மேலும் அறிய

Coimbatore: மனைவிக்கு நினைவு மண்டபம் அமைத்து திருவுருவச்சிலைக்கு தினசரி பூஜை செய்து வழிபடும் விவசாயி

பழனிச்சாமி தனது மனைவியின் திருவுருவச்சிலைக்கு தினசரி மாலை இரண்டு வேளையும் தீபம் ஏற்றி ஊதுபத்தி கற்பூர தீபம் ஏற்றி பூஜை செய்து வழிபட்டு வருகிறார்.

கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் அருகே சிறுமுகை அடுத்துள்ள கணேசபுரம் பகுதியைச் சேர்ந்தவர் பழனிசாமி. 75 வயதான இவர் விவசாயியாக உள்ளார். இவரது மனைவி சரஸ்வதி. திருமணத்திற்கு பின்னர் கணவன் மனைவி இரண்டு பேரும் ஒருவருக்கொருவர் அன்பு காட்டி பாசத்துடனும், மகிழ்ச்சியுடனும் வாழ்ந்து வந்தனர். இவர்களுக்கு இரண்டு மகன்கள் உள்ளனர். கணவன் மனைவி இருவருக்கும் இடையே ஒரு நாள் கூட சண்டை சச்சரவு ஏற்பட்டது இல்லை என தெரிகிறது. இந்த நிலையில் கடந்த 2019 ஆண்டு தோட்டத்தில் வேலை செய்து கொண்டிருந்த சரஸ்வதி குளியல் அறைக்கு சென்ற போது, திடீரென மயங்கி விழுந்து பரிதாபமாக உயிரிழந்தார். 

Coimbatore: மனைவிக்கு நினைவு மண்டபம் அமைத்து திருவுருவச்சிலைக்கு தினசரி பூஜை செய்து வழிபடும் விவசாயி

இந்த அதிர்ச்சியை பழனிசாமியால் தாங்கிக் கொள்ள முடியவில்லை. கண்ணீர் விட்டு கதறி அழுத அவர், தனது மனைவியின் உடலை தோட்டத்திலேயே அடக்கம் செய்தார். பின்னர் தனது மனைவி சரஸ்வதிக்கு நினைவு மண்டபம் அமைக்க வேண்டும் என்ற எண்ணம் அவரது மனதில் தோன்றியது. இதனைத் தொடர்ந்து பழனிசாமி தனது மனைவியை அடக்கம் செய்த இடத்தில், நினைவு மண்டபம் அமைத்து மனைவி சரஸ்வதியின் திருவுருவச் சிலையை தனது மனைவி இறந்த ஓராண்டுக்கு பின்னர் நிறுவினார். பழனிச்சாமி தனது மனைவியின் திருவுருவச்சிலைக்கு தினசரி மாலை இரண்டு வேளையும் தீபம் ஏற்றி ஊதுபத்தி கற்பூர தீபம் ஏற்றி பூஜை செய்து வழிபட்டு வருகிறார். எங்காவது வெளியூர் சென்றால் பூஜை செய்வது தவறிவிடும் என்ற எண்ணத்தில் வெளியே எங்கும் செல்லாமல் தனது தோட்டத்திலேயே தனது மனைவியை நினைத்து கண்ணீர் சிந்தி வாழ் நாளை கழித்து வருகிறார். 

இது குறித்து விவசாயி பழனிசாமி கூறியதாவது, ”திருமணமான நாள் முதல் கணவன் மனைவி இரண்டு பேரும் மகிழ்ச்சியாக வாழ்ந்து வந்தோம். ஒரு நாள் கூட எங்களுக்குள் சண்டை சச்சரவு ஏற்படவில்லை. என்னை நல்ல முறையில் கவனித்து வந்தார். இரண்டு பேரும் ஒற்றுமையாக வாழ்ந்து வந்த நேரத்தில், திடீரென அவர் உயிரிழந்தது எனக்கு பெரிய அதிர்ச்சியை ஏற்படுத்தியது. அவரது நினைவால் நினைவு மண்டபம் அமைத்து அதில் அவரது திரு உருவச் சிலையை வைத்து காலை, மாலை இரண்டு வேளையும் கற்பூர தீபம் ஏற்றி வழிபட்டு வருகிறேன். 

Coimbatore: மனைவிக்கு நினைவு மண்டபம் அமைத்து திருவுருவச்சிலைக்கு தினசரி பூஜை செய்து வழிபடும் விவசாயி

இதற்காக திருமுருகன் பூண்டியில் உள்ள ஒரு சிற்ப கலைக்கூடத்தில் அவரது போட்டோவை கொடுத்து அவரைப் போலவே தத்ரூபமாக எனது மனைவியின் உருவச் சிலையை சிற்பமாக வண்ணம் தீட்டி வடிவமைத்துள்ளனர். மனைவி இறந்த பின்பு அவரது நினைவுகளுடன் வாழ்வதைவிட, ஒவ்வொருவரும் மனைவி தன்னுடன் வாழும் போது அவரை உயிருக்கு உயிராக அன்புடன் நேசித்து பாசம் செலுத்த வேண்டும்” எனத் தெரிவித்தார். உயிரிழந்த மனைவி நினைவாக சிலை அமைத்து கணவர் தினமும் பூஜை செய்து வருவது அப்பகுதி மக்களிடையே ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.

மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்

ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்

பேஸ்புக் பக்கத்தில் தொடர

ட்விட்டர் பக்கத்தில் தொடர

யூடியூபில் வீடியோக்களை காண

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

New Governors: 5 மாநிலங்களுக்கு புதிய ஆளுநர்கள் நியமனம் - அப்ப தமிழ்நாட்டுக்கு? குடியரசு தலைவர் அறிவிப்பு
New Governors: 5 மாநிலங்களுக்கு புதிய ஆளுநர்கள் நியமனம் - அப்ப தமிழ்நாட்டுக்கு? குடியரசு தலைவர் அறிவிப்பு
Christmas Celebration: நாடே உற்சாகம்.. நள்ளிரவில் தேவாலயங்களில் சிறப்பு பிரார்த்தனை, கிறிஸ்துமஸ் கொண்டாட்டம் கோலாகல
Christmas Celebration: நாடே உற்சாகம்.. நள்ளிரவில் தேவாலயங்களில் சிறப்பு பிரார்த்தனை, கிறிஸ்துமஸ் கொண்டாட்டம் கோலாகல
Tungsten Mining: பணிந்ததா மத்திய அரசு?:  டங்ஸ்டன் சுரங்க இடத்தை மறு ஆய்வு செய்ய பரிந்துரை.!
பணிந்ததா மத்திய அரசு?: டங்ஸ்டன் சுரங்க இடத்தை மறு ஆய்வு செய்ய பரிந்துரை.!
அண்டார்டிகா சிகரத்தில் ஏறி சாதனை படைத்த முதல் தமிழ் பெண் - குவியும் பாராட்டு
அண்டார்டிகா சிகரத்தில் ஏறி சாதனை படைத்த முதல் தமிழ் பெண் - குவியும் பாராட்டு
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

ADMK TVK Alliance | ’’அதிமுக தவெக கூட்டணி! நிச்சயம் ஆட்சியை பிடிக்கும்’’ பற்ற வைத்த அமீர் | AmeerAnnamalai vs Senthil Balaji: டார்கெட் செந்தில்பாலாஜி!அண்ணாமலை பலே ப்ளான்.. OK - சொன்ன மோடி!Vijayadharani Join TVK: தவெகவில் இணையும் விஜயதரணி? பாஜகவிற்கு TATA.. ஸ்கெட்ச் போட்ட விஜய்!TVK Vijay | தவெக-வின் அடுத்த சம்பவம்! 2025-ல் காத்திருக்கும் TWIST இறங்கி அடிக்கும் விஜய்! | Bussy

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
New Governors: 5 மாநிலங்களுக்கு புதிய ஆளுநர்கள் நியமனம் - அப்ப தமிழ்நாட்டுக்கு? குடியரசு தலைவர் அறிவிப்பு
New Governors: 5 மாநிலங்களுக்கு புதிய ஆளுநர்கள் நியமனம் - அப்ப தமிழ்நாட்டுக்கு? குடியரசு தலைவர் அறிவிப்பு
Christmas Celebration: நாடே உற்சாகம்.. நள்ளிரவில் தேவாலயங்களில் சிறப்பு பிரார்த்தனை, கிறிஸ்துமஸ் கொண்டாட்டம் கோலாகல
Christmas Celebration: நாடே உற்சாகம்.. நள்ளிரவில் தேவாலயங்களில் சிறப்பு பிரார்த்தனை, கிறிஸ்துமஸ் கொண்டாட்டம் கோலாகல
Tungsten Mining: பணிந்ததா மத்திய அரசு?:  டங்ஸ்டன் சுரங்க இடத்தை மறு ஆய்வு செய்ய பரிந்துரை.!
பணிந்ததா மத்திய அரசு?: டங்ஸ்டன் சுரங்க இடத்தை மறு ஆய்வு செய்ய பரிந்துரை.!
அண்டார்டிகா சிகரத்தில் ஏறி சாதனை படைத்த முதல் தமிழ் பெண் - குவியும் பாராட்டு
அண்டார்டிகா சிகரத்தில் ஏறி சாதனை படைத்த முதல் தமிழ் பெண் - குவியும் பாராட்டு
"செந்தில்பாலாஜி என் வீட்டிற்கு வந்து, என் அம்மா கையில் சாப்பிட்டுள்ளார்": அண்ணாமலை பரபர பேட்டி.!
SET: டிஆர்பி மூலமே மாநில ஆசிரியர் தகுதித் தேர்வு; உறுதியாகச் சொன்ன அமைச்சர் செழியன்- இதுதான் காரணம்!
SET: டிஆர்பி மூலமே மாநில ஆசிரியர் தகுதித் தேர்வு; உறுதியாகச் சொன்ன அமைச்சர் செழியன்- இதுதான் காரணம்!
80 பவுன் நகை கொள்ளை வழக்கை விசாரிக்க லஞ்சம் பெற்றதாக போலீசார் மீது வழக்கு பதிவு!
80 பவுன் நகை கொள்ளை வழக்கை விசாரிக்க லஞ்சம் பெற்றதாக போலீசார் மீது வழக்கு பதிவு!
DMK Vs ADMK: திமுக, அதிமுகவினரிடையே இடையே கடும் மோதல்... சேலம் மாநகராட்சியில் பரபரப்பு
DMK Vs ADMK: திமுக, அதிமுகவினரிடையே இடையே கடும் மோதல்... சேலம் மாநகராட்சியில் பரபரப்பு
Embed widget