மேலும் அறிய

Crime : கணவன் மீதிருந்த ஆத்திரம் ; தாய் செய்த கொடூரத்தால் உயிரிழந்த 2 வயது பெண் குழந்தை..

கணவருடன் ஏற்பட்ட தகராறில் ஆத்திரமடைந்த தில்சாத் பானு தனது இரண்டு பெண் குழந்தைகளையும் கொடூரமாக அடித்து சித்ரவதை செய்ததாக கூறப்படுகிறது. இதில் இரண்டு வயது பெண் குழந்தையின் உடலில் காயங்கள் ஏற்பட்டுள்ளது.

கோவையில் 2 வயது குழந்தையை பெற்ற தாயே அடித்து சித்ரவதை செய்த நிலையில், அக்குழந்தை சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தது.

கோவை கரும்புக்கடை பகுதியைச் சேர்ந்தவர் முகமது ரபீக். 34 வயதான இவர், கூலித் தொழிலாளியாக பணியாற்றி வருகிறார். இவரது மனைவி தில்சாத் பானு (33). இத்தம்பதியினருக்கு 12 வயதில் ஒரு மகனும், 7 வயது மற்றும் 2 வயதில் பெண் குழந்தைகளும் இருந்தன. 12 வயது சிறுவன் அப்பகுதியில் உள்ள பள்ளியில் ஏழாம் வகுப்பு படித்து வருகிறான். இந்த நிலையில் முகமது ரபீக் - தில்சாத் பானு இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்துள்ளது. தொடர்ச்சியாக இருவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டு வந்த நிலையில், ஆத்திரமடைந்த தில்சாத் பானு தனது இரண்டு பெண் குழந்தைகளையும் கொடூரமாக அடித்து சித்ரவதை செய்ததாக கூறப்படுகிறது. இதில் இரண்டு வயது பெண் குழந்தையின் உடலில் காயங்கள் ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாக அக்குழந்தையின் உடல் நிலை மிகவும் மோசமடைந்துள்ளது. 

இதனைத் தொடர்ந்து அக்குழந்தையை கோவை அரசு மருத்துவமனையில் தில்சாத் பானு சிகிச்சைக்காக சேர்ந்தார். அப்போது குழந்தை விளையாடிக் கொண்டிருந்த போது கீழே விழுந்து விட்டதாக கூறியுள்ளார். ஆனால் குழந்தையின் உடல் முழுவதும் இருந்த காயங்கள் மருத்துவர்களுக்கு சந்தேகத்தை ஏற்படுத்தியது. இதையடுத்து மருத்துவர்கள் போத்தனூர் காவல் துறையினருக்கு தகவல் அளித்தனர். இதன் பேரில் விரைந்து வந்த காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டனர். அதில் தில்சாத் பானு அடித்ததால் தான் குழந்தை காயமடைந்தது தெரியவந்தது. மேலும் இது குறித்து குழந்தைகள் நல பாதுகாப்பு அலுவலர்களுக்கு தகவல் அளிக்கப்பட்டது. இதன் பேரில் குழந்தைகள் நல பாதுகாப்பு அதிகாரிகளும் விசாரணை நடத்தினர்.

இதனிடையே கோவை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த 2 வயது குழந்தை நேற்று சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தது. இதையடுத்து வழக்குப் பதிவு செய்த போத்தனூர் காவல் துறையினர், தில்சாத் பானுவை கைது செய்து சிறையில் அடைத்தனர். பெற்ற தாயே இரண்டு வயது குழந்தையை கொடூரமாக அடித்து சித்ரவதை செய்ததில், அக்குழந்தை உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்

ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்

பேஸ்புக் பக்கத்தில் தொடர

ட்விட்டர் பக்கத்தில் தொடர

யூடியூபில் வீடியோக்களை காண

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

IPL KKR vs RR: எடுபடாத RR பவுலிங்! போற போக்கில் ஜெயிச்ச கொல்கத்தா! ஜஸ்டில் மிஸ்ஸான டி காக் சதம்!
IPL KKR vs RR: எடுபடாத RR பவுலிங்! போற போக்கில் ஜெயிச்ச கொல்கத்தா! ஜஸ்டில் மிஸ்ஸான டி காக் சதம்!
கிளாம்பாக்கம் வேண்டாம்.. இனி கேரளா-கோவைக்கு கோயம்பேட்டில் இருந்தே போகலாம்..  என்ன சொல்றீங்க? முழு விவரம்
கிளாம்பாக்கம் வேண்டாம்.. இனி கேரளா-கோவைக்கு கோயம்பேட்டில் இருந்தே போகலாம்.. என்ன சொல்றீங்க? முழு விவரம்
Coimbatore Shutdown: கோவையில் மின்தடையா? (28.03.2025 ): மின் வாரியம் தெரிவித்தது என்ன?
Coimbatore Shutdown: கோவையில் மின்தடையா? (28.03.2025 ): மின் வாரியம் தெரிவித்தது என்ன?
ரூ.2.5 கோடி ஒப்பந்தம்: மகளிர் சுயஉதவிக்குழுக்களின் பொருட்கள்னாலே தரம்தான்
ரூ.2.5 கோடி ஒப்பந்தம்: மகளிர் சுயஉதவிக்குழுக்களின் பொருட்கள்னாலே தரம்தான்
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

EPS meets Amit shah | ஆட்சியில் பங்கு கேட்ட பாஜக கறார் காட்டிய இபிஎஸ் அ.மலைக்கு துணை முதல்வர்? ADMKEPS Delhi Visit: டெல்லிக்கு பறந்த EPSதனியாக சென்ற SP வேலுமணி உறுதியாகிறதா பாஜக கூட்டணி? |ADMK | BJPEPS போட்ட கண்டிஷன்! OK சொன்ன அமித்ஷா! குஷியில் வானதி, நயினார்Manoj Bharathiraja | பாரதிராஜாவின் மகன் மரணம்! திரையுலகில் அதிர்ச்சி... காரணம் என்ன?

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
IPL KKR vs RR: எடுபடாத RR பவுலிங்! போற போக்கில் ஜெயிச்ச கொல்கத்தா! ஜஸ்டில் மிஸ்ஸான டி காக் சதம்!
IPL KKR vs RR: எடுபடாத RR பவுலிங்! போற போக்கில் ஜெயிச்ச கொல்கத்தா! ஜஸ்டில் மிஸ்ஸான டி காக் சதம்!
கிளாம்பாக்கம் வேண்டாம்.. இனி கேரளா-கோவைக்கு கோயம்பேட்டில் இருந்தே போகலாம்..  என்ன சொல்றீங்க? முழு விவரம்
கிளாம்பாக்கம் வேண்டாம்.. இனி கேரளா-கோவைக்கு கோயம்பேட்டில் இருந்தே போகலாம்.. என்ன சொல்றீங்க? முழு விவரம்
Coimbatore Shutdown: கோவையில் மின்தடையா? (28.03.2025 ): மின் வாரியம் தெரிவித்தது என்ன?
Coimbatore Shutdown: கோவையில் மின்தடையா? (28.03.2025 ): மின் வாரியம் தெரிவித்தது என்ன?
ரூ.2.5 கோடி ஒப்பந்தம்: மகளிர் சுயஉதவிக்குழுக்களின் பொருட்கள்னாலே தரம்தான்
ரூ.2.5 கோடி ஒப்பந்தம்: மகளிர் சுயஉதவிக்குழுக்களின் பொருட்கள்னாலே தரம்தான்
Bharathiraja: கவுண்டமணியை அடித்த பாரதிராஜா..! ஏன் நடந்தது இந்த காரியம்?
Bharathiraja: கவுண்டமணியை அடித்த பாரதிராஜா..! ஏன் நடந்தது இந்த காரியம்?
Manoj Bharathiraja: இறுதிவரை அந்த ஒரு விஷயத்திற்காக போராடிய மனோஜ் பாரதிராஜா..!
Manoj Bharathiraja: இறுதிவரை அந்த ஒரு விஷயத்திற்காக போராடிய மனோஜ் பாரதிராஜா..!
TN 12th Exam: முடிந்த பிளஸ் 2 பொதுத்தேர்வு; விடைத்தாள் திருத்தம் எப்போது? தேர்வு முடிவுகள்?
TN 12th Exam: முடிந்த பிளஸ் 2 பொதுத்தேர்வு; விடைத்தாள் திருத்தம் எப்போது? தேர்வு முடிவுகள்?
CBSE: இனி பொதுத்தேர்வுகளில் கால்குலேட்டர் அனுமதி, டிஜிட்டல் முறையில் மதிப்பீடு; சிபிஎஸ்இ அதிரடி!
CBSE: இனி பொதுத்தேர்வுகளில் கால்குலேட்டர் அனுமதி, டிஜிட்டல் முறையில் மதிப்பீடு; சிபிஎஸ்இ அதிரடி!
Embed widget