மேலும் அறிய

சென்னை ; கஞ்சா , வலி நிவாரணி மாத்திரைகளுடன் சிக்கிய இளைஞர்கள் !! பின்னணி என்ன ?

சட்டவிரோதமாக உடல் வலி நிவாரண மாத்திரைகளை ஆந்திராவிலிருந்து வாங்கி விற்பனைக்காக வைத்திருந்த 4 நபர்கள் கைது. 20 உடல்வலி நிவாரண மாத்திரைகள், 2 கிலோ கஞ்சா பறிமுதல்

சென்னையில் கஞ்சா , வலி நிவாரணி மாத்திரைகளுடன் சிக்கிய இளைஞர்கள் !! பின்னணி என்ன ?

சென்னை தரமணி காவல் நிலைய ஆய்வாளர் தலைமையிலான காவல் குழுவினருக்கு கிடைத்த ரகசிய தகவலின் பேரில் காவல் குழுவினர் தரமணி 100 அடி சாலை நடைமேடை பாலம் அருகே கண்காணித்து அங்கு இருசக்கர வாகனங்களில் நின்று கொண்டிருந்த 4 நபர்களை விசாரணை செய்து அவர்களை சோதனை செய்த போது, அவர்கள் உடல்வலி நிவாரண மாத்திரைகள் மற்றும் கஞ்சா போதைப் பொருளை விற்பனைக்காக மறைத்து வைத்திருந்தது தெரிய வந்தது.

அதன் பேரில் , தரமணி காவல் காவல் நிலையத்தில் வழக்குப் பதிவு செய்து, சட்ட விரோதமாக உடல்வலி நிவாரண மாத்திரைகள் மற்றும் கஞ்சா வைத்திருந்த எம்.ஜி.ஆர் நகரை சேர்ந்த லோகேஷ் ( வயது 24 ) , தரமணியை சேர்ந்த விக்கி ( வயது 27 ) மற்றும் லோகநாதன் ( வயது 19 ) , பெருங்குடியை சேர்ந்த நித்யானந்தம் ( வயது 19 ) ஆகிய நால்வரை கைது செய்தனர். அவர்களிடமிருந்து 20 எண்ணிக்கைகள் கொண்ட Nitrazepam உடல்வலி நிவாரண மாத்திரைகள், 2 கிலோ கஞ்சா, மற்றும் 1 இருசக்கர வாகனம்  பறிமுதல் செய்யப்பட்டது.

மேலும் விசாரணையில் எதிரி லோகேஷ்வரன் ஆட்டோ ஓட்டுநராக உள்ளதும், நித்தியானந்தம் விஷுவல் கம்யூனிகேசன் படித்து வருவதும் , லோகநாதன் டிப்ளமோ படித்து வருவதும், ஆந்திராவிலிருந்து  உடல் வலி நிவாரண மாத்திரைகளை வாங்கி வந்து சென்னையில் விற்பனை செய்தது தெரிய வந்தது. கைது செய்யப்பட்ட 4 பேரும் விசாரணைக்குப் பின்னர் நீதிமன்றத்தில் ஆஜர் செய்யப்பட்டு நீதிமன்ற உத்தரவுப்படி சிறையில் அடைக்கப்பட்டனர்.

தங்க நகை தயார் செய்யும் பட்டறையில் தங்க நகைகளை திருடிச் சென்ற 3 ஊழியர்கள் உட்பட 4 நபர்கள் ஒடிசாவில் கைது. 258 கிராம் தங்க நகைகள் மீட்பு.

சென்னை பூந்தமல்லி நெடுஞ்சாலையில் வசித்து வரும் அரிஷ் ( வயது 35 ) என்பவர் பழைய வண்ணாரப்பேட்டை முத்தையா முதலி தெருவில் தங்க நகைகள் தயார் செய்யும் பட்டறை வைத்து நடத்தி வருகிறார். இவரது பட்டறையில் வேலை செய்து வரும் கார்த்திக்பேரா என்பவரிடம் அரிஷ் கடந்த 07.11.2025 அன்று தங்க கட்டிகள் மற்றும் தங்க நகைகளை கொடுத்து, அதை உருக்கி புதிய டிசைன் நகைகளாக செய்து தருமாறு கூறியுள்ளார்.

பின்னர் கார்த்திக்பேரா கடந்த 10.11.2025 அன்று புதிதாக தயார் செய்த டிசைன் தங்க நகைகளை கொடுத்ததாகவும், மீதம் உள்ள சுமார் 1781 கிராம் எடை கொண்ட தங்க நகைகளை கார்த்திக்பேரா மற்றும் அவரது நண்பர்கள் திருடிக் கொண்டு, கடந்த 11.11.2025 அன்று முதல் தலைமறைவாகி விட்டதாகவும், தங்க நகைகளை திருடிச் சென்ற நபர்களை கைது செய்து, தங்க நகைகளை மீட்டு தரும்படி அரிஷ் என்பவர், கொருக்குப்பேட்டை காவல் நிலைய குற்றப்பிரிவில் கொடுத்தார்.

புகாரின் பேரில், போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர். கொருக்குப்பேட்டை காவல் நிலைய குற்றப்பிரிவு ஆய்வாளர் தலைமையிலான காவல் குழுவினர், சம்பவ இடத்தில் தீவிர விசாரணை செய்து சம்பவயிடத்தில் பொருத்தப்பட்டுள்ள சிசிடிவி கேமரா பதிவுகளை ஆய்வு செய்து மேற்படி தங்க நகைகளை திருடிச் சென்ற ஊழியர்கள் மேற்கு வங்காளம் பகுதியை சேர்ந்த கார்த்திக்பேரா ( வயது 42 ) மற்றும் பபான்ராய் ( வயது 29 ) மற்றும் நாரயண்மைடி ( வயது 19 ) மற்றும் திருட்டு நகைகளை வாங்கி வைத்திருந்த ஒடிசா மாநிலத்தை சேர்ந்த கார்த்திக் சந்திரா பிரதன் ( வயது 42 ) ஆகிய 4 நபர்களை ஒடிசா மாநிலத்தில் வைத்து கைது செய்தனர்.

அவர்களிடமிருந்து திருடப்பட்ட 258 கிராம் எடை கொண்ட தங்கநகைகள் மீட்கப்பட்டது. திருட்டு வழக்கில் தொடர்புடைய மற்ற தலைமறைவான குற்றவாளிகளை பிடிக்க காவல் குழுவினர் தீவிரமாக தேடி வருகின்றனர். கைது செய்யப்பட்ட 4 பேரும் விசாரணைக்குப் பின்னர் நீதிமன்றத்தில் ஆஜர் செய்யப்பட்டனர்.

தலைப்பு செய்திகள்

இன்று கொட்டித் தீர்க்கப்போகுது கனமழை! காஞ்சிபுரம், செங்கல்பட்டு மாவட்டங்களுக்கு எச்சரிக்கை!
இன்று கொட்டித் தீர்க்கப்போகுது கனமழை! காஞ்சிபுரம், செங்கல்பட்டு மாவட்டங்களுக்கு எச்சரிக்கை!
Chennai International Kite Festival: வீகெண்ட் செம பிளான்! மாமல்லபுரத்தில் வண்ணமயமாகத் தொடங்கும் சர்வதேச காற்றாடித் திருவிழா!
வீகெண்ட் செம பிளான்! மாமல்லபுரத்தில் வண்ணமயமாகத் தொடங்கும் சர்வதேச காற்றாடித் திருவிழா!
TN Weather News: இடி, மின்னலுடன் இன்று கனமழை எச்சரிக்கை - எந்தெந்த மாவட்டங்களுக்கு தெரியுமா? வானிலை அறிக்கை
இடி, மின்னலுடன் இன்று கனமழை எச்சரிக்கை - எந்தெந்த மாவட்டங்களுக்கு தெரியுமா? வானிலை அறிக்கை
சென்னையில் பிளிப்கார்ட்டின் பிரம்மாண்ட திட்டம்! 1.30 லட்சம் பேருக்கு வேலைவாய்ப்பு... யார் யாருக்கெல்லாம் அதிர்ஷ்டம்?
சென்னையில் பிளிப்கார்ட்டின் பிரம்மாண்ட திட்டம்! 1.30 லட்சம் பேருக்கு வேலைவாய்ப்பு... யார் யாருக்கெல்லாம் அதிர்ஷ்டம்?

வீடியோ

SP Velumani On EPS : இபிஎஸ் எடுத்த தவறான முடிவுகள்? சசிகலா,டிடிவியை சேர்க்கணும்!அதிமுக சீனியர்கள் செக்
Kallakurichi Viral Video : ”என் கண்முன்னே வெட்டுறாங்களே! 10 ஆண்டு உழைப்பு போச்சே” கதறி அழுத தாய்
Vijay Sangeetha Divorce : விவாகரத்து வழக்கு வாபஸ்! சங்கீதா கொடுத்த திடீர் டிவிஸ்ட் காரணம் என்ன?
CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Thangami vs EPS : எஸ்.பி.வேலுமணி To இபிஎஸ் அணி.! திடீரென U Turn போட்ட தங்கமணி- இது தான் காரணமா.?
எஸ்.பி.வேலுமணி To இபிஎஸ் அணி.! திடீரென U Turn போட்ட தங்கமணி- இது தான் காரணமா.?
TN Govt: ”உங்களுக்கு என்ன பிரச்னை” கரூர் அரசுப்பணி விவகாரம் - உச்சநீதிமன்றம் அதிரடி உத்தரவு - விஜய் ஹாப்பி
”உங்களுக்கு என்ன பிரச்னை” கரூர் அரசுப்பணி விவகாரம் - உச்சநீதிமன்றம் அதிரடி உத்தரவு - விஜய் ஹாப்பி
DMK:பதவிகள் பறிப்பு, புதிய பொறுப்பு - கலக்கத்தில் உ.பிக்கள் - ஆக. 22 திமுக செயற்குழு அறிவிப்பு
பதவிகள் பறிப்பு, புதிய பொறுப்பு - கலக்கத்தில் உ.பிக்கள் - ஆக. 22 திமுக செயற்குழு அறிவிப்பு
Independence Day 2026 Wishes: சுதந்திர தினத்துக்கு Wish பண்ணுங்க, மறக்காம Share செய்ங்க: பக்காவான 10 ட்ரெண்டிங் வாழ்த்துகள்!
Independence Day 2026 Wishes: சுதந்திர தினத்துக்கு Wish பண்ணுங்க, மறக்காம Share செய்ங்க: பக்காவான 10 ட்ரெண்டிங் வாழ்த்துகள்!
நல்ல சாவே வராது.. வன்மத்தை கக்கும் திமுக தலைவர்கள்! அடக்கி வைப்பாரா மு.க.ஸ்டாலின்?
நல்ல சாவே வராது.. வன்மத்தை கக்கும் திமுக தலைவர்கள்! அடக்கி வைப்பாரா மு.க.ஸ்டாலின்?
‘பாஜகவிடம் கொத்தடிமையாக..’ திமுகவை விளாசிய அமைச்சர் சிடிஆர் நிர்மல்குமார்..!
‘பாஜகவிடம் கொத்தடிமையாக..’ திமுகவை விளாசிய அமைச்சர் சிடிஆர் நிர்மல்குமார்..!
ரூ.100 கோடி பழனி நில மோசடி: கைதான சார் பதிவாளருக்கு ஆஞ்சியோ; 2 புதிய அடைப்புகள்!
ரூ.100 கோடி பழனி நில மோசடி: கைதான சார் பதிவாளருக்கு ஆஞ்சியோ; 2 புதிய அடைப்புகள்!
LIVE | Kerala Lottery Result Today (14.08.2026): வெள்ளிக்கிழமை மங்களம் பொங்குமா? பணமழை பொழியுமா? கேரளா லாட்டரி குலுக்கல்!
LIVE | Kerala Lottery Result Today (14.08.2026): வெள்ளிக்கிழமை மங்களம் பொங்குமா? பணமழை பொழியுமா? கேரளா லாட்டரி குலுக்கல்!
Embed widget