மேலும் அறிய

கனமழை காரணமாக வால்பாறை பள்ளிகளுக்கு நாளை விடுமுறை ; கோவை ஆட்சியர் அறிவிப்பு

சின்னக்கல்லார் பகுதியில் அதிக கனமழையும், வால்பாறை, சோலையார் பகுதிகளில் கனமழையும், ஆழியார், சிறுவாணி, பொள்ளாச்சி, சிங்கோனா ஆகிய பகுதிகளில் மிதமான மழையும் பெய்தது.

தென்மேற்கு பருவமழை பரவலாக பெய்து வரும் நிலையில், தமிழ்நாட்டின் பல்வேறு மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு உள்ளதாக வானிலை மையம் தெரிவித்துள்ளது. குறிப்பாக மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியை ஒட்டியுள்ள பகுதிகளில் கனமழை பெய்யக்கூடும் என வானிலை மையம் தெரிவித்துள்ளது. கேரள மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் கனமழை பெய்யக்கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. தமிழ்நாட்டில், குறிப்பாக மேற்கு தொடர்ச்சி மாவட்டங்களான, கன்னியாகுமரி, நீலகிரி, கோவை உள்ளிட்ட மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

தொடர் கனமழை

இந்த நிலையில் கடந்த சில நாட்களாக கோவை மாவட்டத்தில் பரவலாக லேசான மழை, அவ்வப்போது பெய்து வருகிறது. இரவு நேரங்களில் மிதமான மழை பெய்து வருகிறது. இதன் காரணமாக வெயிலின் தாக்கம் குறைந்து, குளிர்ச்சியான சூழல் நிலவி வருகிறது. இந்த நிலையில் இன்று காலை முதல் விட்டு விட்டு கோவை மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் மிதமான மழை பெய்து வருகிறது. குறிப்பாக கோவை மாவட்டத்தில் மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் அமைந்துள்ள வால்பாறை பகுதியில் தொடர் கனமழை பெய்து வருகிறது. தென்மேற்கு பருவமழை துவங்கியது முதல், வால்பாறையில் தொடர் மழை பெய்து வருகிறது. தொடர் மழை காரணமாக நீர் நிலைகளுக்கு நீர் வரத்து அதிகரித்துள்ளது. கவியருவியில் நீர் வரத்து அதிகரித்து இருப்பதால், சுற்றுலா பயணிகளின் நலன் கருதி சுற்றுலா பயணிகள் அருவிக்கு செல்ல தற்காலிகமாக வனத்துறையினர் தடை விதித்துள்ளனர்.

பள்ளிகளுக்கு விடுமுறை

இதனிடையே இன்று வால்பாறை சுற்றுவட்டார பகுதிகளில் கனமழை பெய்தது. சின்னக்கல்லார் பகுதியில் அதிக கனமழையும், வால்பாறை, சோலையார் பகுதிகளில் கனமழையும், ஆழியார், சிறுவாணி, பொள்ளாச்சி, சிங்கோனா ஆகிய பகுதிகளில் மிதமான மழையும் பெய்தது. அதிகபட்சமாக சின்னக்கல்லார் பகுதியில் 12.7 செ.மீ. மழை பதிவானது. வால்பாறை சுற்று வட்டார பகுதிகளில் தொடர் கனமழை பெய்து வருகிறது. இதன் காரணமாக வால்பாறை பகுதியில் உள்ள பள்ளிகளுக்கு மட்டும் நாளை விடுமுறை அறிவித்து கோவை மாவட்ட ஆட்சியர் கிராந்திகுமார் பாடி உத்தரவிட்டுள்ளார். மற்ற பகுதிகளில் வழக்கம் போல பள்ளிகள் இயங்கும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

"வீட்டைப் பெறும்போதுதான் சுயமரியாதை உயர்கிறது" எமோஷனலாக பேசிய பிரதமர் மோடி!
சினிமாவில் மட்டும் இல்ல.. அரசியலிலும் அண்ணாதான்.. ஒரே ட்வீட்டில் கொள்கையை சொன்ன விஜய்!
சினிமாவில் மட்டும் இல்ல.. அரசியலிலும் அண்ணாதான்.. ஒரே ட்வீட்டில் கொள்கையை சொன்ன விஜய்!
"நம்பர் 1 பயங்கரவாதி" ராகுல் காந்தி குறித்து மத்திய அமைச்சர் சர்ச்சை கருத்து!
Arvind Kejriwal: 48 மணி நேரம், டெல்லி முதலமைச்சர் பதவியை ராஜினாமா செய்கிறேன் - அரவிந்த் கெஜ்ரிவால் அறிவிப்பு
Arvind Kejriwal: 48 மணி நேரம், டெல்லி முதலமைச்சர் பதவியை ராஜினாமா செய்கிறேன் - அரவிந்த் கெஜ்ரிவால் அறிவிப்பு
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

MK Stalin Phone Call |’’தைரியமா இருங்க’’PHONE-ல் பேசிய முதல்வர்! உத்தரகாண்ட் நிலச்சரிவுDMK VS PMK | ’’உனக்கு யாரு அதிகாரம் கொடுத்தா?’’கடுப்பாகி கத்திய பாமக MLA! திமுக vs பாமகManimegalai Priyanka Fight | மூக்கை நுழைத்த பிரியங்கா? GOOD BYE சொன்ன மணிமேகலை” நீ அவ்ளோ பெரிய ஆளா”Cuddalore News | ”டேய் பஸ்ஸ நிறுத்துடா”போதை ஆசாமி ரகளைசாலையில் அடித்த லூட்டி

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
"வீட்டைப் பெறும்போதுதான் சுயமரியாதை உயர்கிறது" எமோஷனலாக பேசிய பிரதமர் மோடி!
சினிமாவில் மட்டும் இல்ல.. அரசியலிலும் அண்ணாதான்.. ஒரே ட்வீட்டில் கொள்கையை சொன்ன விஜய்!
சினிமாவில் மட்டும் இல்ல.. அரசியலிலும் அண்ணாதான்.. ஒரே ட்வீட்டில் கொள்கையை சொன்ன விஜய்!
"நம்பர் 1 பயங்கரவாதி" ராகுல் காந்தி குறித்து மத்திய அமைச்சர் சர்ச்சை கருத்து!
Arvind Kejriwal: 48 மணி நேரம், டெல்லி முதலமைச்சர் பதவியை ராஜினாமா செய்கிறேன் - அரவிந்த் கெஜ்ரிவால் அறிவிப்பு
Arvind Kejriwal: 48 மணி நேரம், டெல்லி முதலமைச்சர் பதவியை ராஜினாமா செய்கிறேன் - அரவிந்த் கெஜ்ரிவால் அறிவிப்பு
Dhanush : ரெட் கார்ட் நீங்கியதும் சைலண்டாக அடுத்த படப்பிடிப்பை தொடங்கிய தனுஷ்...
Dhanush : ரெட் கார்ட் நீங்கியதும் சைலண்டாக அடுத்த படப்பிடிப்பை தொடங்கிய தனுஷ்...
Thalapathy Vijay: ஷாருக்கானை ஓரம் கட்டிய தளபதி விஜய் - இந்தியாவிலேயே அதிக சம்பளம் பெறும் நடிகர் - எவ்வளவு தெரியுமா?
Thalapathy Vijay: ஷாருக்கானை ஓரம் கட்டிய தளபதி விஜய் - இந்தியாவிலேயே அதிக சம்பளம் பெறும் நடிகர் - எவ்வளவு தெரியுமா?
Job Fair: அரசு சார்பில் தனியார் வேலைவாய்ப்பு முகாம்: எங்கே? எப்போது? யாரெல்லாம் கலந்துகொள்ளலாம்?
Job Fair: அரசு சார்பில் தனியார் வேலைவாய்ப்பு முகாம்: எங்கே? எப்போது? யாரெல்லாம் கலந்துகொள்ளலாம்?
Vidamuyarchi : விடாமுயற்சி வேண்டாம்...குட் பேட் அக்லி போதும்... பொறுமை இழந்த அஜித் ரசிகர்கள்
Vidamuyarchi : விடாமுயற்சி வேண்டாம்...குட் பேட் அக்லி போதும்... பொறுமை இழந்த அஜித் ரசிகர்கள்
Embed widget