மேலும் அறிய

என் தந்தை குறித்து பேசிய அண்ணாமலை மன்னிப்பு கேட்க வேண்டும் - கோவை அதிமுக வேட்பாளர் சிங்கை ராமச்சந்திரன்

என் தந்தை கோவிந்தராஜ் இறக்கும் போது எனக்கு 11 வயது தான். மறைத்த என் தந்தை குறித்து அவதூறாக பேசியதற்கு அண்ணாமலை கண்டிப்பாக மன்னிப்பு கேட்க வேண்டும்.

கோவை மாவட்ட அதிமுக அலுவலகமான இதய தெய்வம் மாளிகையில் கோவை அதிமுக வேட்பாளர் சிங்கை ராமச்சந்திரன் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர், “நான் கோட்டாவில் சீட் வாங்கியதாக அண்ணாமலை சொல்லி இருக்கின்றார். இது மன வருத்தத்திற்குரிய செயல். என் தந்தை கோவிந்தராஜ் இறக்கும்போது எனக்கு 11 வயது தான். நான் டிப்ளமோவில் நன்றாக படித்ததால் எனக்கு மேல்படிப்பு படிக்க வாய்ப்பு கிடைத்தது. அண்ணாமலை உண்மைக்கு மாறான தகவல்களை சொல்லி உள்ளார். அண்ணாமலைக்காவது அப்பா இருந்தார், அவர் கல்லூரிக்கு அழைத்து சென்றார். எனக்கு அப்பா இல்லை, நான் மட்டும் தனியாக பஸ் ஏறி போய் கல்லூரிக்கு சென்றேன். அண்ணாமலை கீழ் தரமாக தவறாக இவற்றை சொல்லும் போது இதையெல்லாம் சொல்ல வேண்டி இருக்கின்றது.

மன்னிப்பு கேட்க வேண்டும்

எனது தந்தையின் இறுதி சடங்கிற்கு கூட கஷ்டப்பட்டு கடன் வாங்கி செய்தோம். காரை விற்று கடனை அடைத்தோம். பேச வேண்டும் என்றால் நிறைய பேசலாம். இவர் இப்படி பேசியதால், எங்கள் கட்சியில் அப்பாவின் விசுவாசிகள் மற்றும் அவரை சார்ந்தவர்கள் கடுமையான வேதனை அடைந்துள்ளனர். இதற்கு அண்ணாமலை கண்டிப்பாக மன்னிப்பு கேட்க வேண்டும். அண்ணாமலை ஆக்கப்பூர்வமாக பேச வேண்டும். அவரை தனிப்பட்ட முறையில் நான் எதுவும் பேசவில்லை. மறைந்த என் தந்தை குறித்து அவதூறாக பேசியதற்கு அண்ணாமலை கண்டிப்பாக மன்னிப்பு கேட்க வேண்டும். கோவைக்கு திமுக எதுவும் செய்யவில்லை. மக்கள் கடும் அதிருப்தியில் இருக்கின்றனர்.


என் தந்தை குறித்து பேசிய அண்ணாமலை மன்னிப்பு கேட்க வேண்டும் - கோவை அதிமுக வேட்பாளர் சிங்கை ராமச்சந்திரன்

ஊழலை பற்றி பேச பா.ஜ.கவிற்கோ, அண்ணாமலைக்கோ, மோடிக்கோ தகுதியில்லை. முக்கியமாக அண்ணாமலைக்கு தகுதி இல்லை. அண்ணாமலை செலவிற்கு எல்லாம் யார் காசு கொடுக்கின்றனர்? திமுக, பாஜக இரண்டும் ஒன்றுதான். இந்தி தெரியாது போடா என சொல்லி விட்டு, கேலோ இந்தியா என்ற இந்தி வார்த்தையுடன் உதயநிதி ஸ்டாலின் நிகழ்வு நடத்துகின்றார். மோடியின் சாதனை கோவையில் என்ன இருக்கிறது? ரோடுஷோவில் கோவையின் பெருமையை பேச நிறைய இருக்கும் போது, குண்டு வெடிப்பில் இறந்தவர்களுக்கு பிளக்ஸ் வைத்து அஞ்சலி செலுத்தி எதை நியாபகப்படுத்த பார்க்கின்றனர்? திடீரென தேர்தலின் போது அஞ்சலி நிகழ்ச்சி நடத்துவது என்பதன் மூலம், பழையனவற்றை நியாபகம் செய்ய முயல்கின்றனர்.

அரசியலை விட்டே விலகுகிறேன்

பா.ஜ.க தமிழகத்தில் வர முடியாமல் போனதிற்கு மனிதநேயம் காரணம்.  அண்ணாமலை இந்த ஊர் கிடையாது, அவர் மாநில தலைவர் என்பதால் வெளியே சென்று விடுவார். கோவை மக்களின் பிரச்சினையை யார் பார்ப்பார்? கோவையில் திமுக, அதிமுகவிற்கு மட்டும்தான் போட்டி நடைபெற்று வருகின்றது. இங்கு மட்டும் அல்ல, பா.ஜ.க தமிழகத்தில் எங்கும் இல்லை. அரசு பதவியில் இருந்தால் மட்டும் திட்டங்களை வாங்கி கொடுப்பாரா? கோவை மக்களவை தொகுதியில் 60 சதவீத வாக்குகளை பா.ஜ.க வாங்கினால் நான் அரசியலை விட்டு சென்று விடுகிறேன். திமுக வேட்பாளர் தேர்வு அந்த கட்சியினரிடையே திருப்தி இல்லை. அண்ணாமலை 20 ஆயிரம் புத்தகம் படித்து இருப்பதாக பொய் சொல்கின்றார். புத்தகம் படித்ததாக பொய் சொல்லியதை போல என் தந்தை குறித்தும் பொய் சொல்லி இருக்கின்றார்.

இடத்திற்கு தகுந்தவாறு மாறி கொள்பவர் அண்ணாமலை. பா.ஜ.க 39 சீட் ஜெயித்தால் தமிழக அரசியலை விட்டே போய் விடுகின்றேன். ஒவ்வொரு ஆண்டும் என்ன செய்வேன் என்பதை வெற்றி பெற்றால் நிச்சயம் பட்டியலிட்டு சொல்வேன். அண்ணாமலை ஜென்டில்மேனாக இருந்தால் மன்னிப்பு கேட்க வேண்டும். மன்னிப்பு கேட்கவில்லை என்றால் மக்கள் முடிவு செய்து கொள்ளட்டும். தவறாக பேசிட்டு மன்னிப்பு கேட்கமாட்டேன் என சொல்பவர் அண்ணாமலை. அண்ணாமலை மச்சான் வைத்திருக்கும் குவாரிகளின் எண்ணிக்கை 5 ஆக உயர்ந்துள்ளது. விசாரித்து பார்த்து கொள்ளுங்கள்” எனத் தெரிவித்தார்.

தலைப்பு செய்திகள்

coimbatore power cut: கோவையில் நாளை (10-8-2026) எங்கெல்லாம் கரண்ட் இருக்காது? - மின்வாரியம் வெளியிட்ட லிஸ்ட்
கோவையில் நாளை (10-8-2026) எங்கெல்லாம் கரண்ட் இருக்காது? - மின்வாரியம் வெளியிட்ட லிஸ்ட்
coimbatore power cut: கோவையில் நாளை (06-8-2026) எங்கெல்லாம் கரண்ட் இருக்காது? - உங்கள் பகுதி லிஸ்ட்டில் உள்ளதா? உடனே பாருங்கள்!
coimbatore power cut: கோவையில் நாளை (06-8-2026) எங்கெல்லாம் கரண்ட் இருக்காது? - உங்கள் பகுதி லிஸ்ட்டில் உள்ளதா? உடனே பாருங்கள்!
கோவையில் நாளை (06-08-2026) எத்தனை மணி நேரம் மின் தடை? மின்வாரியம் அறிக்கை
கோவையில் நாளை (06-08-2026) எத்தனை மணி நேரம் மின் தடை? மின்வாரியம் அறிக்கை
கோவையில் நாளை (05-08-2026) எங்கெல்லாம் கரண்ட் கட் ஆகும் - மின்வாரியம் வெளியிட்ட லிஸ்ட்
கோவையில் நாளை (05-08-2026) எங்கெல்லாம் கரண்ட் கட் ஆகும் - மின்வாரியம் வெளியிட்ட லிஸ்ட்

வீடியோ

Vijay Sangeetha Divorce : விவாகரத்து வழக்கு வாபஸ்! சங்கீதா கொடுத்த திடீர் டிவிஸ்ட் காரணம் என்ன?
CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்
தமிழ்நாட்டுக்குத் தலைகுனிவு? அசிங்கப்படுத்திய DK சிவகுமார் வாயைதிறங்க விஜய்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
இந்த மழைக்கே இப்படியா? மழைக்காலத்தில் சென்னை காப்பாற்றுவாரா முதலமைச்சர் விஜய்?
இந்த மழைக்கே இப்படியா? மழைக்காலத்தில் சென்னை காப்பாற்றுவாரா முதலமைச்சர் விஜய்?
Mojtaba Khamenei Video: ஈரான் தலைவர் மொஜ்தபா எங்கே, எப்படி இருக்கிறார்.? உடல்நிலை குறித்த யூகங்களுக்கிடையே வெளியான வீடியோ
ஈரான் தலைவர் மொஜ்தபா எங்கே, எப்படி இருக்கிறார்.? உடல்நிலை குறித்த யூகங்களுக்கிடையே வெளியான வீடியோ
Trump Vs Netanyahu: ஓ.. உனக்கு அவ்ளோ தில்லா.? ட்ரம்ப்பின் அமைதித் திட்டத்தை நிராகரித்த நெதன்யாகு.! என்ன நடக்கும்.?
ஓ.. உனக்கு அவ்ளோ தில்லா.? ட்ரம்ப்பின் அமைதித் திட்டத்தை நிராகரித்த நெதன்யாகு.! என்ன நடக்கும்.?
தமிழக வானிலை அப்டேட்: சென்னையில் அடுத்த 2 நாட்களுக்கு இடி மின்னலுடன் கூடிய மழை எச்சரிக்கை
தமிழக வானிலை அப்டேட்: சென்னையில் அடுத்த 2 நாட்களுக்கு இடி மின்னலுடன் கூடிய மழை எச்சரிக்கை
TVK Kanimozhi: ”தவெக அரசை நாயுடன் ஒப்பிட்டு பேச்சு” பாஜக கூட்டணியை உறுதி செய்த கனிமொழி?
”தவெக அரசை நாயுடன் ஒப்பிட்டு பேச்சு” பாஜக கூட்டணியை உறுதி செய்த கனிமொழி?
Minister Ramesh: DMKவினர் தூங்கிக் கொண்டு இருந்தார்களா? பஞ்ச் பேசினார்களே? - அமைச்சர் ரமேஷ் அதிரடி கேள்விகள்
DMKவினர் தூங்கிக் கொண்டு இருந்தார்களா? பஞ்ச் பேசினார்களே? - அமைச்சர் ரமேஷ் அதிரடி கேள்விகள்
இந்த தலத்துக்கு வந்தாலே போதும் நவக்கிரக தோஷமும் நீங்கிவிடும்... எந்த தலம் தெரியுங்களா?
இந்த தலத்துக்கு வந்தாலே போதும் நவக்கிரக தோஷமும் நீங்கிவிடும்... எந்த தலம் தெரியுங்களா?
Pulsar N160 S-N160 SS First Look: அதிக சக்தி, புதிய அம்சங்கள்; புதிய பஜாஜ் பல்சர் N160 S, N160 SS எப்படி இருக்கு.? இதோ முதல் பார்வை
அதிக சக்தி, புதிய அம்சங்கள்; புதிய பஜாஜ் பல்சர் N160 S, N160 SS எப்படி இருக்கு.? இதோ முதல் பார்வை
Embed widget