காந்தி ஜெயந்தி தினம் ; இறைச்சி விற்பனைக்கு தடை விதித்த கோவை மாநகராட்சி
இந்த உத்தரவை மீறி செயல்படுவோர் மீது மாநகராட்சி அதிகாரிகளால் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என மாநகராட்சி ஆணையாளர் பிரதாப் தெரிவித்துள்ளார்.
கோவை மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் காந்தி ஜெயந்தி தினத்தன்று இறைச்சி விற்பனைக்கு தடை விதித்து மாநகராட்சி ஆணையாளர் பிரதாப் உத்தரவிட்டுள்ளார்.
இந்திய நாட்டின் சுதந்திரத்திற்காக பாடுபட்ட மகாத்மா காந்தியடிகள், நாட்டின் தேச தந்தை என போற்றப்படுகிறார். ஆண்டுதோறும் காந்தியடிகளின் பிறந்த நாளான அக்டோபர் 2 ம் தேதி காந்தி ஜெயந்தி தினமாக கொண்டாடப்பட்டு வருகிறது. இந்த நாளில் மதுபானக் கடைகளுக்கு விடுமுறை அளிக்கப்படுவது வழக்கம். இந்நிலையில் கோவை மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் இறைச்சி விற்பனைக்கு தடை விதித்து மாநகராட்சி நிர்வாகம் உத்தரவு விட்டுள்ளது. இதுதொடர்பாக கோவை மாநகராட்சி ஆணையாளர் பிரதாப் சார்பில் ஒரு அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது. அதில், “2022 ம் ஆண்டு 02.10.22 அன்று ‘காந்தி ஜெயந்தி தினம்’ கொண்டாடப்படுகிறது. அன்றைய தினம் அரசால் ஆடு, மாடு மற்றும் கோழிகளை வதை செய்வதும், இறைச்சிகளை விற்பனை செய்வதும் தடை செய்யப்பட்டுள்ளது. எனவே, கோயம்புத்தூர் மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் ஆட்டிறைச்சி, மாட்டிறைச்சி, கோழி இறைச்சி மற்றும் பன்றி இறைச்சி கடைகளை மூடும்படி இதன் மூலம் தெரிவிக்கப்படுகிறது.
கடந்த வருடம் மகாவீரர் நினைவுநாள் அன்று,திபாவளி பண்டிகை கொண்டாடப்பட்டதால் மகாவீரரை வழிப்படும் மக்கள் இருக்கும் இடங்களில் இறைச்சி கடைகளை மூட வேண்டும் என்று மாநில அரசு உத்தரவிட்டது.இப்போது காந்தி ஜெயந்தி அன்று அனைத்து இடங்களிலும் இறைச்சி கடைகளை மூட வேண்டுமென்று உத்தரவு போடுகிறது... pic.twitter.com/AlwhrjO646
— V PALANISAMY (@samysvm) September 30, 2022">
அன்றைய தினம் கோயம்புத்தூர் மாநகராட்சியால் செயல்படுத்தப்பட்டு வரும் உக்கடம், சக்தி ரோடு, போத்தனூர் அறுவைமனைகள் மற்றும் துடியலூர் மாநகராட்சி இறைச்சி கடைகள் செயல்படாது எனவும் தெரிவிக்கப்படுகிறது. இந்த உத்தரவை மீறி செயல்படுவோர் மீது மாநகராட்சி அதிகாரிகளால் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என மாநகராட்சி ஆணையாளர் பிரதாப் தெரிவித்துள்ளார்” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்