Coimbatore Power Shutdown: கோவை மக்களே அலர்ட்! நாளை(30.05.2025) இந்த எரியாவில் தான் மின் தடை?
Coimbatore Power Shutdown 30.05.2025: கோவையில் மின் பராமரிப்பு பணி காரணமாக, நாளை மத்தம்பாளையம் சுற்றுவட்டார பகுதிகளில் மின்தடையானது அறிவிக்கப்பட்டுள்ளது.

கோவையில் நாளை (30.05.25) பராமரிப்பு பணிகள் காரணமாக எங்கெங்கு மின் தடை உள்ளது என்பதை பார்ப்போம். மின்சாரம் வழங்குவதில், எவ்வித தடையும் இருக்கக் கூடாது என , அவ்வப்போது சில இடங்களில் மின்பராமரிப்பு பணிகளை, மின்வாரியம் மேற்கொள்வது வழக்கம். இதனால், எதிர்காலத்தில் மின்கசிவு உள்ளிட்ட மிகப்பெரிய பிரச்னைகள், ஏற்படாதவாறு முனனரே சரி செய்யப்படும்.
பராமரிப்பு:
தமிழ்நாடு முழுவதும் தமிழ்நாடு மின்சார துறை சார்பில் மின்சாரம் வழங்கப்பட்டு வருகிறது. மாதம் தோறும் ஒவ்வொரு துணை மின் நிலையத்திலும் பராமரிப்பு பணி மேற்கொள்வதற்காக ஒருநாள் மின் நிறுத்தம் செய்யப்படுவது வழக்கம்.
மின் தடை வழங்கப்படும் நாளில், பராமரிப்பு பணியின் பொழுது, சிறு சிறு பழுதுகள் ஏற்பட்டு இருந்தால் அதனை சரி செய்வது, மின்கம்பம் மற்றும் மின்வழி தடங்களில் உள்ள மரக்கிளைகளை அப்புறப்படுத்துவது உள்ளிட்ட பல்வேறு பராமரிப்பு பணிகளில் மின்சார வாரிய ஊழியர்கள் ஈடுபடுவது வழக்கம். அந்தவகையில், கோவையில் நாளை காலை 9 மணி முதல் மதியம் 4 மணிவரை மின் நிறுத்தம் செய்யப்படுவதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
கோவையில் நாளை மின்தடை: 30-05-2025
இந்நிலையில், கோயம்பத்தூர் மாவட்டத்தின் ஒரு இடத்தில் மட்டும் நாளை மின்பராமரிப்பு பணி காரணமாக மின் தடை செய்யப்படும் என அறிவிப்பு வெளியாகியுள்ளது.
இதனால், கோவையில் நாளை அந்தப் பகுதியில் காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரையிலான நேரத்தில் மின்சாரமானது சில பகுதிகளில் இருக்காது என தெரிவிக்கப்பட்டுள்ளது.
மத்தம்பாளையம்(30.05.2025)
பெத்தாபுரம், தண்ணீர்பந்தல், கோட்டைப்பிரிவு, ஒன்னிபாளையம்ரோடு, அறிவொளி நகர், சின்னமடம்பாளையம், மடம்பாளையம், செல்வபுரம், சாந்திமேடு, பாரதி நகர், சமநாயக்கன்பாளையம் சாலை, கண்ணர்பாளையம் சாலை.






















