மேலும் அறிய

Coimbatore: 'அரசியல் கண்ணோட்டத்தில் பட்ஜெட் போடப்படவில்லை' - மத்திய அமைச்சர் ராஜீவ் சந்திரசேகர்

"அரசியல் நோக்கத்தோடு இந்த பட்ஜெட் உருவாக்கப்படவில்லை. மக்கள் வளர்ச்சிக்காகவும் இந்தியர்களின் எதிர்காலத்திற்காகவும் இந்த பட்ஜெட் உருவாக்கப்பட்டுள்ளது”

பட்ஜெட் விளக்க கூட்டம் உள்ளிட்ட பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வதற்காக மத்திய திறன் மேம்பாடு மற்றும் தகவல் தொழில்நுட்பத் துறை அமைச்சர் ராஜீவ் சந்திரசேகர் கோவைக்கு வருகை தந்தார். கோவை சித்தாபுதூர் பகுதியில் உள்ள பாரதிய ஜனதா கட்சி அலுவலகத்தில் அமைச்சர் ராஜீவ் சந்திரசேகர் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர், “கோவிட் பாதிப்பிற்கு பிறகு உலக நாடுகள் பல்வேறு பொருளாதார நெருக்கடியில் சிக்கி வரும் சூழலில் இந்தியா மிக வேகமாக பொருளாதாரத்தில் முன்னேறி வருகிறது. குறிப்பாக சர்வதேச அளவில் சக்தி வாய்ந்த நாடுகளான சீனா, அமெரிக்கா, இங்கிலாந்து போன்ற நாடுகள் கோவிட் பாதிப்பு மட்டுமின்றி அதனை தொடர்ந்து ஏற்பட்ட ரஷ்யா உக்ரைன் போர் காரணமாகவும் பொருளாதார பின்னடைவுகளை சந்தித்து வருகிறது.

சீனாவில் தொடர்ந்து கொரோனா பொதுமுடக்கம் அமல்படுத்தப்பட்டு வருகிறது. அமெரிக்கா மற்றும் இங்கிலாந்து நாடுகளில் பண வீக்கம், வேலையின்மை ஆகிய பிரச்சினைகள் உள்ளன. இந்த சூழலில் இந்தியா மிக வேகமாக முன்னேறி வருவது குறிப்பிடத்தக்கது. இந்த சூழலில் சுதந்திர இந்தியாவின் மிகப்பெரிய பட்ஜெட்டினை சுமார் 45 லட்சம் கோடி மதிப்பீட்டில் மத்திய அரசு அறிவித்துள்ளது. பொது மக்கள் நலன் சார்ந்தும் ஏழை எளிய மக்களின் முன்னேற்றத்திற்காகவும் கிராமங்கள் ஊரக பகுதிகள் தலித் மக்கள் பொருளாதாரத்தில் பின்தங்கியவர்கள் என அனைத்து தரப்பினரையும் முன்னேற்றம் வகையில் இந்த பட்ஜெட் அமைந்துள்ளது.
குறிப்பாக விவசாயம், நகர கட்டமைப்புகள் மற்றும் டிஜிட்டல் மேம்பாட்டுக்காக பல்வேறு அம்சங்கள் பட்ஜெட்டில் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஒவ்வொரு இந்தியரின் எதிர்காலத்திற்காகவும் ஒவ்வொரு இந்தியரின் வளர்ச்சிக்காகவும் இந்த பட்ஜெட் திட்டமிடப்பட்டுள்ளது. சுற்றுச்சூழலுக்கு முக்கியத்துவம் அளிக்கும் Green growth - பசுமை வளர்ச்சி, இளைஞர்களுக்கான வேலை வாய்ப்புகளை உருவாக்குதல் என ஏழு அம்சங்களை கொண்ட பட்ஜெட்டாக இது அமைந்துள்ளது.


Coimbatore: 'அரசியல் கண்ணோட்டத்தில் பட்ஜெட் போடப்படவில்லை' - மத்திய அமைச்சர் ராஜீவ் சந்திரசேகர்

சர்வதேச அளவில் தொழில்நுட்பங்களை பயன்படுத்துவதில் இந்தியா முன்னணியில் விளங்கி வருகிறது. டிஜிட்டலைசேஷன் பெருமளவில் இந்தியாவில் ஏற்பட்டுள்ளது. பாரத பிரதமர் அவர்களின் அரசில் எந்தவிதமான ஊழலும் இன்றி தாமதம் இன்றி மக்கள் நலத்திட்டங்கள் பயனாளிகளை சென்றடைந்துள்ளது குறிப்பிடத்தக்கது. இது தொடரும். மற்ற நாடுகளும் இந்தியாவிடம் இருந்து பல்வேறு விஷயங்களை கற்று வருகின்றன. கடந்த 10 வருடங்களில் பாரத பிரதமர் அவர்கள் இந்தியாவை தொழில்நுட்ப வளர்ச்சி பாதையில் செலுத்தி வருகிறார். புதிதாக நர்சிங் கல்லூரிகள் திறக்கப்படும் என பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டுள்ளது. இளைஞர்களின் திறனை வளர்க்கும் விதத்தில் ஸ்கில் பயிற்சிகள் வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. வேலை வாய்ப்புகள் உருவாக்கப்பட உள்ளது. கடந்த 9 ஆண்டுகளில், 65 ஆண்டுகளாக இந்தியா கண்டிராத வளர்ச்சியினை கண்டுள்ளது.

டெல்லியில் இருந்து எவ்வளவு தூரத்தில் இருந்தாலும் அனைவருக்குமான வளர்ச்சியை பாரத பிரதமர் மோடியின் அரசு வழங்கி வருகிறது. அடுத்த 15 வருடங்களில் சர்வதேச அளவில் முக்கிய பொருளாதார சக்தி மிகுந்த நாடாக இந்தியா திகழும்” எனத் தெரிவித்தார். தொடர்ந்து செய்தியாளர்களின் கேள்விகளுக்கு பதில் அளித்தவர், ”ஜி.எஸ்.டி என்பது ஜிஎஸ்டி கவுன்சிலால் நடைமுறைப்படுத்தப்படுவது. கோவிட் பாதிப்பு மற்றும் போர் சூழல் காரணமாக சர்வதேச அளவில் அனைத்து பொருட்களின் விலை உயர்ந்துள்ளது. இந்த பட்ஜெட் அவற்றை கட்டுக்குள் வைத்து ஒவ்வொரு இந்தியரின் பொருளாதாரத்தை வளர்ச்சி அடைய ஊக்குவிக்கும். அரசியல் நோக்கத்தோடு இந்த பட்ஜெட் உருவாக்கப்படவில்லை. மக்கள் வளர்ச்சிக்காகவும் இந்தியர்களின் எதிர்காலத்திற்காகவும் இந்த பட்ஜெட் உருவாக்கப்பட்டுள்ளது” எனக் கூறினார்.

மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola

லைவ் டிவி

ABP न्यूज़
ABP আনন্দ
ABP माझा
ABP અસ્મિતા
ABP Sਸਾਂਝਾ
POWERED BY
sponsor

தலைப்பு செய்திகள்

கோவை விமான நிலையம் அருகே அதிர்ச்சி: கல்லூரி மாணவி கூட்டு பாலியல் வழக்கு - இன்று தீர்ப்பு!
கோவை விமான நிலையம் அருகே அதிர்ச்சி: கல்லூரி மாணவி கூட்டு பாலியல் வழக்கு - இன்று தீர்ப்பு!
யானையைப் பார்த்தும் பயமில்லை.? - கோவையில் பின்னால் ஓடிய இளைஞர்கள்...
யானையைப் பார்த்தும் பயமில்லை.? - கோவையில் பின்னால் ஓடிய இளைஞர்கள்...
‘கேரளா ஸ்டோரி 2’ சர்ச்சை... கோவையிலும் வெடித்த போராட்டம்...
‘கேரளா ஸ்டோரி 2’ சர்ச்சை... கோவையிலும் வெடித்த போராட்டம்...
குடிநீர் இணைப்பு... “முதலில் பணம் கொடுங்கள்
குடிநீர் இணைப்பு... “முதலில் பணம் கொடுங்கள்" - ₹5,000 லஞ்சம் கேட்டு சிக்கிய அரசு ஊழியர்கள்...
ABP Premium

வீடியோ

Udhayanidhi Stalin | ’’ஐயா உதவி பண்ணுங்க’’காலில் விழுந்த மூதாட்டி பதறிய உதயநிதி | Tenkasi
Bangalore Dog Issue | சிறுநீர் கழித்த வளர்ப்பு நாய்வாக்குவாதத்தில் ஈடுபட்ட நபர் சரமாரி தாக்குதல்!
Ameer slams Vijay | ’’மனைவி மகளை விரட்டிட்டுமகளிர் தின விழா கேக்குதா?’’விஜய்யை கிழித்த அமீர் | TVK
Kiruthiga Udhayanidhi | ”பிரச்சனைல மாட்டிக்காதீங்க”விஜய்க்கு மறைமுக ADVICE?கிருத்திகா உதயநிதி அதிரடி
Vijay Sangeetha Divorce | PRESS MEET-க்கு ரெடி!அதிரடி காட்டும் சங்கீதா இறங்கி வந்த விஜய்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
TVK Vijay: ‘எனக்கு வருத்தம் எல்லாம் கிடையாது” - மனைவி சங்கீதா தொடுத்த வழக்கு... முதல்முறையாக வாய் திறந்த விஜய்
‘எனக்கு வருத்தம் எல்லாம் கிடையாது” - மனைவி சங்கீதா தொடுத்த வழக்கு... முதல்முறையாக வாய் திறந்த விஜய்
TVK Vijay: அண்ணன் சீர் திட்டத்தை அறிவித்த விஜய்.. ஆனந்த கண்ணீர் வடித்த பெண்கள் - வீடியோவை பாருங்க!
TVK Vijay: அண்ணன் சீர் திட்டத்தை அறிவித்த விஜய்.. ஆனந்த கண்ணீர் வடித்த பெண்கள் - வீடியோவை பாருங்க!
விஜய் அதிரடி அறிவிப்பு! குடும்பத் தலைவிகளுக்கு ரூ.2500, இலவச சிலிண்டர்கள் & மேலும் பல!
விஜய் அதிரடி அறிவிப்பு! குடும்பத் தலைவிகளுக்கு ரூ.2500, இலவச சிலிண்டர்கள் & மேலும் பல!
TVK Vijay: விஜய்க்கு போட்டியாக களமிறங்கப்போகும் விசிக? தளபதிக்கு எதிராக இறங்கப்போவது இவரா?
TVK Vijay: விஜய்க்கு போட்டியாக களமிறங்கப்போகும் விசிக? தளபதிக்கு எதிராக இறங்கப்போவது இவரா?
Election 2026: பதற்றமான ஏரியாக்கள் எது? லிஸ்ட் எடுக்கும் போலீஸ்! விழுப்புரம் மாவட்ட ஆட்சியரின் அதிரடி 'பிளான்'!
Election 2026: பதற்றமான ஏரியாக்கள் எது? லிஸ்ட் எடுக்கும் போலீஸ்! விழுப்புரம் மாவட்ட ஆட்சியரின் அதிரடி 'பிளான்'!
₹50,000 முன்பணத்தில் Maruti Ertiga வாங்க EMI எவ்வளவு? குடும்பத்திற்கு ஏற்ற கார் பற்றிய முழு தகவல் இதோ
₹50,000 முன்பணத்தில் Maruti Ertiga வாங்க EMI எவ்வளவு? குடும்பத்திற்கு ஏற்ற கார் பற்றிய முழு தகவல் இதோ
Toyota Discounts: ரூபாய் 45 ஆயிரம் வரை தள்ளுபடி.. டொயொட்டா தந்த ஆஃபர் - எந்த காருக்கு எவ்வளவு?
Toyota Discounts: ரூபாய் 45 ஆயிரம் வரை தள்ளுபடி.. டொயொட்டா தந்த ஆஃபர் - எந்த காருக்கு எவ்வளவு?
DMK alliance seat allocation : திமுக கூட்டணியில் இத்தனை கட்சிகளா.!! எந்த எந்த கட்சிக்கு எத்தனை தொகுதி.? இதோ சீக்ரெட் லிஸ்ட்
திமுக கூட்டணியில் இத்தனை கட்சிகளா.!! எந்த எந்த கட்சிக்கு எத்தனை தொகுதி.? இதோ சீக்ரெட் லிஸ்ட்
Embed widget