மேலும் அறிய

CM MK Stalin: தமிழ்நாட்டில் பல இடங்களில் ஜவுளி பூங்காக்கள் அமைக்கப்படும் - முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு

”தமிழ்நாட்டில் பல பகுதிகளில் ஜவுளிப்பூங்காக்கள் உருவாக்க அரசு முயற்சி எடுத்து வருகிறது. மேற்கு மண்டலத்தில் ஜவுளி பூங்கா அமைக்கப்பட உள்ளது.”

கோவை கருமத்தம்பட்டி பகுதியில் விசைத்தறி நெசவாளர்கள் மற்றும் கைத்தறி நெசவாளர்கள் சார்பில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு நன்றி அறிவிப்பு பாராட்டு விழா நடந்தது. விசைத்தறி நெசவாளர்களுக்கு  750 யூனிட் இலவச மின்சாரத்தை ஆயிரம் யூனிட்டாக உயர்த்தியது, ஆயிரம் யூனிட்டுக்கும் மேல் பயன்படுத்தும் கூடுதல் யூனிட்க்கு உயர்த்தப்பட்ட கட்டணத்ததில் 70 பைசா குறைப்பு, கைத்தறி நெசவாளர்களுக்கு இலவச மின்சாரத்தை 300 யூனிட்டாக உயர்த்தியதற்காக நன்றி தெரிவிக்கும் வகையில் இந்த நிகழ்ச்சி நடைபெற்றது.

கைத்தறி நெசவாளர்கள்:

இந்நிகழ்ச்சியில் உரையாற்றிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், “கைத்தறியாக இருந்தாலும், விசைத்தறியாக இருந்தாலும் ஆடை உற்பத்தி நெசவாளர்களுக்கு உதவி செய்வதை எனது கடமையாக கருதுகிறேன். திமுக துவங்கிய காலம் முதல் நெசவாளர் துயர் துடைக்கும் இயக்கமாக இருந்து வருகிறது. திமுக ஆட்சிக்கு வரும் போது எல்லாம் நெசவாளர்களுக்கு உதவி செய்துள்ளது. நெசவாளர்களுக்கு இலவச மின்சாரம் வழங்கும் திட்டம் உள்ளிட்ட பல்வேறு திட்டங்களை செய்துள்ளது.

கொரோனா பெருந்தொற்று, நூல் விலையேற்றம் என்ற தாக்குதலில் சிக்கி இருந்த நேரத்தில், திமுக ஆட்சிக்கு வந்தது. நெசவாளர்கள் வாழ்வில் மறுமலர்ச்சி ஏற்படுத்தும் வகையில் ஏராளமான திட்டங்களை செயல்படுத்தியுள்ளோம். சிறந்த நெசவாளர், சிறந்த ஏற்றுமதியாளர், சிறந்த வடிவமைப்பாளர் விருதுகள் வழங்கப்பட்டுள்ளது. கைத்தறி, கைவினைப்பொருட்கள் காட்சியகம் அமைக்கும் பணிகள் நடந்து வருகிறது. வேட்டி , சேலை  மற்றும் பள்ளி மாணவர்களுக்கு சீருடை வழங்கும் திட்டம் நெசவாளர் கூட்டுறவு சங்கம் மூலம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. கைத்தறி நெசவாளர்கள் வீடு கட்ட 4 இலட்ச ரூபாய் மானியம் வழங்கப்படுகிறது. இவை எல்லாம் 20 மாதங்களில் நிறைவேற்றப்பட்டுள்ள திட்டங்கள் தான்.

டார்கெட் அமைச்சர்:

மின்சாரத் துறை அமைச்சர் செந்தில் பாலாஜி, எதிலும் திட்டமிட்டு செயல்படக்கூடியவர். செந்தில்பாலாஜி ஒரு டார்கெட் அமைச்சர். தனக்கான டார்க்கெட் செட் செய்து  கட்சிக்காகவும், ஆட்சிக்காகவும் அந்த இலக்கை அடைந்து காட்டுவார். 10 ஆண்டு கால அதிமுக ஆட்சியில் 2 இலட்சம் இலவச வேளாண் மின் இணைப்பு மட்டுமே வழங்கப்பட்டது. திமுக ஆட்சிக்கு வந்த 2 ஆண்டுகளில் ஒன்றரை இலட்சம் இலவச வேளாண் மின் இணைப்பு வழங்கப்பட்டுள்ளது. சொன்னதை செய்வோம். செய்வதை செல்வோம் என்பது கலைஞரின் முழக்கம். சொல்லாத்தையும் செய்வோம் என்பது முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின் முழக்கம். சொல்லாமல் இத்தனை சாதனைகளை செய்து காட்டியுள்ளோம்.

CM MK Stalin: தமிழ்நாட்டில் பல இடங்களில் ஜவுளி பூங்காக்கள் அமைக்கப்படும் - முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு

விலையில்லா மின்சாரம் கைத்தறிகளுக்கு 300 அலகுகளாகவும், விசைத்தறிகளுக்கு 1000 அலகுகளாகவும் உயர்த்தி வழங்கப்பட்டுள்ளதால், அரசுக்கு ஆண்டுக்கு 53 கோடி ரூபாய் கூடுதல் செலவீனம் ஏற்படும். இதை செலவாக நினைக்கவில்லை. நெசவாளர்கள் புத்துயிர் பெறவும், அதிகமாக உற்பத்தி செய்யவும் வழங்கப்பட்டுள்ளது. அதேபோல மின்கட்டண குறைப்பால் நெசவாளர்களுக்கு கணிசமான தொகை மிச்சமாகும்.
தொழிலை வளர்ச்சியடைய செய்யும் முயற்சியை தமிழ்நாடு அரசு எடுத்துள்ளது.

5 இலட்சம் விசைத்தறிகளில் பணியாற்றும் 10 இலட்சம் தொழிலாளர்களை காக்கும் கடமை அரசிற்கு உண்டு. நெசவாளர்களுக்கு அச்சுறுத்தலாக உள்ள நூல் விலையை கட்டுப்படுத்த உறுதியாக நடவடிக்கை எடுப்போம். அரசின் அனைத்து துறைகளுக்கும் தேவையான துணிகள் கொள்முதல் செய்தல், அரசின் நிபுணர் குழுக்களில் நெசவாளர்கள் பிரதிநிதித்துவம் வழங்குதல் உள்ளிட்டவை முறையாக பரிசீலிக்கப்பட்டு படிப்படியாக உறுதியாக நிறைவேற்றப்படும்.

ஜவுளிப்பூங்காக்கள்:

ஜவுளித்துறைக்கு ஆணி வேராக நெசவு தொழில் உள்ளது. ஜவுளித்துறையில் தமிழ்நாடு முன்னிலையில் உள்ளது. தமிழ்நாட்டில் பல பகுதிகளில் ஜவுளிப்பூங்காக்கள் உருவாக்க அரசு முயற்சி எடுத்து வருகிறது. மேற்கு மண்டலத்தில் ஜவுளி பூங்கா அமைக்கப்பட உள்ளது. நெசவு தொழிலுக்கு முக்கியத்துவம் வழங்கும் வகையில் தறி தொழிற்சாலை தனியிடத்தில் அமைத்து சலுகைகள் வழங்கப்படும். இது எனது அரசல்ல. நமது அரசு, உங்கள் அரசு. உங்களுக்கு உழைக்க தான் முதலமைச்சராக அமர்ந்துள்ளேன்.

ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் ஈவிகேஎஸ் இளங்கோவன் 66 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது, அரசு மீது மக்களுக்கு இருக்கும் மகத்தான நம்பிக்கையை காட்டுகிறது. கடந்த சட்டமன்ற தேர்தலில் மேற்கு மண்டலத்தில் திமுக எதிர்பார்த்த வெற்றியை பெறவில்லை. நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல், ஈரோடு இடைத்தேர்தல் வெற்றி மூலம் அந்த  நிலைமை மாறியுள்ளது. மேற்கு மண்டலத்தில் செல்வாக்கு இருப்பதாக மார் தாண்டி கொண்ட அதிமுக என்ன சாதனை செய்துள்ளது? தொழில் வளர்ச்சிக்காக எதுவும் செய்யவில்லை.சிறு, குறு நடுத்தர தொழில்களை அரசு ஊக்குவித்து வருவதால், இளைஞர்கள் வேலைவாய்ப்பு பெற்றுள்ளனர். தமிழ்நாடு தொழில் வளர்ச்சியில் சிறந்த அமைதியான மாநிலமாக உள்ளது. இது சிலரது கண்களுக்கு பொறுக்கவில்லை” எனத் தெரிவித்தார்.

புதையல் என்ற திரைப்படத்தில் இடம் பெற்ற பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் எழுதிய சின்ன சின்ன இடை என்ற பாடலை முதலமைச்சர் பாடினார். தொடர்ந்து பேசிய அவர், “ஒற்றுமையாக மக்கள் அனைவரும் வாழும் மாநிலம். அதை வதந்தி, பொய்களால் சிலர் சிதைக்க பார்க்கிறார்கள். வதந்தி, பொய்களால் கலங்கத்தை ஏற்படுத்த பார்க்கிறார்கள். அவை எழுந்த வேகத்தில் அமுங்கி விடுகின்றன. மக்களை திசை திருப்ப தந்திரங்களாக பொய்களையும், வதந்திகளையும் பயன்படுத்துகின்றனர். என் பொது வாழ்க்கையில் இதுபோன்ற எத்தனையோ பூச்சாண்டிகளை பார்த்து விட்டேன். இந்த சலசலப்பிற்கு எல்லாம் அஞ்சமாட்டேன். போற்றுவோர் போற்றட்டும். தூற்றுவோர் துற்றட்டும். நான் தொடர்ந்து பணியாற்றுவேன்” எனத் தெரிவித்தார்.

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

ஊருக்குப் போறீங்களா? கிறிஸ்துமஸ், புத்தாண்டுக்கு  சிறப்பு ரயில் - எப்போ தெரியுமா?
ஊருக்குப் போறீங்களா? கிறிஸ்துமஸ், புத்தாண்டுக்கு சிறப்பு ரயில் - எப்போ தெரியுமா?
நடுரோட்டிலே தர்ம அடி! பாலியல் தொல்லை தந்த உதவி ஜெயிலர் சஸ்பெண்ட்
நடுரோட்டிலே தர்ம அடி! பாலியல் தொல்லை தந்த உதவி ஜெயிலர் சஸ்பெண்ட்
Nirmala Sitharaman: வரிபோட்ட நிர்மலா சீதாராமன்,  வெச்சு செய்யும் நெட்டிசன்கள் - கொட்டும் மீம்ஸ் மழை, கலங்கும் மக்கள்
Nirmala Sitharaman: வரிபோட்ட நிர்மலா சீதாராமன், வெச்சு செய்யும் நெட்டிசன்கள் - கொட்டும் மீம்ஸ் மழை, கலங்கும் மக்கள்
Bus Accident: கோர விபத்து - பேருந்து கவிழ்ந்ததில் 38 பயணிகள் உடல்நசுங்கி பலி - பறந்து வந்த கிரானைட் பாறை..!
Bus Accident: கோர விபத்து - பேருந்து கவிழ்ந்ததில் 38 பயணிகள் உடல்நசுங்கி பலி - பறந்து வந்த கிரானைட் பாறை..!
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

21 நாட்கள் ராகுலின் சம்பவம்! PARLIAMENT-ஐ அலறவிட்ட I.N.D.I.A! விழிபிதுங்கிய பாஜக”இந்துக்களின் தலைவராகும் ப்ளான்” மோடி மீது RSS தலைவர் அட்டாக்!One Nation One Election  | பாஜக சதித் திட்டம்!அதிபர் ஆட்சியை நோக்கி இந்தியா?போட்டுடைத்த SPL! | SP LakshmananAmbedkar Controversy : பறிபோகும் தலித் வாக்குகள்!கடும் நெருக்கடியில் பாஜக!ஆட்டத்தை தொடங்கிய காங்கிரஸ்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
ஊருக்குப் போறீங்களா? கிறிஸ்துமஸ், புத்தாண்டுக்கு  சிறப்பு ரயில் - எப்போ தெரியுமா?
ஊருக்குப் போறீங்களா? கிறிஸ்துமஸ், புத்தாண்டுக்கு சிறப்பு ரயில் - எப்போ தெரியுமா?
நடுரோட்டிலே தர்ம அடி! பாலியல் தொல்லை தந்த உதவி ஜெயிலர் சஸ்பெண்ட்
நடுரோட்டிலே தர்ம அடி! பாலியல் தொல்லை தந்த உதவி ஜெயிலர் சஸ்பெண்ட்
Nirmala Sitharaman: வரிபோட்ட நிர்மலா சீதாராமன்,  வெச்சு செய்யும் நெட்டிசன்கள் - கொட்டும் மீம்ஸ் மழை, கலங்கும் மக்கள்
Nirmala Sitharaman: வரிபோட்ட நிர்மலா சீதாராமன், வெச்சு செய்யும் நெட்டிசன்கள் - கொட்டும் மீம்ஸ் மழை, கலங்கும் மக்கள்
Bus Accident: கோர விபத்து - பேருந்து கவிழ்ந்ததில் 38 பயணிகள் உடல்நசுங்கி பலி - பறந்து வந்த கிரானைட் பாறை..!
Bus Accident: கோர விபத்து - பேருந்து கவிழ்ந்ததில் 38 பயணிகள் உடல்நசுங்கி பலி - பறந்து வந்த கிரானைட் பாறை..!
Popcorn GST: ஏற்கனவே அநியாய விலை! பாப் கார்னுக்கு 18 சதவீத ஜி.எஸ்.டி.யா? புலம்பும் ரசிகர்கள்
Popcorn GST: ஏற்கனவே அநியாய விலை! பாப் கார்னுக்கு 18 சதவீத ஜி.எஸ்.டி.யா? புலம்பும் ரசிகர்கள்
Breaking News LIVE:பா.ஜ.க.வுக்கும், சமூகநீதிக்கும் என்ன சம்பந்தம்? சீமான் கேள்வி
Breaking News LIVE:பா.ஜ.க.வுக்கும், சமூகநீதிக்கும் என்ன சம்பந்தம்? சீமான் கேள்வி
DMK Meeting: விஜயை சமாளிப்பது எப்படி? உள்ளாட்சி தேர்தல் - இன்று கூடுகிறது திமுக செயற்குழு கூட்டம், ஸ்டாலின் உத்தரவு என்ன?
DMK Meeting: விஜயை சமாளிப்பது எப்படி? உள்ளாட்சி தேர்தல் - இன்று கூடுகிறது திமுக செயற்குழு கூட்டம், ஸ்டாலின் உத்தரவு என்ன?
Pushpa 2 Collection: அடங்காத வசூல்! அரண்டு போன பாலிவுட்! கோடிகளை குவிக்கும் புஷ்பா 2!
Pushpa 2 Collection: அடங்காத வசூல்! அரண்டு போன பாலிவுட்! கோடிகளை குவிக்கும் புஷ்பா 2!
Embed widget