மேலும் அறிய

“வண்டியில் ஓவர் சத்தம் வந்தா அவ்ளோ தான்” – வாகனங்களை பிடித்து கோவை போலீஸ் கெடுபிடி

அதிக ஒலி எழுப்பும் சைலன்சர், ஹாரன் பொருத்திய வாகனங்களுக்கு அபராதம் – போக்குவரத்து போலீசார் தீவிர நடவடிக்கை.

கோவை மாநகரில் அதிக ஒலி எழுப்பும் ஹாரன் மற்றும் மாற்றியமைக்கப்பட்ட சைலன்சர் பொருத்தப்பட்ட வாகனங்களுக்கெதிராக போக்குவரத்து காவல்துறையினர் தீவிர நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றனர். மோட்டார் வாகனச் சட்டத்தின் படி, பொதுமக்களுக்கும் மற்ற வாகன ஓட்டிகளுக்கும் இடையூறு ஏற்படுத்தும் வகையில் அதிக சத்தம் எழுப்பும் ஹாரன் மற்றும் சைலன்சர்களை பயன்படுத்துவது தடை செய்யப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இருப்பினும், சில வாகன ஓட்டிகள் விதிமுறைகளை மீறி அதிக சத்தம் எழுப்பும் ஹாரன், சைலன்சர்களை வாகனங்களில் பொருத்திக் கொண்டு இயக்கி வருவது தொடர்கதையாக உள்ளது.

சைலன்சர் சத்தத்துக்கு கடும் நடவடிக்கை

இதனால், சாலைப் பாதுகாப்பு மட்டுமின்றி பொதுமக்களின் அமைதிக்கும் பாதிப்பு ஏற்படுவதாக புகார்கள் எழுந்துள்ளன. குறிப்பாக முதியவர்கள், குழந்தைகள் மற்றும் நோயாளிகள் அதிக சத்தம் காரணமாக அவதிக்குள்ளாகுவதாக சமூக ஆர்வலர்கள் தெரிவித்து வருகின்றனர். இதனைத் தொடர்ந்து, கோவை மாநகர போக்குவரத்து காவல்துறையினர் நகரின் முக்கிய பகுதிகளில் திடீர் தணிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

அதன் ஒரு பகுதியாக, கோவை காந்திபுரம் பகுதியில் போக்குவரத்து போலீசார் வாகன தணிக்கையில் ஈடுபட்டனர். அப்போது அதிக ஒலி எழுப்பும் ஹாரன் மற்றும் மாற்றியமைக்கப்பட்ட சைலன்சர் பொருத்தப்பட்ட இருசக்கர மற்றும் நான்கு சக்கர வாகனங்கள் கண்டறியப்பட்டன. விதிமுறைகளை மீறிய வாகன ஓட்டிகளுக்கு அபராதம் விதிக்கப்பட்டதுடன், பறிமுதல் செய்யப்பட்ட ஹாரன் மற்றும் சைலன்சர்களை மீண்டும் பயன்படுத்தக் கூடாது என கடுமையாக எச்சரிக்கை விடுக்கப்பட்டது.

கோவையில் தீவிர தணிக்கை

மேலும், எதிர்காலத்தில் இதுபோன்ற விதிமீறல்களில் ஈடுபடும் வாகன ஓட்டிகளுக்கு கூடுதல் அபராதம் விதிக்கப்படும் என்றும், தொடர்ந்து சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் போக்குவரத்து காவல்துறை தெரிவித்துள்ளது. பொதுமக்களின் பாதுகாப்பு மற்றும் அமைதியான போக்குவரத்தை உறுதி செய்வதற்காக இத்தகைய நடவடிக்கைகள் தொடர்ந்து மேற்கொள்ளப்படும் எனவும் அதிகாரிகள் கூறியுள்ளனர்.

அதே நேரத்தில், வாகன ஓட்டிகள் அனைவரும் மோட்டார் வாகன சட்ட விதிமுறைகளை கடைபிடித்து, விதிக்கப்பட்ட அளவிலான ஹாரன் மற்றும் சைலன்சர்களை மட்டுமே பயன்படுத்த வேண்டும் என காவல்துறை அறிவுறுத்தியுள்ளது. அதிக சத்தம் எழுப்பும் வாகனங்களால் ஏற்படும் ஒலி மாசை கட்டுப்படுத்த பொதுமக்களும் ஒத்துழைப்பு வழங்க வேண்டும் எனவும் போக்குவரத்து காவல்துறையினர் கேட்டுக் கொண்டுள்ளனர்.

தலைப்பு செய்திகள்

coimbatore power cut: கோவையில் நாளை (19-8-2026) எங்கெல்லாம் மின்சாரம் இருக்காது? - மின்வாரியம் வெளியிட்ட லிஸ்ட்
கோவையில் நாளை (19-8-2026) எங்கெல்லாம் மின்சாரம் இருக்காது? - மின்வாரியம் வெளியிட்ட லிஸ்ட்
coimbatore power cut: கோவையில் நாளை (18-8-2026) எங்கெல்லாம் மின்சாரம் இருக்காது? - மின்வாரியம் வெளியிட்ட லிஸ்ட்
coimbatore power cut: கோவையில் நாளை (18-8-2026) எங்கெல்லாம் மின்சாரம் இருக்காது? - மின்வாரியம் வெளியிட்ட லிஸ்ட்
coimbatore power cut: கோவையில் நாளை (14-8-2026) எங்கெல்லாம் கரண்ட் கட்? - மின்வாரியம் வெளியிட்ட லிஸ்ட்
கோவையில் நாளை (14-8-2026) எங்கெல்லாம் கரண்ட் கட்? - மின்வாரியம் வெளியிட்ட லிஸ்ட்
coimbatore power cut: கோவையில் நாளை (13-8-2026) எங்கெல்லாம் கரண்ட் இருக்காது? - மின்வாரியம் வெளியிட்ட லிஸ்ட்
கோவையில் நாளை (13-8-2026) எங்கெல்லாம் கரண்ட் இருக்காது? - மின்வாரியம் வெளியிட்ட லிஸ்ட்

வீடியோ

SP Velumani On EPS : இபிஎஸ் எடுத்த தவறான முடிவுகள்? சசிகலா,டிடிவியை சேர்க்கணும்!அதிமுக சீனியர்கள் செக்
Kallakurichi Viral Video : ”என் கண்முன்னே வெட்டுறாங்களே! 10 ஆண்டு உழைப்பு போச்சே” கதறி அழுத தாய்
Vijay Sangeetha Divorce : விவாகரத்து வழக்கு வாபஸ்! சங்கீதா கொடுத்த திடீர் டிவிஸ்ட் காரணம் என்ன?
CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
CM Vijay: ”எல்லாம் கொடுக்கிறேன், லஞ்சம் மட்டும் வாங்காதீங்க” MLA-க்களுக்கு கார் அறிவித்து CM விஜய் கோரிக்கை
”எல்லாம் கொடுக்கிறேன், லஞ்சம் மட்டும் வாங்காதீங்க” MLA-க்களுக்கு கார் அறிவித்து CM விஜய் கோரிக்கை
Aavin Milk Price: ஆவின் பால் கொள்முதல் விலையை உயர்த்தி அறிவித்த CM விஜய் - ஒரு லிட்டருக்கு எவ்வளவு தெரியுமா?
ஆவின் பால் கொள்முதல் விலையை உயர்த்தி அறிவித்த CM விஜய் - ஒரு லிட்டருக்கு எவ்வளவு தெரியுமா?
IPL 2027: அடுத்த ஐபிஎல் தொடர் தொடங்கும் தேதி என்ன? போட்டிகளின் எண்ணிக்கை உயர்கிறதா? புதிய மாற்றங்கள்
அடுத்த ஐபிஎல் தொடர் தொடங்கும் தேதி என்ன? போட்டிகளின் எண்ணிக்கை உயர்கிறதா? புதிய மாற்றங்கள்
பணிந்த அரசு! ’கல்லூரி மாணவர்கள், இளைஞர்கள் போராடக்கூடாது’ கடும் எதிர்ப்பால் தடை உத்தரவு வாபஸ்!
பணிந்த அரசு! ’கல்லூரி மாணவர்கள், இளைஞர்கள் போராடக்கூடாது’ கடும் எதிர்ப்பால் தடை உத்தரவு வாபஸ்!
நடுத்தர SUV போர்; டாடா சியரா வருகையால் கியா செல்டோஸ்-க்கு கடும் போட்டி!- யாருக்கு முதலிடம்?
நடுத்தர SUV போர்; டாடா சியரா வருகையால் கியா செல்டோஸ்-க்கு கடும் போட்டி!- யாருக்கு முதலிடம்?
Hyundai Tucson: ரக்கட் ஆன டிசைன், பேக்கேஜ்ட் அம்சங்கள், ஹைப்ரிட் - முற்றிலும் புதிய டக்சன் SUV - விலை என்ன?
ரக்கட் ஆன டிசைன், பேக்கேஜ்ட் அம்சங்கள், ஹைப்ரிட் - முற்றிலும் புதிய டக்சன் SUV - விலை என்ன?
தோழர்களுக்கே குஜிலிமஸ்தா.! கூட்டணிக்காக கம்யூனிஸ்டுக்கு மிரட்டலா.? TVK அரசை போட்டு தாக்கும் அதிமுக
தோழர்களுக்கே குஜிலிமஸ்தா.! கூட்டணிக்காக கம்யூனிஸ்டுக்கு மிரட்டலா.? TVK அரசை போட்டு தாக்கும் அதிமுக
LIVE | Kerala Lottery Result Today (19.08.2026): கேரளா தனலட்சுமி லாட்டரி முடிவுகள் இன்று வெளியீடு! பரிசு யாருக்கு?
LIVE | Kerala Lottery Result Today (19.08.2026): கேரளா தனலட்சுமி லாட்டரி முடிவுகள் இன்று வெளியீடு! பரிசு யாருக்கு?
Embed widget