மேலும் அறிய

உக்கடம் - ஆத்துப்பாலம் மேம்பாலத்தை திறந்து வைத்த முதலமைச்சர் ஸ்டாலின் ; போக்குவரத்து நெரிசல் குறைய வாய்ப்பு

ஆத்துபாலம் பகுதியில் இருந்து உக்கடம் வரை சுமார் 3.8 கிலோமீட்டர் தொலைவிற்கு ரூ.481.95 கோடி மதிப்பீட்டில் மேம்பாலம் கட்டும் பணிகள் நடைபெற்று வந்தது.

கோவை மாநகரில் இருந்து பொள்ளாச்சி மற்றும் பாலக்காடு செல்லக் கூடிய பிரதான சாலைகளை இணைக்கும், ஆத்துப்பாலம் - உக்கடம் இடையேயான சாலை மிகுந்த போக்குவரத்து நெரிசலுடன் இருந்து வந்தது. இந்நிலையில் தமிழக நெடுஞ்சாலைத் துறை சார்பில் ஆத்துபாலம் பகுதியில் இருந்து உக்கடம் வரை சுமார் 3.8 கிலோமீட்டர் தொலைவிற்கு ரூ.481.95 கோடி மதிப்பீட்டில் மேம்பாலம் கட்டும் பணிகள் நடைபெற்று வந்தது. கடந்த 2018 ம் ஆண்டு துவங்கப்பட்ட பணிகள் கொரோனா தொற்று காரணமாக சற்று மந்தமாக நடைபெற்று வந்த நிலையில், கடந்த 3 ஆண்டுகளாக மேம்பாலம் கட்டும் பணிகள் வேகமாக நடைபெற்று வந்தது. தற்போது மேம்பால கட்டுமான பணிகள் நிறைவடைந்து உள்ளது.

மேம்பாலம் திறப்பு

இந்த நிலையில் ஆத்துப்பாலம் முதல் உக்கடம் சந்திப்பு மற்றும் ஒப்பணக்கார வீதி வரை கட்டி முடிக்கப்பட்ட மேம்பாலத்தை தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் இன்று திறந்து வைத்தார். பின்னர் அப்பாலத்தின் வழியாகச் சென்று அதனை பார்வையிட்டார். இந்த நிகழ்ச்சிகள் தமிழக அமைச்சர்கள்,  மாவட்ட ஆட்சியர், மாநகராட்சி ஆணையாளர்,  காவல்துறை உயர் அதிகாரிகள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

உக்கடம் - ஆத்துப்பாலம் மேம்பாலத்தை திறந்து வைத்த முதலமைச்சர் ஸ்டாலின் ; போக்குவரத்து நெரிசல் குறைய வாய்ப்பு

சிறுவாணி, பேரூர், பாலக்காடு மற்றும் பொள்ளாச்சி ஆகிய பகுதிகளில் இருந்து வரும் வாகனங்கள், கோவை நகரப்பகுதியில் உள்ள ஒப்பணக்காரவீதி செல்வதற்கு உக்கடம் பகுதியை கடந்து செல்ல வேண்டும். இதனால் உக்கடம் சந்திப்பில் திருவிழா மற்றும் விசேஷ நாட்களில் பல மணிநேரம் வாகனப் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு, உரிய இடங்களுக்கு செல்ல முடியாத நிலை ஏற்பட்டு மிகுந்த சிரமத்திற்கு உள்ளாகிறது. இதை கருத்தில் கொண்டு, தமிழ்நாடு அரசு கோவை ஆத்துப்பாலம் முதல் உக்கடம் வரை மேம்பாலம் கட்டப்படும் என அறிவித்தது.

கருணாநிதி சிலை திறப்பு

அதன்படி, கோவை ஆத்துப்பாலம் முதல் உக்கடம் சந்திப்பு ஒப்பணக்காரவீதி வரை உயர்வு மேம்பாலம் கட்ட 481 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு பணிகள் தொடங்கப்பட்டது. இந்த மேம்பாலமானது, 125 தூண்கள் மற்றும் 107 கண்கள் (Spans) கொண்ட நான்கு வழிப் போக்குவரத்து செல்லக்கூடிய 3.80 கி.மீ நீளமுள்ள மேம்பாலமாகும். உக்கடம் பேருந்து நிலையம் அருகே உள்ள ஏறுதளம் வழியாக பாலக்காடு மற்றும் பொள்ளாச்சி பகுதிகளுக்கு செல்லக்கூடிய வாகனங்கள் எவ்வித போக்குவரத்து தடையுமின்றி செல்லவும், பொள்ளாச்சி மற்றும் பாலக்காடு பகுதிகளில் இருந்து வரக்கூடிய வாகனங்கள் அப்பகுதிகளின் அமைக்கப்பட்டுள்ள ஏறுதளம் வழியாக உக்கடம், செல்வபுரம் மற்றும் ஒப்பணக்கார வீதிகளுக்கு செல்லும் வகையிலும் வடிவமைக்கப்பட்டுள்ளது. இந்த மேம்பாலம் திறக்கப்பட்டுள்ளதால் அப்பகுதியில் போக்குவரத்து நெரிசல் குறையும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதையடுத்து கணியூர் பகுதிக்கு சென்ற முதலமைச்சர் மு.க. ஸ்டாலின், அப்பகுதியில் அமைக்கப்பட்ட முன்னாள் முதலமைச்சர் கருணாநிதி உருவசிலையை திறந்து வைத்தார்.

மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola

தலைப்பு செய்திகள்

Magalir Urimai Thogai: இது தொடக்கமே.. மகளிர் உரிமைத் தொகை மேலும் உயரும்; முதலமைச்சர் வெளியிட்ட முக்கிய அறிவிப்பு
இது தொடக்கமே.. மகளிர் உரிமைத் தொகை மேலும் உயரும்; முதலமைச்சர் வெளியிட்ட முக்கிய அறிவிப்பு
ADMK BJP: அதிமுக கூட்டணி.. அமித்ஷாவிற்கு தலைவலி - இதுதான் சங்கதி!
ADMK BJP: அதிமுக கூட்டணி.. அமித்ஷாவிற்கு தலைவலி - இதுதான் சங்கதி!
PM Kisan 22nd Installment: பிரதம மந்திரி கிசான் நிதியின் 22-வது தவணை எப்போ வரும்.? அதுக்குள்ள விவசாயிகள் இத செஞ்சுடுங்க
பிரதம மந்திரி கிசான் நிதியின் 22-வது தவணை எப்போ வரும்.? அதுக்குள்ள விவசாயிகள் இத செஞ்சுடுங்க
Trump's C5 Plan.?: ஐரோப்பாவிற்கு G7; ஆசியாவிற்கு C5; ட்ரம்ப்பின் பலே பிளான்.? எந்தெந்த நாடுகள் தெரியுமா.?
ஐரோப்பாவிற்கு G7; ஆசியாவிற்கு C5; ட்ரம்ப்பின் பலே பிளான்.? எந்தெந்த நாடுகள் தெரியுமா.?
ABP Premium

வீடியோ

Magalir Urimai Thogai | ''மகளிருக்கு இன்னொரு CHANCE..!''கலைஞர் மகளிர் உரிமைத்தொகை
Rajinikanth 75th Birthday Celebration|’’ரஜினி என் குலசாமி!’’வீடு முழுக்க RAJINISMவியக்க வைத்த ரசிகர்
Tindivanam Bus Accident - டயர் வெடித்து விபத்து ஒருவர் பலி, 15 பேர் படுகாயம்; உதவிய விழுப்புரம் கலெக்டர்
Nainar Nagendran Meet EPS | டெல்லிக்கு அழைத்த அமித் ஷா; ஈபிஎஸ்-நயினார் திடீர் சந்திப்பு; அண்ணாமலை பலே ப்ளான்!
LAW & ORDER இனிமே இவர் கையில் தமிழகத்தின் புதிய பொறுப்பு DGPயார் இந்த அபய் குமார் சிங் IPS? | Abhay Kumar Singh | MK Stalin | TN New DGP

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Magalir Urimai Thogai: இது தொடக்கமே.. மகளிர் உரிமைத் தொகை மேலும் உயரும்; முதலமைச்சர் வெளியிட்ட முக்கிய அறிவிப்பு
இது தொடக்கமே.. மகளிர் உரிமைத் தொகை மேலும் உயரும்; முதலமைச்சர் வெளியிட்ட முக்கிய அறிவிப்பு
ADMK BJP: அதிமுக கூட்டணி.. அமித்ஷாவிற்கு தலைவலி - இதுதான் சங்கதி!
ADMK BJP: அதிமுக கூட்டணி.. அமித்ஷாவிற்கு தலைவலி - இதுதான் சங்கதி!
PM Kisan 22nd Installment: பிரதம மந்திரி கிசான் நிதியின் 22-வது தவணை எப்போ வரும்.? அதுக்குள்ள விவசாயிகள் இத செஞ்சுடுங்க
பிரதம மந்திரி கிசான் நிதியின் 22-வது தவணை எப்போ வரும்.? அதுக்குள்ள விவசாயிகள் இத செஞ்சுடுங்க
Trump's C5 Plan.?: ஐரோப்பாவிற்கு G7; ஆசியாவிற்கு C5; ட்ரம்ப்பின் பலே பிளான்.? எந்தெந்த நாடுகள் தெரியுமா.?
ஐரோப்பாவிற்கு G7; ஆசியாவிற்கு C5; ட்ரம்ப்பின் பலே பிளான்.? எந்தெந்த நாடுகள் தெரியுமா.?
Gold Rate Dec.13th: அய்யய்யோ.! தங்கம் விலை ரூ.99,000-த்தை நெருங்கியது; ஒரே நாளில் ரூ.2560 உயர்வு - இன்று விலை என்ன.?
அய்யய்யோ.! தங்கம் விலை ரூ.99,000-த்தை நெருங்கியது; ஒரே நாளில் ரூ.2560 உயர்வு - இன்று விலை என்ன.?
Magalir Urimai Thogai: மகளிர் உரிமை தொகை ரூ. 1000 கிடைக்கவில்லையா.! மீண்டும் ஒரு வாய்ப்பு- எப்போ தெரியுமா.?
மகளிர் உரிமை தொகை ரூ. 1000 கிடைக்கவில்லையா.! மீண்டும் ஒரு வாய்ப்பு- எப்போ தெரியுமா.?
Hyundai Verna: ரூ.13 லட்சம்தான் ஆரம்பம்.. ஹுண்டாய் Verna காரை வாங்கலாமா? வேண்டாமா?
Hyundai Verna: ரூ.13 லட்சம்தான் ஆரம்பம்.. ஹுண்டாய் Verna காரை வாங்கலாமா? வேண்டாமா?
TATA Sierra Speed Milage: 222 கி.மீ வேகம், 30 கி.மீ மைலேஜா.! என்னங்க சொல்றீங்க.?! சோதனையில் அசத்திய டாடா சியாரா
222 கி.மீ வேகம், 30 கி.மீ மைலேஜா.! என்னங்க சொல்றீங்க.?! சோதனையில் அசத்திய டாடா சியாரா
Embed widget