப்பு தீர்ப்பு..! இபிஎஸ்க்கு பின்னடைவு!

மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்

ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்

பேஸ்புக் பக்கத்தில் தொடர

ட்விட்டர் பக்கத்தில் தொடர

யூடியூபில் வீடியோக்களை காண

மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola

தலைப்பு செய்திகள்

Rahul Gandhi: தமிழக காங்கிரசை வறுத்தெடுத்த ராகுல் காந்தி.. டெல்லியில் நடந்தது என்ன?
Rahul Gandhi: தமிழக காங்கிரசை வறுத்தெடுத்த ராகுல் காந்தி.. டெல்லியில் நடந்தது என்ன?
கற்றல் முறையையே மாற்றும் புரட்சி; பாட நூல்கள் இனி சுவாரசிய கதைகளாக- கூகுள் அசத்தல் அறிமுகம்!
கற்றல் முறையையே மாற்றும் புரட்சி; பாட நூல்கள் இனி சுவாரசிய கதைகளாக- கூகுள் அசத்தல் அறிமுகம்!
தைலாபுரத்தில் திடீர் நிலநடுக்கம்! - மூத்த நிர்வாகிகள் கொடுத்த தவறான தகவல்? ராமதாஸ் குழப்பம்!
தைலாபுரத்தில் திடீர் நிலநடுக்கம்! - மூத்த நிர்வாகிகள் கொடுத்த தவறான தகவல்? ராமதாஸ் குழப்பம்!
உண்ணாவிரதம்: முன்னோர் வாழ்வியல் முதல் புற்றுநோய் வரை! விரதத்தின் ரகசியங்கள், நன்மைகள்- மருத்துவர் விளக்கம்
உண்ணாவிரதம்: முன்னோர் வாழ்வியல் முதல் புற்றுநோய் வரை! விரதத்தின் ரகசியங்கள், நன்மைகள்- மருத்துவர் விளக்கம்
ABP Premium

வீடியோ

”முடிவு என்கிட்ட தான்” ராகுல் போட்ட ORDER! டெல்லி MEETING-ல் நடந்தது என்ன?
ஓடும் பேருந்தில் சில்மிஷம்! வீடியோ வெளியிட்ட பெண்! உயிரை மாய்த்த பயணி!
மீண்டும் மீண்டுமா... தெறி ரிலீஸ்-க்கும் சிக்கல்! மோகன் ஜி-யால் புது பஞ்சாயத்து
AR Rahman controversy | எதிர்த்து நிற்கும் பாலிவுட்!
Rahul gandhi meeting | ”எல்லாரும் டெல்லி வாங்க”ராகுலுடன் முக்கிய மீட்டிங்!படையெடுத்த தமிழக காங்கிரஸ்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Rahul Gandhi: தமிழக காங்கிரசை வறுத்தெடுத்த ராகுல் காந்தி.. டெல்லியில் நடந்தது என்ன?
Rahul Gandhi: தமிழக காங்கிரசை வறுத்தெடுத்த ராகுல் காந்தி.. டெல்லியில் நடந்தது என்ன?
கற்றல் முறையையே மாற்றும் புரட்சி; பாட நூல்கள் இனி சுவாரசிய கதைகளாக- கூகுள் அசத்தல் அறிமுகம்!
கற்றல் முறையையே மாற்றும் புரட்சி; பாட நூல்கள் இனி சுவாரசிய கதைகளாக- கூகுள் அசத்தல் அறிமுகம்!
தைலாபுரத்தில் திடீர் நிலநடுக்கம்! - மூத்த நிர்வாகிகள் கொடுத்த தவறான தகவல்? ராமதாஸ் குழப்பம்!
தைலாபுரத்தில் திடீர் நிலநடுக்கம்! - மூத்த நிர்வாகிகள் கொடுத்த தவறான தகவல்? ராமதாஸ் குழப்பம்!
உண்ணாவிரதம்: முன்னோர் வாழ்வியல் முதல் புற்றுநோய் வரை! விரதத்தின் ரகசியங்கள், நன்மைகள்- மருத்துவர் விளக்கம்
உண்ணாவிரதம்: முன்னோர் வாழ்வியல் முதல் புற்றுநோய் வரை! விரதத்தின் ரகசியங்கள், நன்மைகள்- மருத்துவர் விளக்கம்
கோவில் சொத்து முறைகேடு ; 400 சவரன் நகை , 2 கோடி பணம் எங்கே ? பொதுமக்கள் போராட்டம்
கோவில் சொத்து முறைகேடு ; 400 சவரன் நகை , 2 கோடி பணம் எங்கே ? பொதுமக்கள் போராட்டம்
Tata Punch vs Nexon: டாடா பஞ்ச் டாப் எண்ட்-ஆ.? மிட்-ஸ்பெக் நெக்ஸான்-ஆ.? உங்கள் பணத்திற்கு சிறந்த SUV எது.?
டாடா பஞ்ச் டாப் எண்ட்-ஆ.? மிட்-ஸ்பெக் நெக்ஸான்-ஆ.? உங்கள் பணத்திற்கு சிறந்த SUV எது.?
Mahindra THAR: என்ன இப்படி பண்ணிட்டீங்களே.?! பிரபல SUV THAR-ன் விலையை ஏற்றிய மஹிந்திரா; எவ்வளவு தெரியுமா.?
என்ன இப்படி பண்ணிட்டீங்களே.?! பிரபல SUV THAR-ன் விலையை ஏற்றிய மஹிந்திரா; எவ்வளவு தெரியுமா.?
Trump Greenland Denmark: கிரீன்லாந்து விவகாரம்; “டென்மார்க் கோட்டை விட்டுடுச்சு, நான் செஞ்சு முடிப்பேன்“ - ட்ரம்ப் பதிவு
கிரீன்லாந்து விவகாரம்; “டென்மார்க் கோட்டை விட்டுடுச்சு, நான் செஞ்சு முடிப்பேன்“ - ட்ரம்ப் பதிவு
Embed widget