மேலும் அறிய

கோவையில் ஏப்ரல் 1 முதல் காலி மதுபான பாட்டில்கள் திரும்ப பெறும் திட்டம் அமல் - மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு

ஏற்கனவே நீலகிரி மாவட்டத்தில் இந்த திட்டம் அமல்படுத்தப்பட்டுள்ள நிலையில், கோவை மாவட்டத்திலும் ஏப்ரல் 1ம் தேதி முதல் காலி மதுபாட்டில்களை திரும்ப பெறும் திட்டம் அமல்படுத்தப்பட உள்ளது

கோவை மாவட்டத்தில் காலி மதுபான பாட்டில்களை டாஸ்மாக் கடைகளிலேயே திரும்பப் பெறும் திட்டம் ஏப்ரல் 1 ம் தேதி முதல் அமல்படுத்த இருப்பதாக கோவை மாவட்ட ஆட்சியர் கிராந்தி குமார் பாடி தெரிவித்துள்ளார்.

நீலகிரி மாவட்டத்தில் உள்ள வனப்பகுதிகள் மற்றும் சுற்றுலாத் தலங்களில் காலி மதுபாட்டில்கள் வீசப்படுவதால், வனவிலங்குகள் பாதிக்கப்படுவது தொடர்பான வழக்கில், இயற்கை சூழலுக்கும், வனவிலங்குகளுக்கும் ஏற்படும் பாதிப்பை போக்க சென்னை உயர்நீதிமன்றம், காலி மதுபான பாட்டில்களை திரும்ப பெறும் திட்டத்தை நடைமுறைபடுத்த உத்திரவிட்டது. இதன்படி நீலகிரி மாவட்டத்தில் 75 டாஸ்மாக் மதுபான கடைகளில், மதுபான பாட்டில்களின் மேல் ஸ்டிக்கர் ஒட்டப்பட்டு கூடுதலாக 10 ரூபாய் வசூல் செய்யப்படுகின்றது. டாஸ்மாக் மதுபான கடையில் மது பாட்டில் வாங்கி பயன்படுத்திய பின்னர், காலி மது பாட்டில்களை மீண்டும் டாஸ்மாக் கடைகளில் கொடுத்து 10 ரூபாயை வாடிக்கையாளர்கள் பெற்றுக் கொள்ளலாம். உள்ளூர் மக்களும் சுற்றுலா பயணிகளும் பாட்டில்களை பொது இடங்களில் வீசாமல் இருக்கவும், சுற்று சூழல் காக்கவும் இந்த புதிய நடைமுறை அமலுக்கு கொண்டு வரப்பட்டது. நீலகிரி மாவட்டத்தில் இந்த திட்டம் வெற்றிகரமாக அமலுக்கு வந்த நிலையில், இதை பிற மாவட்டங்களிலும் அமல்படுத்த நீதிமன்றம் அறிவுறுத்தி இருந்தது.  

இதனையடுத்து கோவை மாவட்டத்தில் காலி மதுபான பாட்டில்களை திரும்பப் பெறும் திட்டத்தை வரும்  ஏப்ரல் 1 ம் தேதி முதல் அமல்படுத்த இருப்பதாக கோவை மாவட்ட நிர்வாகம் அறிவித்துள்ளது. இது தொடர்பாக அறிக்கை வெளியிட்டுள்ள மாவட்ட ஆட்சியர் கிராந்தி குமார் பாடி, வரும் ஏப்ரல் 1ம் தேதி முதல் மதுபான கடைகளில் விற்பனை செய்யப்படும் மது பாட்டில்களுக்கு கூடுதலாக பத்து ரூபாய் பெறப்படும் எனவும், இதற்கான ஸ்டிக்கர் மது பாட்டிலிலேயே ஓட்டப்பட்டு விற்பனை செய்யப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. காலி மதுபான பாட்டில்களை மீண்டும் டாஸ்மாக் கடைகளில் ஒப்படைத்து பத்து ரூபாய் பணத்தை திரும்ப பெற்றுக் கொள்ளலாம் எனவும் அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மதுபான பாட்டில்களை, டாஸ்மாக் மதுபான கடைகளில் ஓப்படைத்து மாவட்டத்தின் வனப்பகுதிகளையும், விளைநிலங்களையும் பாதுகாக்க ஒத்துழைக்க வேண்டும் என அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கோவை மாவட்டத்தில் வடக்கு கோட்டத்தில் 166 டாஸ்மாக் கடைகளும், தெற்கு கோட்டத்தில் 139 டாஸ்மாக் கடைகளும் என மொத்தம் 305 டாஸ்மாக் மதுபானக்கடைகள் செயல்பட்டு வருகின்றன. உயர்நீதிமன்ற உத்தரவுப்படி ஏற்கனவே நீலகிரி மாவட்டத்தில் இந்த திட்டம் அமல்படுத்தப்பட்டுள்ள நிலையில், கோவை மாவட்டத்திலும்  ஏப்ரல் 1ம் தேதி முதல் காலி மது பாட்டில்களை திரும்ப பெறும் திட்டம் அமல்படுத்தப்பட உள்ளது குறிப்பிடத்தக்கது.

மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்

ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்

பேஸ்புக் பக்கத்தில் தொடர

ட்விட்டர் பக்கத்தில் தொடர

யூடியூபில் வீடியோக்களை காண

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

”தெரிஞ்சுக்குங்க விஜய் - பெண்களுக்கு பாதுகாப்பான மாநிலம் தமிழ்நாடுதான்”  அமைச்சர் கீதா ஜீவன் பதிலடி அறிக்கை..!
”தெரிஞ்சுக்குங்க விஜய் - பெண்களுக்கு பாதுகாப்பான மாநிலம் தமிழ்நாடுதான்” அமைச்சர் கீதா ஜீவன் பதிலடி அறிக்கை..!
"புதிய முதல்வர் இல்லை ; காபந்து முதல்வர்” ஏக்நாத் ஷிண்டேவை அறிவித்தார் ஆளுநர்..!
School Teachers: ’’இதை செய்தால் கட்டாயப் பணி ஓய்வு; சான்றிதழ்கள் ரத்து’’- பள்ளி ஆசிரியர்களுக்கு கடும் எச்சரிக்கை
School Teachers: ’’இதை செய்தால் கட்டாயப் பணி ஓய்வு; சான்றிதழ்கள் ரத்து’’- பள்ளி ஆசிரியர்களுக்கு கடும் எச்சரிக்கை
“அடுத்த முதலமைச்சர் யார்..?” 3 பேருக்குள் நடக்கும் போட்டா போட்டி..!
“அடுத்த முதலமைச்சர் யார்..?” 3 பேருக்குள் நடக்கும் போட்டா போட்டி..!
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

”தெலுங்குல பேச முடியாது.. தமிழ்ல தான் பேசுவேன்”அல்லு அர்ஜுன் THUGLIFEபள்ளியில் சாதியா? PAINT-ஐ எடுத்த அன்பில்! அரசுப் பள்ளியில் அதிரடி”அரசியலில் உன் மகன் காலி!” பழி தீர்த்த DK சிவக்குமார்! கதறும் அமைச்சர் குமாரசாமி!அடிதடியில் இறங்கிய அதிமுகவினர்! செல்லூர் ராஜூ vs டாக்டர் சரவணன்! நடந்தது என்ன?

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
”தெரிஞ்சுக்குங்க விஜய் - பெண்களுக்கு பாதுகாப்பான மாநிலம் தமிழ்நாடுதான்”  அமைச்சர் கீதா ஜீவன் பதிலடி அறிக்கை..!
”தெரிஞ்சுக்குங்க விஜய் - பெண்களுக்கு பாதுகாப்பான மாநிலம் தமிழ்நாடுதான்” அமைச்சர் கீதா ஜீவன் பதிலடி அறிக்கை..!
"புதிய முதல்வர் இல்லை ; காபந்து முதல்வர்” ஏக்நாத் ஷிண்டேவை அறிவித்தார் ஆளுநர்..!
School Teachers: ’’இதை செய்தால் கட்டாயப் பணி ஓய்வு; சான்றிதழ்கள் ரத்து’’- பள்ளி ஆசிரியர்களுக்கு கடும் எச்சரிக்கை
School Teachers: ’’இதை செய்தால் கட்டாயப் பணி ஓய்வு; சான்றிதழ்கள் ரத்து’’- பள்ளி ஆசிரியர்களுக்கு கடும் எச்சரிக்கை
“அடுத்த முதலமைச்சர் யார்..?” 3 பேருக்குள் நடக்கும் போட்டா போட்டி..!
“அடுத்த முதலமைச்சர் யார்..?” 3 பேருக்குள் நடக்கும் போட்டா போட்டி..!
”பொங்கல் அன்று நடக்க இருந்த சி.ஏ. தேர்வு தேதி மாற்றம்” தமிழகத்தின் அழுத்தத்திற்கு பணிந்தது மத்திய அரசு..!
”பொங்கல் அன்று நடக்க இருந்த சி.ஏ. தேர்வு தேதி மாற்றம்” தமிழகத்தின் அழுத்தத்திற்கு பணிந்தது மத்திய அரசு..!
Cent Govt On TN Delta: டெல்டா மக்களை ஏமாற்றிய எடப்பாடி பழனிசாமி? காட்டிக்கொடுத்த மத்திய அரசு - வாக்குக்காக இப்படியா?
Cent Govt On TN Delta: டெல்டா மக்களை ஏமாற்றிய எடப்பாடி பழனிசாமி? காட்டிக்கொடுத்த மத்திய அரசு - வாக்குக்காக இப்படியா?
TN Rain Update : பசங்களா..! கனமழை எதிரொலி - 3 மாவட்டங்களில் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை, ரெட் அலெர்ட் எச்சரிக்கை
TN Rain Update : பசங்களா..! கனமழை எதிரொலி - 3 மாவட்டங்களில் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை, ரெட் அலெர்ட் எச்சரிக்கை
IPL Auction 2025: ஐபிஎல் ஏலம் முடிந்தது - 10 அணிகளின் மொத்த வீரர்களும், கெத்தான பிளேயிங் லெவனும் - சிஎஸ்கே Vs மும்பை
IPL Auction 2025: ஐபிஎல் ஏலம் முடிந்தது - 10 அணிகளின் மொத்த வீரர்களும், கெத்தான பிளேயிங் லெவனும் - சிஎஸ்கே Vs மும்பை
Embed widget