மேலும் அறிய

பாரதியார் பல்கலைக்கழக துணை வேந்தருக்கு எதிராக போராட்டம் - ஹெச்.ராஜா கைது

பெண் உரிமை என்ற பெயரில் பாரதியார் பல்கலைக் கழக வளாகத்திற்குள் திராவிட இயக்கத் தமிழர் பேரவை நிறுவனர் சுப.வீரபாண்டியன் கலந்தாய்வு கூட்டம் நடைபெற்றது.

கோவை வடவள்ளி அருகே உள்ள பாரதியார் பல்கலைக்கழகத்தின் துணைவேந்தர் காளிராஜை கண்டித்தும், கேரளாவில் பாஜக நிர்வாகி படுகொலை செய்யப்பட்டதை கண்டித்தும், இந்து முன்னணி மற்றும் பாரதிய ஜனதா கட்சியினர் இணைந்து கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். பாரதியார் பல்கலைக்கழக முன்பாக நடந்த இந்த ஆர்ப்பாட்டத்தில் இந்து முன்னணி மாநில பொதுச்செயலாளர் கிஷோர் குமார், பாஜக மூத்த தலைவர் ஹெச்.ராஜா ஆகியோர் கலந்து கொண்டனர். 

பாரதியார் பல்கலைக்கழக துணை வேந்தருக்கு எதிராக போராட்டம் - ஹெச்.ராஜா கைது

இதையடுத்து பாஜக மூத்த தலைவர் ஹெச்.ராஜா செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது பேசிய அவர், ”பெண் உரிமை என்ற பெயரில் பாரதியார் பல்கலைக் கழக வளாகத்திற்குள் திராவிட இயக்கத் தமிழர் பேரவை நிறுவனர் சுப.வீரபாண்டியன் கலந்தாய்வு கூட்டம் நடத்தியது கண்டிக்கத்தக்கது. பல்கலைக்கழக துணை வேந்தர் காளிராஜ் நானே மனதார கருப்பு சட்டை போட்டு இந்த கூட்டத்தில் கலந்து கொண்டிருப்பேன் என்று கூறியுள்ளார். இது வன்மையாக கண்டிக்கத்தக்கது. பல்கலைக்கழக துணைவேந்தர் உடனடியாக ராஜினாமா செய்ய வேண்டும் அல்லது மன்னிப்பு கேட்க வேண்டும். அதன் பிறகு தி.க உடன் இணைந்து கருப்பு சட்டை அணிந்து கொண்டு செல்லலாம். ஆனால் பல்கலைக்கழக வளாகத்திற்குள் இதுபோல தி.க அமைப்பினர் மற்றும் ஒரு சார்பாக நடத்துவது மதவெறியை தூண்டுவதாக உள்ளது. இதுபோல் நடைபெற்றால் இந்து அமைப்புகள் அனைவரும் ஆர்ப்பாட்டம் நடத்துவோம். இது குறித்து நடவடிக்கை எடுக்க ஆளுநரிடம் கோரிக்கை வைக்க உள்ளேன்” என அவர் தெரிவித்தார். இதையடுத்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட ஹெச்.ராஜா உள்ளிட்ட ஆயிரத்திற்கும் மேற்பட்டோரை காவல் துறையினர் கைது செய்தனர். 

பாரதியார் பல்கலைக்கழக துணை வேந்தருக்கு எதிராக போராட்டம் - ஹெச்.ராஜா கைது

இதனிடையே பாரதியார் பல்கலைக்கழக துணை வேந்தர் காளிதாஸ் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது பேசிய அவர், “பாரதியார் பல்கலைக் கழகத்தில் கடந்த 17ம் தேதி சமூக பணித்துறை சார்பாக பெண்கள் உரிமை எனும் தலைப்பில் கருத்தரங்கு நடைபெற்றது. இதில் சுப.வீரபாண்டியன் மற்றும் ஓவியா கலந்து கொண்டனர். இது எந்த கட்சியோ, அமைப்பு சார்பிலோ நடைபெறவில்லை. இந்த கருத்தரங்கில் பெண்ணுரிமை பற்றி மட்டும் தான் பேசினார்கள். பெரியார், பாரதியார் ஆகியோர் எப்படி பெண்ணுரிமைக்காக பாடுபட்டார்கள் என்பது குறித்து பேசினார்கள். கல்லூரியில் மத தூண்டுதலை ஏற்படுத்தும் வகையிலோ அல்லது, அரசியல் மற்றும் அமைப்புகளை இழிவாகவோ பேசவில்லை. எந்த விதமான கருத்து வேறுபாடுகளும் இங்கு இல்லை. அடுத்ததாக ஆசிரியர்கள் மற்றும் விழா ஒருங்கிணைப்பாளர்களுடன் அந்த நிகழ்ச்சியில் என்ன நடந்தது என்பதே ஆலோசிக்க உள்ளோம்” என அவர் தெரிவித்தார்.

ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்

பேஸ்புக் பக்கத்தில் தொடர

ட்விட்டர் பக்கத்தில் தொடர

யூடிபில் வீடியோக்களை காண

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

மக்களே உசார்.! சென்னை உள்ளிட்ட 7 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு.! லிஸ்ட் இதோ
மக்களே உசார்.! சென்னை உள்ளிட்ட 7 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு.! லிஸ்ட் இதோ
குடும்ப தலைவிகளுக்கு இனி மாதம் ரூ.2,500 வழங்கப்படும்; முதல்வர் அதிரடி அறிவிப்பு
குடும்ப தலைவிகளுக்கு இனி மாதம் ரூ.2,500 வழங்கப்படும்; முதல்வர் அதிரடி அறிவிப்பு
விறு, விறு மதுரை எய்ம்ஸ் பணி.. சுற்றுவட்டார பகுதி நிலங்களுக்கு அதிகரிக்கும் மவுசு
விறு, விறு மதுரை எய்ம்ஸ் பணி.. சுற்றுவட்டார பகுதி நிலங்களுக்கு அதிகரிக்கும் மவுசு
Jio SpaceX Deal: ஜியோ வாடிக்கையாளர்களுக்கு அட்டகாசமான செய்தி.. விரைவில் வருது Starlink இன்டர்நெட்.. முழு விவரம்
ஜியோ வாடிக்கையாளர்களுக்கு அட்டகாசமான செய்தி.. விரைவில் வருது Starlink இன்டர்நெட்.. முழு விவரம்
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Mohammed Shami controversy | ரமலான் நோன்பு.. அவமதித்தாரா முகமது ஷமி? இஸ்லாம் சொல்வது என்ன?Mayor Issue | “பொண்ணுனா கேவலமா போச்சா” கடலூர் மேயர் Vs அதிகாரிகள் மோதல் பின்ணனி என்ன? | CuddaloreJyotika on Vijay | ”என் புருஷன் கேவலமா போயிட்டாரா குப்பை படத்த கொண்டாடுறாங்க” விஜயை சீண்டிய ஜோதிகா?EX MLA Kathiravan: ”EX MLA கிட்டயே கட்டணமா?” போலீசாருடன் வாக்குவாதம் காரை குறுக்கே நிறுத்தி சண்டை

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
மக்களே உசார்.! சென்னை உள்ளிட்ட 7 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு.! லிஸ்ட் இதோ
மக்களே உசார்.! சென்னை உள்ளிட்ட 7 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு.! லிஸ்ட் இதோ
குடும்ப தலைவிகளுக்கு இனி மாதம் ரூ.2,500 வழங்கப்படும்; முதல்வர் அதிரடி அறிவிப்பு
குடும்ப தலைவிகளுக்கு இனி மாதம் ரூ.2,500 வழங்கப்படும்; முதல்வர் அதிரடி அறிவிப்பு
விறு, விறு மதுரை எய்ம்ஸ் பணி.. சுற்றுவட்டார பகுதி நிலங்களுக்கு அதிகரிக்கும் மவுசு
விறு, விறு மதுரை எய்ம்ஸ் பணி.. சுற்றுவட்டார பகுதி நிலங்களுக்கு அதிகரிக்கும் மவுசு
Jio SpaceX Deal: ஜியோ வாடிக்கையாளர்களுக்கு அட்டகாசமான செய்தி.. விரைவில் வருது Starlink இன்டர்நெட்.. முழு விவரம்
ஜியோ வாடிக்கையாளர்களுக்கு அட்டகாசமான செய்தி.. விரைவில் வருது Starlink இன்டர்நெட்.. முழு விவரம்
Chennai Car Parking Rules: ஏங்க.. பைக், கார் வாங்கப் போறீங்களா.? இந்த புது ரூல்ஸ் பத்தி தெரிஞ்சா முடிவு மாறிடும்...
ஏங்க.. பைக், கார் வாங்கப் போறீங்களா.? இந்த புது ரூல்ஸ் பத்தி தெரிஞ்சா முடிவு மாறிடும்...
Soundarya Death: 6 ஏக்கர் நிலத்துக்காக பறிபோனதா நடிகை சௌந்தர்யாவின் உயிர்? விசாரணை வளையத்தில் பிரபல நடிகர்?
Soundarya Death: 6 ஏக்கர் நிலத்துக்காக பறிபோனதா நடிகை சௌந்தர்யாவின் உயிர்? விசாரணை வளையத்தில் பிரபல நடிகர்?
ஜெயலலிதா சேலையை பிடித்து இழுத்தவங்க இவங்க! நாகரிகம் பற்றி பேசலாமா? – லிஸ்ட் போட்டு திமுகவை சாடிய நிர்மலா!
ஜெயலலிதா சேலையை பிடித்து இழுத்தவங்க இவங்க! நாகரிகம் பற்றி பேசலாமா? – லிஸ்ட் போட்டு திமுகவை சாடிய நிர்மலா!
Batlagundu Tollgate : அடித்து நொறுக்கப்பட்ட டோல்கேட்! வத்தலக்குண்டுவில் பரபரப்பு.. நடந்தது என்ன?
Batlagundu Tollgate : அடித்து நொறுக்கப்பட்ட டோல்கேட்! வத்தலக்குண்டுவில் பரபரப்பு.. நடந்தது என்ன?
Embed widget