மேலும் அறிய

”பத்திரிக்கையாளர்களை குரங்கு எனச் சொல்லவில்லை..மன்னிப்பு கேட்பது ரத்தத்திலேயே கிடையாது” - அண்ணாமலை

"இது தற்கொலை தாக்குதல். இதனை சிலிண்டர் விபத்து என்று சொல்ல முடியாது. சிலிண்டர் விபத்து என்ற சொன்னால் மக்களிடம் எச்சரிக்கை உணர்வு இல்லாமல் போகும்."

கோவையில் கடந்த 23 ஆம் தேதி கோட்டை ஈஸ்வரன் கோவில் அருகில் கார் வெடித்த சம்பவம் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியது. இந்நிலையில் பாஜக மாநில தலைவர் அண்ணாமலை கோட்டை ஈஸ்வரன் கோவிலில் சாமி தரிசனம் செய்தார். மேலும் கோவையில் பாஜக மகளிர் அணி சார்பில் கோவிலில் கூட்டு பிராத்தனை மேற்கொள்ளப்பட்டது. அதில் கலந்து கொண்டு கந்தசஷ்டி கவசத்தை வாசித்தார். பாஜக மாநிலத் தலைவர் வருகையை ஒட்டி அக்கோவில் பகுதியில் 100க்கும் மேற்பட்ட காவல் துறையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டனர்.

அதனை தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த அண்ணாமலை கூறும் போது, ”கோவையில் பெரும் நிகழ்வு தடுத்து நிறுத்தப்பட்டுள்ளது.  கோட்டை ஈஸ்வரன் கோவிலில் மத நல்லிணக்கம் மத ஒற்றுமை கோவை மக்கள் என்னுடைய வாழ்க்கை பயணம் நன்றாக இருக்க வேண்டும் என்று கந்த சஷ்டி கவசத்தை ஒன்றாக பாடி உள்ளோம். இது தற்கொலை தாக்குதல். இதனை சிலிண்டர் விபத்து என்று சொல்ல முடியாது. சிலிண்டர் விபத்து என்ற சொன்னால் மக்களிடம் எச்சரிக்கை உணர்வு இல்லாமல் போகும். 

1998 குண்டு வெடிப்பிற்கு பிறகு கோவையின் வளர்ச்சி என்பது எதிர்பார்த்த அளவுக்கு இல்லை. அந்த குண்டு வெடிப்பிற்கு பிறகு கோவையின் வளர்ச்சி பின்னோக்கி சென்றது. கடந்த பத்து வருடங்களாக கோவையில் உள்ள மக்கள் தொழிலதிபர்கள் கோவையை முன்னெடுத்து செல்கின்றனர். இந்த நேரத்தில் இந்த தற்கொலை தாக்குதல் நடந்திருந்தால் கோவை மாவட்டம் இன்னும் 20 வருடங்கள் பின்னோக்கி சென்றிருக்கும். 

”பத்திரிக்கையாளர்களை குரங்கு எனச் சொல்லவில்லை..மன்னிப்பு கேட்பது ரத்தத்திலேயே கிடையாது” - அண்ணாமலை

அதனைத் தடுத்து நிறுத்திய முதல் காக்கும் கடவுள்களாக காவல் துறையினர் இருக்கின்றனர். துணை தாக்குதல் எதுவும் நடைபெறாத வண்ணம் கோவை காவல் துறையினர் உயிரை பணயம் வைத்து பணி செய்துள்ளனர். எனவே கோவை மாநகர காவல் துறையினருக்கு நன்றிகள் தெரிவித்துக் கொள்கிறேன். சதிகார்கள் மதத்தால் பிளவுபடுத்த முயற்சித்தாலும் கூட கோவை மக்கள் ஒன்றாக இருக்கின்றனர். 23ம் தேதி நடந்த சம்பவத்திற்கு பிறகு இங்குள்ள இஸ்லாமிய பெருமக்கள், மதகுருமார்கள் கூட நல்ல கருத்துக்களை முன்வைத்துள்ளனர். கோவையில் உள்ள மக்கள் வன்முறையை கையில் எடுக்கக் கூடாது. வன்முறையை கையில் எடுப்பவர்களுக்கு ஊக்கம் அளிக்கக்கூடாது. 

பாஜக எந்தவித மத சாயத்தையும் பூசவில்லை. குற்றவாளிகள் என்று தான் கூறி வருகிறோம்.சனதான தர்மத்தின் அடிப்படை யாரையும் பிரித்து பார்க்கக் கூடாது என்பது தான். எல்லா மதத்திலும் நல்லவர்கள், கெட்டவர்கள் இருக்கிறார்கள். சிலர் தவறு செய்தார்கள் என்பதற்காக இஸ்லாமியர்கள் மீது குற்றம்சாட்டமாட்டோம். என்.ஐ.ஏ. ஒரு ஏஜென்சி. அவர்கள் விசாரணை மட்டுமே நடத்துவார்கள்.மத்திய உளவுப் பிரிவு என்ன தகவல்களை கொடுத்தாலும், கள அளவில் செயல்படுத்த வேண்டியது காவல் துறைதான். இது சிஸ்டமிக் பெயிலியர். அதை சரி செய்ய வேண்டும். மாநில அரசிடம் நாங்கள் வைத்துள்ள கேள்விகள் எல்லாம் மாநில அரசு நன்றாக செயல்பட வேண்டும் என்பதற்காகவே தவிர, மாநில அரசை குற்றம் குறை காண்பிக்கவோ மாநில அரசுக்கு தொந்தரவு அளிக்க வேண்டும் என்பதற்காகவோ அல்ல” எனத் தெரிவித்தார்.

அப்போது கார் வெடிப்பு சம்பவத்தின் போது கைப்பற்றப்பட்ட சில பொருட்களான கோலிகுண்டு, ஆணிகளை காண்பித்து பேசினார். தொடர்ந்து பேசிய அவர், ”இன்னும் காவல்துறையினர் இதனை சிலிண்டர் வெடித்தது என்று கூறுவதற்கு என்ன காரணம் அதனை எப்படி ஏற்றுக்கொள்ள முடியும்? ஐ.எஸ்.ஐ.எஸ் என்பது தவறான ஐடியாலஜி என இஸ்லாமிய மதத்தில் உள்ள குருமார்களே சொல்கிறார்கள்.  கூடிய விரைவில் இஸ்லாமிய குருமார்களையும் சந்திக்க உள்ளேன். காவல்துறையில் சில கவனக்குறைவுகள் ஏற்பட்டுள்ளது. உளவுப் பிரிவு சிலரை கண்காணிக்கும் பணியை தவற விட்டு விட்டார்கள். காவல்துறையில் பணி சுமை உள்ளது. ஆள்பற்றா குறை இருக்கிறது.

”பத்திரிக்கையாளர்களை குரங்கு எனச் சொல்லவில்லை..மன்னிப்பு கேட்பது ரத்தத்திலேயே கிடையாது” - அண்ணாமலை

மத்திய அரசு ஏற்கனவே ஒற்றை ஓநாய் தாக்குதல் நடத்த கூடும் என முன்னெச்சரிக்கை விடுத்துள்ளது. காவல்துறை எப்போதும் மத்திய அரசின் கட்டுப்பாட்டிற்கு போய்விட கூடாது. அதனை பாஜக கட்சி ஒரு வாய்ப்பாக வைத்து பேசவும் மாட்டோம். மத்திய அரசு இதில் தலையிட வேண்டும் என கூற மாட்டோம். இச்சம்பவத்தை வைத்து பாஜக அரசியல் செய்யவோ அல்லது பலனடையவோ பாஜக கட்சி விரும்பாது. என்.ஐ.ஏ இதனை தீவிரவாத தாக்குதல் என தற்போது கூற வேண்டிய அவசியம் இல்லை ஆனால் தமிழக அரசு ஏன் தீவிரவாத தாக்குதல் என குறிப்பிடவில்லை?. பந்த் அறிவிப்பை பொறுத்தவரை கட்சியின் அலுவலகத்தில் இருந்து கூறினால் தலைவர் பொறுப்பாக முடியும். ஆனால் இது மாவட்ட நிர்வாகிகள் சில அமைப்புகள் முடிவெடுத்தது. எங்களுடைய அனுமதியின்றியும் பல்வேறு மாவட்டங்களில் போராட்டங்கள் நடைபெற்றுள்ளது. எங்களை பொறுத்தவரை தமிழகத்திற்கு ஒரு பலமான அதிமுக தேவை. அதிமுக கட்சி குறித்து கருத்து சொல்ல எனக்கு உரிமை இல்லை.

நான் எதற்கெடுத்தாலும் கோபம் கொள்கிறேன் என சொல்ல கூடாது, வரம்பு மீறும் போது, எப்படி செய்தியாளர்கள் தங்கள் மீது கோபம் கொள்கிறீர்களோ அதே போல் சில செய்தி ஊடகங்கள் குறி வைத்து ஒரே கேள்வியை கேட்டால் வருவது சகஜம் தானே” என கூறினார். அப்போது பத்திரிகையாளர்களை குரங்கு என குறிப்பிட்டது தொடர்பான கேள்வியின்போது அண்ணாமலைக்கும், செய்தியாளர்களுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. அப்போது பேசிய அவர், ”பத்திரிக்கையாளர்களை பார்த்து  யாரும் குரங்கு என்று சொல்லவில்லை பத்திரிக்கையாளர்களை பார்த்து குரங்கு போல் தாவித்தாவி வந்து என்னை பேசவிடாமல் பேட்டி எடுக்கிறீர்கள்? என்று தான் நான் கூறியது. இரண்டும் வேறு வேறு. நான் தவறு செய்யவில்லை. எனவே நான் மன்னிப்பு கேட்க மாட்டேன். என்னை பத்திரிகையாளர்கள் புறக்கணித்துக் கொள்ளலாம்” எனத் தெரிவித்தார்.

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

Sunita Williams: சிக்கித்தவிக்கும் சுனிதா வில்லியம்ஸ்?  பிப்ரவரியில் பூமி திரும்பமாட்டார்;  புதிய சிக்கல் என்ன?
சிக்கித்தவிக்கும் சுனிதா வில்லியம்ஸ்? பிப்ரவரியில் பூமி திரும்பமாட்டார்; புதிய சிக்கல் என்ன?
எங்க அப்பாவ மன்னிச்சிடுங்க? தந்தையின் பகீர் குற்றச்சாட்டு.. அஸ்வின் மறுப்பு!
எங்க அப்பாவ மன்னிச்சிடுங்க? தந்தையின் பகீர் குற்றச்சாட்டு.. அஸ்வின் மறுப்பு!
Rahul Gandhi: ''ராகுல் காந்தி என்னிடம் தவறாக நடந்துகொண்டார்'' பாஜக பெண் எம்.பி. பகீர் குற்றச்சாட்டு!
''ராகுல் காந்தி என்னிடம் தவறாக நடந்துகொண்டார்'' பாஜக பெண் எம்.பி. பகீர் குற்றச்சாட்டு!
ஹனிமூனுக்கு அங்க போகக் கூடாது! புது மாப்பிள்ளை மீது ஆசிட் வீச்சு.. மாமனார் வெறிச்செயல்
ஹனிமூனுக்கு அங்க போகக் கூடாது! புது மாப்பிள்ளை மீது ஆசிட் வீச்சு.. மாமனார் வெறிச்செயல்
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Ashwin Profile: ”நான் சொடுக்கு பந்து போடணுமா?”தலையெழுத்தை மாற்றிய COACH நாயகன் அஸ்வினின் கதை..!Rahul gandhi on MP injury: ”ஆமா...தள்ளிவிட்டேன்! என்னையவே தடுக்குறீங்களா?” ஆதாரத்துடன் பேசிய ராகுல்Vijay vs Vck | வாயை திறக்காத விஜய்.. பணிய வைத்த விசிக!ரவுண்டு கட்டும் நெட்டிசன்ஸ்! tvk | vckMLA Inspection : ‘’எல்லாம் அறிவு கெட்டவனா?’’LEFT & RIGHT வாங்கிய MLA திக்குமுக்காடிய அதிகாரிகள்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Sunita Williams: சிக்கித்தவிக்கும் சுனிதா வில்லியம்ஸ்?  பிப்ரவரியில் பூமி திரும்பமாட்டார்;  புதிய சிக்கல் என்ன?
சிக்கித்தவிக்கும் சுனிதா வில்லியம்ஸ்? பிப்ரவரியில் பூமி திரும்பமாட்டார்; புதிய சிக்கல் என்ன?
எங்க அப்பாவ மன்னிச்சிடுங்க? தந்தையின் பகீர் குற்றச்சாட்டு.. அஸ்வின் மறுப்பு!
எங்க அப்பாவ மன்னிச்சிடுங்க? தந்தையின் பகீர் குற்றச்சாட்டு.. அஸ்வின் மறுப்பு!
Rahul Gandhi: ''ராகுல் காந்தி என்னிடம் தவறாக நடந்துகொண்டார்'' பாஜக பெண் எம்.பி. பகீர் குற்றச்சாட்டு!
''ராகுல் காந்தி என்னிடம் தவறாக நடந்துகொண்டார்'' பாஜக பெண் எம்.பி. பகீர் குற்றச்சாட்டு!
ஹனிமூனுக்கு அங்க போகக் கூடாது! புது மாப்பிள்ளை மீது ஆசிட் வீச்சு.. மாமனார் வெறிச்செயல்
ஹனிமூனுக்கு அங்க போகக் கூடாது! புது மாப்பிள்ளை மீது ஆசிட் வீச்சு.. மாமனார் வெறிச்செயல்
TN Rain: மழை வருமா, வராதா? ;  தமிழ்நாட்டில் 7 நாட்களில் மழை நிலவரம் எப்படி இருக்கும் தெரியுமா?
மழை வருமா, வராதா? ; தமிழ்நாட்டில் 7 நாட்களில் மழை நிலவரம் எப்படி இருக்கும் தெரியுமா?
இது தனி ரூட்... தவெக மாநாடு வசூலில் பதம்பார்த்த லிஸ்டட் நிர்வாகிகள் ; மனஉளைச்சலில் பிற நிர்வாகிகள்...!
இது தனி ரூட்... தவெக மாநாடு வசூலில் பதம்பார்த்த லிஸ்டட் நிர்வாகிகள் ; மனஉளைச்சலில் பிற நிர்வாகிகள்...!
"ஒரு ஆணுக்கு இரண்டு மனைவிகள்.. லிவ் இன் ரிலேஷன்ஷிப் தவறு" நிதின் கட்காரி பரபர கருத்து!
Ambedkar Row: என்னதான் நடக்கிறது டெல்லியில்? ஐசியுவில் பாஜக எம்.பி.- காங்கிரஸ் தலைவர் கார்கேவுக்கு காயம்!
Ambedkar Row: என்னதான் நடக்கிறது டெல்லியில்? ஐசியுவில் பாஜக எம்.பி.- காங்கிரஸ் தலைவர் கார்கேவுக்கு காயம்!
Embed widget