ஹிப் ஹாப் ஆதி இசை நிகழ்ச்சியில் அடிதடி சண்டை.. மோதிக்கொண்ட இளைஞர்களால் பரபரப்பு..
ஹிப்பாப் ஆதியின் இசை நிகழ்ச்சியில் இளைஞர்களுக்கு இடையே அடிதடி சண்டை ஏற்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
கோவையில் இசையமைப்பாளரும், நடிகருமான ஹிப்பாப் ஆதியின் இசை நிகழ்ச்சியில் இளைஞர்களுக்கு இடையே அடிதடி சண்டை ஏற்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
கோவை கொடிசியா மைதானத்தில் நடிகரும், இசையமைப்பாளருமான ஹிப் ஹாப் ஆதியின் இசை நிகழ்ச்சி நேற்றைய தினம் நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் ஆயிரக்கணக்கான ரசிகர்கள் இசை நிகழ்ச்சியில் பங்கு பெற்றிருந்தனர். ஹிப் ஹாப் ஆதி உள்ளிட்டோர் கலந்து கொண்டு பாடல்களை பாடினர். இதனை அங்கு திரண்டிருந்த இரசிகர்கள் உற்சாகமாக கண்டு இரசித்தனர்.
இந்த நிகழ்ச்சிக்கு காவல் துறையினர் பாதுகாப்பும் வழங்கி இருந்தனர். இந்நிலையில் நேற்று இரவு நடைபெற்ற இசை நிகழ்ச்சியில் இளைஞர்கள் நடனமாடும் போது, இரு தரப்பினருக்கு இடையே மோதல் ஏற்பட்டதாக தெரிகிறது. அப்போது ஒருவரை ஒருவர் அடித்துக் கொண்டு நிகழ்ச்சியில் ஓடியதால் பரபரப்பு ஏற்பட்டது.
இளைஞர்களை வெளியேற்றிய காவலர்கள்
உடனடியாக அங்கு பாதுகாப்பு பணியில் இருந்த பவுன்சர்கள் காவல் துறையினர் தகவல் தெரிவித்தனர். இதையடுத்து சம்பவ இடத்தில் இருந்த காவல் துறையினர் சண்டையிட்ட இளைஞர்களை ஒவ்வொருத்தராக சட்டையை பிடித்து இழுத்துச் சென்றனர். பின்னர் அவர்களை இசை நிகழ்ச்சியில் அனுமதிக்காமல் வெளியே அனுப்பி வைத்தனர். இந்த நிலையில் ஹிப் ஹாப் ஆதியின் இசை நிகழ்ச்சியில் இளைஞர்களுக்கு இடையே ஏற்பட்ட தகராறில் ஒருவரை ஒருவரை அடித்துக் கொள்ளும் வீடியோ தற்போது வெளியாகி உள்ளது.
இரு தரப்பு இடையே ஏற்பட்ட கைகலப்பில் ஒருவரை ஒருவர் தாக்கி கொண்ட போது பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த போலீசார் மற்றும் பவுன்சர்கள் இளைஞர்களை இசை நிகழ்ச்சிகளில் இருந்து வெளியே அனுப்பி வைத்தனர். இதனால் இசை நிகழ்ச்சியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது. தற்போது இசை நிகழ்ச்சியில் இளைஞர்கள் மோதிக் கொள்ளும் காட்சிகள் சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகிறது