சூளைமேட்டில் பரபரப்பு - பாலியல் தொழில் நடத்திய பெண் கைது !! போதை மாத்திரை விற்பனை செய்த கும்பல்
வீட்டை வாடகைக்கு எடுத்து பெண்ணை வைத்து பாலியல் தொழில் நடத்திய பெண் கைது. ஒரு பெண் மீட்பு. 1 செல்போன் பறிமுதல்

சென்னை சூளைமேட்டில் பரபரப்பு - பாலியல் தொழில் நடத்திய பெண் கைது !!
சென்னை காவல் விபச்சார தடுப்புப் பிரிவு காவல் குழுவினருக்கு கிடைத்த ரகசிய தகவலின் பேரில், காவல் குழுவினர் சூளைமேடு வீரபாண்டி நகர் 3 - வது தெருவிலுள்ள ஒரு வீட்டை கண்காணித்த போது அங்கு பெண்ணை வைத்து பாலியல் தொழில் செய்து வருவது உறுதி செய்யப்பட்டது.
அதன் பேரில் , பெண் காவலர்கள் உள்ளிட்ட காவல் குழுவினர் மேற்படி இடத்தில் சோதனை செய்து, அங்கு பெண்ணை வைத்து பாலியல் தொழில் நடத்திய கர்நாடக மாநிலம், பெங்களூரைச் சேர்ந்த சப்னா பாபு ( வயது 31 ) என்பவரை கைது செய்தனர்.
அவரிடமிருந்து 1 செல்போன் பறிமுதல் செய்யப்பட்டு அதே இடத்தில் பாலியல் தொழிலில் ஈடுபடுத்துவதற்கு தங்க வைத்திருந்த 1 பெண் மீட்கப்பட்டார்.
விசாரணையில் கைது செய்யப்பட்ட சப்னா பாபு மேற்படி வீட்டை வாடகைக்கு எடுத்து பாலியல் தொழில் நடத்தியது தெரிய வந்தது.
கைது செய்யப்பட்ட சப்னா பாபு விசாரணைக்குப் பின்னர் நீதிமன்றத்தில் ஆஜர் செய்யப்பட்டு, நீதிமன்ற உத்தரவுப்படி சிறையில் அடைக்கப்பட்டார். மீட்கப்பட்ட பெண் அரசு மகளிர் காப்பகத்தில் ஒப்படைக்கப்பட்டார்.
சட்ட விரோதமாக உடல் வலி நிவாரண மாத்திரைகள் வைத்திருந்த நபர் கைது. 2,240 உடல்வலி நிவாரண மாத்திரைகள், 1.5 கிலோ கஞ்சா மற்றும் 1 செல்போன் பறிமுதல்.
சென்னை அடையாறு மதுவிலக்கு அமலாக்கப் பிரிவு , காவல் ஆய்வாளர் தலைமையிலான காவல் குழுவினருக்கு கிடைத்த ரகசிய தகவலின் பேரில் காவல் குழுவினர் சைதாப்பேட்டை இரயில் நிலையம் அருகில் கண்காணித்து, அங்கு சந்தேகத்திற்கிடமாக நின்று கொண்டிருந்த நபரை விசாரணை செய்தனர்.
அவரை சோதனை செய்த போது , அவர் உடல் வலி நிவாரண மாத்திரைகள் மற்றும் கஞ்சா ஆகிய போதைப் பொருட்களை மறைத்து வைத்திருந்தது தெரிய வந்தது. அதன் பேரில், அடையாறு மதுவிலக்கு அமலாக்கப் பிரிவில் வழக்குப் பதிவு செய்து, போதைப் பொருட்கள் வைத்திருந்த சென்னை தி.நகர் பகுதியை சேர்ந்த கரண் ( வயது 25 ) என்பவரை கைது செய்தனர்.
அவரிடமிருந்து 2,240 எண்ணிக்கைகள் கொண்ட Tapentadol உடல்வலி நிவாரண மாத்திரைகள், 1.5 கிலோ கஞ்சா மற்றும் 1 செல்போன் பறிமுதல் செய்யப்பட்டது.
விசாரணையில் கரண் மும்பையிலிருந்து உடல்வலி நிவாரண மாத்திரைகளை வாங்கி வந்து, சென்னையில் சட்ட விரோதமாக விற்பனை செய்து வந்தது தெரிய வந்தது. கைது செய்யப்பட்ட கரண் விசாரணைக்குப் பின்னர் நீதிமன்றத்தில் ஆஜர் செய்யப்பட்டு நீதிமன்ற உத்தரவுப்படி சிறையில் அடைக்கப்பட்டார்.





















