மேலும் அறிய

கோவை போலீஸ் துணை கமிஷனர் தன்னை சிம்பு மாதிரி நினைத்துள்ளார் - எஸ்.பி.வேலுமணி

மு.க.ஸ்டாலின் என்ன கடவுளா? இவரை போல் எத்தனையோ பேர் முதல்வராக வந்துள்ளனர்? ஆனால் இவ்வளவு மோசமான பழிவாங்கும் வஞ்சகர்கள் இருந்ததில்லை.

மின் கட்டணம் மற்றும் சொத்து வரி உயர்வை கண்டித்து அதிமுக சார்பில் இன்று மாநிலம் தழுவிய ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதன் ஒரு பகுதியாக கோவை தெற்கு வட்டாட்சியர் அலுவலகம் முன்பாக  ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் அதிமுக சட்டமன்ற உறுப்பினர்கள் எஸ்.பி.வேலுமணி, அம்மன் அர்ச்சுணன், பி.ஆர்.ஜி.அருண்குமார், தாமோதரன், ஏ.கே.செல்வராஜ், கே.ஆர்.ஜெயராம், கந்தசாமி, அமுல் கந்தசாமி உள்ளிட்டோர் பங்கேற்றனர். ஆர்ப்பாட்டத்தின் போது உரையாற்றிய முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி, ”கடந்த ஒன்றரை ஆண்டில் திமுக எந்த திட்டத்தையும் நிறைவேற்றவில்லை.  ஆனால் மின்கட்டணம் மற்றும் சொத்து வரியை உயர்த்தாமல் இருந்தாலே மக்கள் நிம்மதியாக இருப்பார்கள். 

அதிமுக ஆட்சியில் வாரம் தோறும் ஆட்சியர் அலுவலகத்தில் ஆய்வு கூட்டம் நடத்தி மருந்து தெளிப்பு உள்ளிட்ட பணிகளை முடக்கி விடுவோம். ஆனால் இன்று ஒன்றும் செய்வதில்லை. எனக்கும் மு.க.ஸ்டாலினுக்கும் என்ன இருக்கிறது? எதற்காக என் வீட்டில் மூன்று முறை ரெய்டு?

கோவை போலீஸ் துணை கமிஷனர் தன்னை சிம்பு மாதிரி நினைத்துள்ளார் - எஸ்.பி.வேலுமணி

ஜெயலலிதா மறைவிற்கு பிறகு குறுக்கு வழியில் ஆட்சியை பிடிக்க ஸ்டாலின் முயன்ற போது, அதற்கு முட்டுக்கட்டையாக இருந்தோம். கட்சிக்கு விசுவாசமாக இருந்து எடப்பாடி பழனிசாமிக்கு உறுதுணையாக இருந்தோம். ஓ.பி.எஸ் கட்சியில் இணைக்கவும், நாடாளுமன்ற தேர்தலில் கூட்டணி அமைவதற்கும் முக்கிய காரணமாக இருந்தேன். என் கட்சியை ஆட்சியை காப்பாற்ற உணர்வு பூர்வமாக செயல்பட்டோம். எத்தனை வழக்குகள் போட்டாலும் அஞ்ச மாட்டேன். நீதிமன்றத்தில் பார்த்துக் கொள்வோம். என் வீட்டில் மூன்று முறை ரெய்டு நடத்தி என்ன எடுத்தீர்கள்? பத்து ஆண்டு கால ஆட்சியில் கட்டப்பஞ்சாயத்து இல்லை. லஞ்சம் இல்லை. மக்களுக்கு பாதுகாப்பாக இருந்தோம். காவல் துறை சுதந்திரமாக செயல்பட்டது. என் வீட்டில் ரெய்டு நடந்தபோது காவல் துறையினர் எம்.எல்.ஏக்களை கையை பிடித்து இழுத்து தள்ளினார்கள்.

தொண்டர்களை தாக்கினார்கள். காவல் துறைக்கு யார் இந்த அதிகாரத்தை கொடுத்தது? ஸ்டாலினுக்கு காவல் துறை கைகூலியாகவும், அடிமையாகவும் உள்ளது. எங்கள் சகோதரர்கள் மீது கை வைத்த காவல் துறையினர் சட்டையை கழட்டாமல் விட மாட்டோம். இதுகுறித்து மனித உரிமை ஆணையத்தில் புகாரளிப்போம். கொள்ளை, பாலியல் வன்கொடுமை போன்றவற்றை தடுக்க காவல்துறைக்கு தைரியம் இல்லை. காவல் துறை அத்துமீறலுக்கு பதில் சொல்லியே ஆக வேண்டும்.

கோவை போலீஸ் துணை கமிஷனர் தன்னை சிம்பு மாதிரி நினைத்துள்ளார் - எஸ்.பி.வேலுமணி

மு.க.ஸ்டாலின் என்ன கடவுளா? இவரை போல் எத்தனையோ பேர் முதல்வராக வந்துள்ளனர்? ஆனால் இவ்வளவு மோசமான பழிவாங்கும் வஞ்சகர்கள் இருந்ததில்லை. கொலுசு மற்றும் பணம் கொடுத்து ஓட்டு வாங்கி இன்று எவ்வளவு வரியை உயர்த்தியுள்ளனர்? குழந்தைக்கு பொம்மை வழங்குவது போல் பணம் வழங்கி இன்று வரியை உயர்த்தியுள்ளனர்.

திமுக அமைச்சர்கள் இன்று லஞ்சம் வாரி குவிக்கின்றனர். கந்துவட்டி போல் வசூலிக்கின்றனர். 50 ஆயிரம் கோடிக்கு மேல் ஸ்டாலின் குடும்பம் லஞ்சம் பெற்றுள்ளது. யார் யாரிடம் வாங்கினீர்கள் என்பது எங்களுக்கும் தெரியும் சும்மா விட மாட்டோம். கோவை மாநகர காவல் துறை துணை ஆணையர் சிலம்பரசன் தன்னை சினிமா சிம்பு மாதிரி நினைத்துள்ளார். இதுபோல எத்தனை பேரை பார்த்துள்ளோம்? கட்சி பெண்களையும் வழக்கறிஞர்களையும் தொட உங்களுக்கு யார் அதிகாரம் கொடுத்தார்கள்? நாங்கள் ஆட்சியில் இருந்தபோது காவல்துறைக்கு எவ்வளவு மரியாதை கொடுத்தோம்?

திமுக ஆட்சிக்கு வந்த பிறகு கோவைக்கு என்ன செய்தார்கள்? ஸ்மார்ட் சிட்டி திட்டத்தை கிடப்பில் போட்டு விட்டனர். எந்த வேலையையும் திமுக அரசு செய்யவில்லை. சாலைகள் போட மாநகராட்சி நிர்வாகத்திற்கு வக்கில்லை. கோவை ஆட்சியர் பொம்மை போல் உள்ளார். திமுகவினரின் ஒரே கொள்கை கொள்ளை அடிப்பது மட்டுமே.

திமுக மக்களை பற்றி கவலைப்படாத அரசு. கட்டுமான அப்ரூவல் ஜி ஸ்கொயருக்கும் மட்டும் வழங்கப்படுகிறது. கூட்டணி கட்சிகள் உட்பட இன்று எந்த தரப்பும் நன்றாக இல்லை. மீடியா ஸ்டாலினை கைவிட்டால் ஆட்சி முடிந்து விடும். நாடாளுமன்ற தேர்தலில் நாற்பது தொகுதிகளிலும் அதிமுக வெல்லும். சட்டமன்ற தேர்தலில் 200 தொகுதிக்கு மேல் வென்று எடப்பாடி பழனிசாமி முதலமைச்சராவர். இந்த ஆட்சி மண்ணை கவ்வும். இதற்கு பதில் சொல்லும் காலம் வரும்” எனத் தெரிவித்தார். 

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

TN Rain: 18 மாவட்டங்களில் மழைதான்! அடுத்த 3 மணி நேரத்திற்கு முன்னெச்சரிக்கையாக இருங்க மக்களே!
TN Rain: 18 மாவட்டங்களில் மழைதான்! அடுத்த 3 மணி நேரத்திற்கு முன்னெச்சரிக்கையாக இருங்க மக்களே!
Breaking News LIVE, July 7 :  ஆம்ஸ்ட்ராங் இறுதி ஊர்வலம்: 2 ஆயிரத்திற்கும் மேற்பட்ட காவல்துறையினர் பாதுகாப்பு!
Breaking News LIVE, July 7 : ஆம்ஸ்ட்ராங் இறுதி ஊர்வலம்: 2 ஆயிரத்திற்கும் மேற்பட்ட காவல்துறையினர் பாதுகாப்பு!
EPS - Annamalai: நான் துரோகியா? அண்ணாமலைதான் பச்சோந்தி; சுயநலவாதி ஓபிஎஸ்: வச்சி செய்த இபிஎஸ்
EPS - Annamalai: நான் துரோகியா? அண்ணாமலைதான் பச்சோந்தி; சுயநலவாதி ஓபிஎஸ்: வச்சி செய்த இபிஎஸ்
யாரோ துரத்துவதுபோல கனவு வருகிறா?ஜோதிடம் சொல்லும் காரணம் என்ன?
யாரோ துரத்துவதுபோல கனவு வருகிறா?ஜோதிடம் சொல்லும் காரணம் என்ன?
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Mayawati in Armstrong Funeral |  Armstrong Murder | உண்மையான குற்றவாளிகள் யார்?அஸ்ரா கர்க் அதிர்ச்சி தகவல் ஆம்ஸ்ட்ராங் படுகொலை..Armstrong Murder : சாமானியன் To தலைவன்!படுகொலை - பகீர் தகவல்! யார் இந்த ஆம்ஸ்ட்ராங்?BSP Armstrong death | ஆர்ம்ஸ்ட்ராங் படுகொலை

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
TN Rain: 18 மாவட்டங்களில் மழைதான்! அடுத்த 3 மணி நேரத்திற்கு முன்னெச்சரிக்கையாக இருங்க மக்களே!
TN Rain: 18 மாவட்டங்களில் மழைதான்! அடுத்த 3 மணி நேரத்திற்கு முன்னெச்சரிக்கையாக இருங்க மக்களே!
Breaking News LIVE, July 7 :  ஆம்ஸ்ட்ராங் இறுதி ஊர்வலம்: 2 ஆயிரத்திற்கும் மேற்பட்ட காவல்துறையினர் பாதுகாப்பு!
Breaking News LIVE, July 7 : ஆம்ஸ்ட்ராங் இறுதி ஊர்வலம்: 2 ஆயிரத்திற்கும் மேற்பட்ட காவல்துறையினர் பாதுகாப்பு!
EPS - Annamalai: நான் துரோகியா? அண்ணாமலைதான் பச்சோந்தி; சுயநலவாதி ஓபிஎஸ்: வச்சி செய்த இபிஎஸ்
EPS - Annamalai: நான் துரோகியா? அண்ணாமலைதான் பச்சோந்தி; சுயநலவாதி ஓபிஎஸ்: வச்சி செய்த இபிஎஸ்
யாரோ துரத்துவதுபோல கனவு வருகிறா?ஜோதிடம் சொல்லும் காரணம் என்ன?
யாரோ துரத்துவதுபோல கனவு வருகிறா?ஜோதிடம் சொல்லும் காரணம் என்ன?
Aadi Month 2024: பக்தர்களே! ஆடி மாதம் கட்டாயம் செல்ல வேண்டிய கோயில்கள் எது? எது? முழு விவரம்
Aadi Month 2024: பக்தர்களே! ஆடி மாதம் கட்டாயம் செல்ல வேண்டிய கோயில்கள் எது? எது? முழு விவரம்
Amstrong : பூர்வகுடிகளின் நாயகன் ஆம்ஸ்ட்ராங்... நடிகர் சாய் தீனா அஞ்சலி
Amstrong : பூர்வகுடிகளின் நாயகன் ஆம்ஸ்ட்ராங்... நடிகர் சாய் தீனா அஞ்சலி
ஆம்ஸ்ட்ராங்க் உடல் பொத்தூரில் அடக்கம்.. பெரம்பூர் கட்சி அலுவலக இடத்தில் நினைவிடம்.. நீதிமன்றம் அனுமதி!
ஆம்ஸ்ட்ராங்க் உடல் பொத்தூரில் அடக்கம்.. பெரம்பூர் கட்சி அலுவலக இடத்தில் நினைவிடம்!
பைக்கில் சென்ற தம்பதி.. மோதிய BMW கார்.. வாகனத்தில் சிக்கி 100 மீட்டருக்கு இழுத்து செல்லப்பட்ட பெண்!
பைக்கில் சென்ற தம்பதி.. மோதிய BMW கார்.. வாகனத்தில் சிக்கி 100 மீட்டருக்கு இழுத்து செல்லப்பட்ட பெண்!
Embed widget