Actor SathyaRaj: தி.மு.க. ஆட்சி திருப்தியாக உள்ளது..! ஆளுநர் மனிதாபிமானத்துடன் நடக்க வேண்டும்..! நடிகர் சத்யராஜ்
இரண்டு ஆண்டு திமுக ஆட்சி மிகவும் திருப்திகரமாக உள்ளது என்று நடிகர் சத்யராஜ் கூறியுள்ளார்.
![Actor SathyaRaj: தி.மு.க. ஆட்சி திருப்தியாக உள்ளது..! ஆளுநர் மனிதாபிமானத்துடன் நடக்க வேண்டும்..! நடிகர் சத்யராஜ் Actor Satyaraj said that two years of dmk rule is very satisfactory Actor SathyaRaj: தி.மு.க. ஆட்சி திருப்தியாக உள்ளது..! ஆளுநர் மனிதாபிமானத்துடன் நடக்க வேண்டும்..! நடிகர் சத்யராஜ்](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2023/04/07/581e5c2d13c57ee325391886a04f9a011680877905562188_original.jpg?impolicy=abp_cdn&imwidth=1200&height=675)
கோவை வ.உ.சி மைதானத்தில் 'எங்கள் முதல்வர் - எங்கள் பெருமை' என்ற சிறப்பு புகைப்பட கண்காட்சியை மின்சாரம், மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத்துறை அமைச்சர் செந்தில்பாலாஜி முன்னிலையில் நடிகர் சத்தியராஜ் ரிப்பன் வெட்டி திறந்து வைத்து பார்வையிட்டார். 15 ஆயிரம் சதுரடி பரப்பளவில், 500 க்கும் மேற்பட்ட புகைப்படங்கள் இடம் பெற்றுள்ளது.
அரங்கத்தின் முன்பு அழகிய நீருற்று அமைக்கப்பட்டுள்ளது. தமிழக முதல்வரின் சிறு வயது புகைப்படம் முதல், இளைஞரணியில் அவர் ஆற்றிய பணிகள், சென்னை மேயர், துணை முதல்வர், தற்போது முதல்வர் என அவர் கடந்து வந்த பாதைகள், மிஸா சிறைவாசம் உள்ளிட்ட புகைப்படங்கள் காட்சிபடுத்தப்பட்டுள்ளது. மேலும் முதலமைச்சரின் ஆட்சியில் கொண்டு வரப்பட்ட திட்டங்களின் புகைப்படங்களும் இடம்பெற்றுள்ளது.
இதனைத்தொடர்ந்து நடிகர் சத்யராஜ் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது பேசிய அவர், “சென்னையில் இந்த புகைப்பட கண்காட்சி ஆரம்பிக்கப்பட்டது. அந்த நிகழ்ச்சிக்கு அழைத்த போது, என்னால் போக முடியவில்லை. மதுரையில புகைப்பட கண்காட்சி ஆரம்பித்தார்கள். அங்கும் போக முடியவில்லை. தற்போது, மின்சாரத்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி அழைத்தார். வரவேண்டிய சூழ்நிலை வந்தது. கோவைக்கு மாதம் ஒருமுறை வருவேன். இந்த புகைப்படம் மிகச்சிறப்பாக இருந்தது. முதல்வர் ஸ்டாலின் பிறந்தது முதல் அனைத்து புகைப்படமும் இங்கு உள்ளது. அவர் மிசாவில் கைதாகவில்லை என சிலர் கூறுவார்கள். அந்த எப்.ஐ.ஆர் இங்கு சாட்சிக்கு வைக்கப்பட்டுள்ளது. சான்றிதழ்களோடு இங்கு புகைப்படம் வைக்கப்பட்டுள்ளது.
மு.க.ஸ்டாலினை பாராட்டிய எம்.ஜி.ஆர்.:
அற்புத திராவிட வரலாற்று புகைப்படம் மிகச் சிறப்பாக உள்ளது. 23 வயதில் சான்றிதழ்களோடு இந்த புகைப்படம் அமைக்கப்பட்டுள்ளது. தியாக வரலாறு எனக்கு பிடித்த புகைப்படம். முதல்வர் மு.க.ஸ்டாலின் கலைஞர் வேடமிட்டு பிரச்சார நாடகத்தில் நடித்துள்ளார். எம்ஜிஆர் அதனை பாராட்டியுள்ளார். திராவிட இயக்க வரலாறு சித்தாந்தத்தின் தெளிவு இந்த புகைப்பட கண்காட்சி. இரண்டு ஆண்டு திமுக ஆட்சி மிகவும் திருப்திகரமாக உள்ளது.
நடுத்தர மக்கள் அவர்கள் கீழே இருப்பவர்களுடன் பேசுவேன். அவர்கள் திருப்திகரமாக உள்ளது என தெரிவித்துள்ளார்கள். எந்த ஆட்சி வந்தாலும் நாங்கள் திருப்தியாக தான் உள்ளோம். மின்சாரத்துறை அமைச்சர் செந்தில்பாலாஜி ஒன்றரை லட்சம் பேருக்கு விவசாய மானியம், மின் இணைப்பு வழங்கி உள்ளது சிறப்பானது இதற்கு ஸ்ட்ராங்கான முதல்வர் மு.க. ஸ்டாலின் தான் காரணம்” எனத் தெரிவித்தார்.
மனிதாபிமானம் தேவை:
ஆளுநரின் செயல்பாடு குறித்த கேள்விக்கு, “அப்படி நடந்து கொள்ள வேண்டியதில்லை. ஏன் அப்படி நடந்து கொள்கிறார் என்று தெரியவில்லை. நல்ல காரியத்திற்கு நல்ல திட்டத்திற்கு ஆதரவாக செயல்பட வேண்டும். அதற்கு அவர் ஆதரவாக செயல்பட வேண்டும். மக்கள் நலமே முக்கியம். அதனை மனதில் கருத்தில் கொண்டு செயல்பட வேண்டும். மனிதாபிமானத்தோடு ஆளுநர் அணுக வேண்டும். ஆன்லைன் சூதாட்டத்தில் உயிர் இழப்பு அதிகம் ஏற்படுகிறது. கோவை மக்கள் அனைவரும் இங்கு வந்து இந்த புகைப்பட கண்காட்சியை பார்க்க வேண்டும்” எனத் தெரிவித்தார்.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்
தலைப்பு செய்திகள்
ட்ரெண்டிங் செய்திகள்
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)
![வினய் லால்](https://cdn.abplive.com/imagebank/editor.png)