மேலும் அறிய

மின் கட்டண உயர்வை கண்டித்து கதவடைப்பு போராட்டம் ; கோவை தொழில் கூட்டமைப்பினர் அறிவிப்பு

”18 தொழில் அமைப்புக்கள் இணைந்து, கோவையில் ஒரு நாள் உண்ணாவிரதம் போராட்டம் நடத்த உள்ளோம். அதே நாளில் தொழில் கூடங்களை மூடி ஒரு நாள் கதவடைப்பு போராட்டம் நடத்தப்படும்”

கோவையில் பல்வேறு தொழில் அமைப்புகளின் கூட்டமைப்பான போசியா சார்பாக கூட்டமைப்பின் நிர்வாகிகள் சார்பாக செய்தியாளர்கள் சந்திப்பு பந்தய சாலை பகுதியில் சீமா அரங்கில் நடைபெற்றது. இதில் கூட்டமைப்பின் ஒருங்கிணைப்பாளர்கள் ஜேம்ஸ், சிவசண்முககுமார், சுருளிவேல் உள்ளிட்டோர் பேசினர். அப்போது பேசிய அவர்கள், ”இந்தியாவின் முதுகெலும்பாக உள்ள சிறு குறு தொழில் செய்வோர் ஏற்கனவே கடந்த இரண்டரை வருடங்களாக கொரோனா தொற்று காரணமாக கடுமையாக பொருளாதார நெருக்கடிகளை சந்தித்து வருகின்றனர். இந்நிலையில் அண்மையில் தமிழக அரசு அறிவித்த, மின் கட்டண உயர்வு கடுமையான பாதிப்புகளை ஏற்படுத்தும்.

தொழில் நிறுவனங்களுக்கு காலை மற்றும் மாலையில் 6 முதல் 10 மணி வரை என நாள்தோறும் 8 மணி நேரத்திற்கு பீக் ஹவர் கட்டணம் நிர்ணயித்துள்ளது. இது 100 சதவீதம் ஒத்துவராது. இதில் 25 சதவீத கூடுதல் கட்டணத்தில் 10 சதவீதம் மட்டுமே அரசு குறைத்துள்ளது. பீக் ஹவர் கட்டணத்தை நீக்க வேண்டும். 112 கிலோ வாட் வரையிலான நிலை கட்டணத்திற்கு 50 ரூபாய்க்குள் கட்டணம் நிர்ணயம் செய்ய வேண்டும். இதேபோல நிலை கட்டண உயர்வை ஏற்க முடியாது. இதன் காரணமாக 50, 60 சதவீதம் கூடுதல் கட்டணம் செலுத்த வேண்டிய நிலை ஏற்படும். இந்த சுமையை குறுந்தொழில் முனைவோர்களால் தாங்க முடியாது. 

மின் கட்டண உயர்வை கண்டித்து கதவடைப்பு போராட்டம் ; கோவை தொழில் கூட்டமைப்பினர் அறிவிப்பு

குறிப்பாக சிறு குறு தொழில்கள் முடங்கும் அளவிற்கு பீக் அவர் கட்டணம் நிர்ணயம் செய்யப்பட்டு இருப்பதன் காரணமாக தமிழகத்தின் அடையாளமாக உள்ள சிறு குறு தொழில் முழுவதும் முடங்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது. எனவே, குறு சிறு தொழில்கள் முனைவோர்கள் பயன்படுத்தும் LT.CT (112 kw) -க்கான பீக் அவர் கட்டண உயர்வை தமிழக அரசு முழுமையாக திரும்ப பெற வேண்டும். LT.CT -யின் மின்சாரத்தை பயன்படுத்தும் குறு சிறு தொழில்களை பாதுகாக்க 112 kw வரை முன்பு இருந்த நிலைக்கட்டணம் ரூபாய் 35 மட்டும் தொடர அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். இரண்டு வகையான பீக் அவர் கட்டணத்தை முழுமையாக திரும்ப பெற வேண்டும். போசியா கூட்டமைப்பின் சார்பில் 18 தொழில் அமைப்புக்கள் இணைந்து, கோவையில் ஒரு நாள் உண்ணாவிரதம் போராட்டம் நடத்த உள்ளோம். அதே நாளில் தொழில் கூடங்களை மூடி ஒரு நாள் கதவடைப்பு போராட்டம் நடத்தப்படும்” எனத் தெரிவித்தனர்.

உயர்த்தப்பட்டுள்ள மின்சார கட்டணத்தின்படி குறு, சிறு மற்றும் நடுத்தரத் தொழில் நிறுவனங்கள் அதிகப்படியான கட்டணத்தை செலுத்த வேண்டி உள்ளதால், ஒருநாளின் உச்சப்பட்ச பயன்பாட்டு நேரத்தில் விதிக்கப்பட்ட மின்கட்டணத்தை (Peak Hour Charges) குறைக்கும்படி பல்வேறு குறு, சிறு மற்றும் நடுத்தரத் தொழில் நிறுவனங்கள் மற்றும் தொழிற்சங்கங்கள் அரசுக்கு கோரிக்கை விடுத்தனர். இதையடுத்து பீக் ஹவர்களுக்கு வசூலிக்கப்படும் மின்கட்டணத்தை 25 சதவிகிதத்திலிருந்து 15 சதவிகிதமாக தமிழ்நாடு அரசு குறைத்துள்ளது. அதேசமயம் தமிழ்நாடு அரசு சிறு, குறு தொழில் நிறுவனங்களுக்கு மின் கட்டணம் குறைப்பு செய்திருப்பது ஏமாற்றம் அளிக்கிறது எனவும், இது வெறும் கண் துடைப்பு. குறுந்தொழில் முனைவோர்களின் கோரிக்கைகளை அரசு நிறைவேற்றவில்லை எனவும் குறுந்தொழில் முனைவோர்கள் குற்றம்சாட்டி இருந்தனர். 

மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்

ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்

பேஸ்புக் பக்கத்தில் தொடர

ட்விட்டர் பக்கத்தில் தொடர

யூடியூபில் வீடியோக்களை காண

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

Viduthalai 2 Review :  வெற்றிமாறனின் விடுதலை 2 முழு விமர்சனம்
Viduthalai 2 Review : வெற்றிமாறனின் விடுதலை 2 முழு விமர்சனம்
TVK Vijay : ”ஈரோடு இடைத் தேர்தல் குறித்து முக்கிய முடிவு எடுத்தார் விஜய்” விரைவில் வெளியாகிறது அறிவிப்பு..!
TVK Vijay : ”ஈரோடு இடைத் தேர்தல் குறித்து முக்கிய முடிவு எடுத்தார் விஜய்” விரைவில் வெளியாகிறது அறிவிப்பு..!
TN Assembly: தேதி குறித்த சபாநாயகர்! 2025ம் ஆண்டில் முதல் சட்டசபை கூட்டம் - எப்போ தெரியுமா?
TN Assembly: தேதி குறித்த சபாநாயகர்! 2025ம் ஆண்டில் முதல் சட்டசபை கூட்டம் - எப்போ தெரியுமா?
CAT 2024 : கேட் தேர்வு முடிவுகள் வெளியீடு; 14 பேர் நூற்றுக்கு நூறு- ஆண்களே அதிகம்!
CAT 2024 : கேட் தேர்வு முடிவுகள் வெளியீடு; 14 பேர் நூற்றுக்கு நூறு- ஆண்களே அதிகம்!
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

”என்னை கொல்ல போறாங்க” தலையில் கட்டுடன் சி.டி.ரவி! தட்டித் தூக்கிய POLICE”வெட்கமா இல்லையா ராகுல்” சுற்றிவளைத்த MP-க்கள்! கூலாக பதில் சொன்ன ராகுல்Ashwin Profile: ”நான் சொடுக்கு பந்து போடணுமா?”தலையெழுத்தை மாற்றிய COACH நாயகன் அஸ்வினின் கதை..!Rahul gandhi on MP injury: ”ஆமா...தள்ளிவிட்டேன்! என்னையவே தடுக்குறீங்களா?” ஆதாரத்துடன் பேசிய ராகுல்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Viduthalai 2 Review :  வெற்றிமாறனின் விடுதலை 2 முழு விமர்சனம்
Viduthalai 2 Review : வெற்றிமாறனின் விடுதலை 2 முழு விமர்சனம்
TVK Vijay : ”ஈரோடு இடைத் தேர்தல் குறித்து முக்கிய முடிவு எடுத்தார் விஜய்” விரைவில் வெளியாகிறது அறிவிப்பு..!
TVK Vijay : ”ஈரோடு இடைத் தேர்தல் குறித்து முக்கிய முடிவு எடுத்தார் விஜய்” விரைவில் வெளியாகிறது அறிவிப்பு..!
TN Assembly: தேதி குறித்த சபாநாயகர்! 2025ம் ஆண்டில் முதல் சட்டசபை கூட்டம் - எப்போ தெரியுமா?
TN Assembly: தேதி குறித்த சபாநாயகர்! 2025ம் ஆண்டில் முதல் சட்டசபை கூட்டம் - எப்போ தெரியுமா?
CAT 2024 : கேட் தேர்வு முடிவுகள் வெளியீடு; 14 பேர் நூற்றுக்கு நூறு- ஆண்களே அதிகம்!
CAT 2024 : கேட் தேர்வு முடிவுகள் வெளியீடு; 14 பேர் நூற்றுக்கு நூறு- ஆண்களே அதிகம்!
Women Mentality: ”பேசிக்கிட்டே இருக்கா மச்சி” மனைவிகளை பற்றி புலம்பும் கணவன்கள் - பெண்களின் அதீத திறமைகள் தெரியுமா?
Women Mentality: ”பேசிக்கிட்டே இருக்கா மச்சி” மனைவிகளை பற்றி புலம்பும் கணவன்கள் - பெண்களின் அதீத திறமைகள் தெரியுமா?
’’சட்டத்தைக் கையில் எடுத்த ஆளுநர்; கவனித்து கொண்டுதான் இருக்கிறோம்’’- அமைச்சர் செழியன் ஆவேசம்!
’’சட்டத்தைக் கையில் எடுத்த ஆளுநர்; கவனித்து கொண்டுதான் இருக்கிறோம்’’- அமைச்சர் செழியன் ஆவேசம்!
ரெட் லைட் ஏரியாவில் 900 தமிழ் பெண்கள்! பம்பாயை அலறவிட்ட தமிழக போலீஸ் - 90ல் நடந்தது என்ன?
ரெட் லைட் ஏரியாவில் 900 தமிழ் பெண்கள்! பம்பாயை அலறவிட்ட தமிழக போலீஸ் - 90ல் நடந்தது என்ன?
Breaking News LIVE : ஹரியானா முன்னாள் முதலமைச்சர் ஓம் பிரகாஷ் சவுதாலா காலமானார்
Breaking News LIVE : ஹரியானா முன்னாள் முதலமைச்சர் ஓம் பிரகாஷ் சவுதாலா காலமானார்
Embed widget