Shocking video : கோவையில் சாலை விபத்தில் 5 பேர் காயம்.. வெளியான பதைபதைக்க வைக்கும் சிசிடிவி காட்சிகள்..
மல்லிகா தனது இரண்டு குழந்தைகளுடன் சாலையை கடக்க முயல்வதும் கல்லூரி மாணவர்கள் வந்த இருசக்கர வாகனம் பயங்கரமாக மோதி சிதறுவதும் அதில் அனைவரும் தூக்கி வீசப்படும் பதைபதைக்கும் காட்சிகள் இடம்பெற்றுள்ளது.
கோவை மாவட்டம் கருமத்தம்பட்டி பகுதியில் இரண்டு இரு சக்கர வாகனங்கள் மோதிய விபத்தில் 5 பேர் காயமடைந்த பதைபதைக்க வைக்கும் சிசிடிவி காட்சிகள் வெளியாகியுள்ளது.
கோவை மாவட்டம் கருமத்தம்பட்டி கணபதி நகர் பகுதியை சேர்ந்தவர் செந்தில் குமார். இவருக்கு மல்லிகா என்ற மனைவியும், இரண்டு குழந்தைகளும் உள்ளனர். இந்நிலையில் இன்று காலை மல்லிகா தனது குழந்தைகளை இரு சக்கர வாகனத்தில் பள்ளிக் கூடத்திற்கு அழைத்துக் கொண்டு சென்றுள்ளார். அப்போது சோமனூர் சாலையை இரு சக்கர வாகனத்தில் அவர் கடக்க முயன்ற போது, கல்லூரி மாணவர்கள் வந்த இரு சக்கர வாகனம் இவரது வாகனம் மீது பயங்கரமாக மோதியது. இதில் மல்லிகாவுடன் பயணித்த இரண்டு குழந்தைகளும் இரு சக்கர வாகனத்தில் வந்த கல்லூரி மாணவர்களும் தூக்கி வீசப்பட்டனர்.
கோவை மாவட்டம் கருமத்தம்பட்டி பகுதியில் இரண்டு இரு சக்கர வாகனங்கள் மோதிய விபத்தில் 5 பேர் காயமடைந்த பதைபதைக்க வைக்கும் சிசிடிவி காட்சிகள் வெளியாகியுள்ளது.@abpnadu pic.twitter.com/6KYXUCwFnq
— Prasanth V (@PrasanthV_93) February 2, 2023
இதனைத் தொடர்ந்து அங்கிருந்தவர்கள் வாகனத்தில் இருந்து தூக்கி வீசப்பட்டு காயம் அடைந்தவர்களை, மீட்டு உடனடியாக ஆம்புலன்ஸ்க்கு தகவல் அளித்தனர். அங்கு வந்த 108 ஆம்புலன்ஸ் ஊழியர்கள் அவர்களுக்கு முதலுதவி சிகிச்சை அளித்து மேல் சிகிச்சைக்காக காயமடைந்த 5 பேரையும் கோவை அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர். அங்கு அவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதனிடையே இரு சக்கர வாகனங்கள் மோதும் சிசிடிவி காட்சிகள் வெளியாகி உள்ளது. அதில் மல்லிகா தனது இரண்டு குழந்தைகளுடன் சாலையை கடக்க முயல்வதும் கல்லூரி மாணவர்கள் வந்த இருசக்கர வாகனம் பயங்கரமாக மோதி சிதறுவதும் அதில் அனைவரும் தூக்கி வீசப்படும் பதைபதைக்கும் காட்சிகள் இடம்பெற்றுள்ளது. இந்த சம்பவம் காரணமாக அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது. இந்த சம்பவம் குறித்து கருமத்தம்பட்டி காவல் துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்