சென்னையில் விநாயகர் சிலைகள் விற்பனை அமோகம்..! சக்கைப் போடு போடும் களிமண் விநாயகர்...!
விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு சென்னையில் விநாயகர் சிலைகள் விற்பனை அமோகமாக நடைபெற்று வருகிறது.
நாடு முழுவதும் நாளை விநாயகர் சதுர்த்தி கோலாகலமாக கொண்டாடப்பட உள்ளது. தமிழ்நாட்டிலும் விநாயகர் சதுர்த்தி சிலைகள் அமோகமாக விற்பனையாகி வருகிறது. சென்னையில் விநாயகர் சதுர்த்தி கோலாகலமாக கொண்டாடப்படுவது வழக்கம். வீடுகள் தோறும் சிறிய அளவு முதல் பெரிய அளவு வரையிலான விநாயகர் சிலைகளை வாங்கி வழிபடுவதும், பின்னர் கடலில் கரைப்பதும் வழக்கமான ஒன்றாகும்.
இதையடுத்து, சென்னை முழுவதும் பல்வேறு பகுதிகளிலும் விநாயகர் சிலை விற்பனை அமோகமாக நடைபெற்று வருகிறது. சென்னையில் உள்ள கோயம்பேடு, விருகம்பாக்கம், பாரிமுனை, கோடம்பாக்கம், தி.நகர், மயிலாப்பூர், அமைந்தகரை, அண்ணாநகர், ஆலந்தூர், கிண்டி உள்பட பல பகுதிகளிலும் விநாயகர் சிலைகள் விற்பனை அமோகமாக நடைபெற்று வருகிறது.
வீடுகளில் வழிபட்டு கரைப்பதற்கு ஏதுவாக சிறிய அளவிலான விநாயகர் சிலைகள் அதிகளவில் விற்பனைக்கு வைக்கப்பட்டுள்ளது. இந்த சிலைகள் அனைத்தும் ரூபாய் 40 முதல் ரூபாய் 180 வரையில் விற்பனை செய்யப்படுகிறது. வீடுகளில் வழிபட்டு கரைப்பதற்காகவே இந்த விநாயகர் சிலைகள் செய்யப்படுவதால் இதுபோன்ற விநாயகர் சிலைகள் விற்பனை அமோகமாக நடைபெற்று வருகிறது.
மேலும் படிக்க : நாகையில் 32 அடி உயரமுள்ள அத்திவிநாயகர் சுவாமி வெள்ளோட்டம் - திரளான பக்தர்கள் பங்கேற்பு
பல இடங்களில் களிமண் குவியலாக கொட்டப்பட்டு சிறிய அளவிலான விநாயகர் சிலைகள் செய்யப்பட்டு அதே இடத்தில் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. சிறிய அளவில் செய்யப்படும் இந்த விநாயகர் சிலைகள் நன்றாக விற்பனையாகி வருகிறது. இதேபோன்று விநாயகர் சதுர்த்தியில் பிரதான அங்கமான விளாம்பழம், கம்பு, சோளம், கடலை போன்றவற்றின் விற்பனையும் அமோகமாக நடைபெற்று வருகிறது.
சென்னையின் பிரதான சந்தையான கோயம்பேடு மற்றும் முக்கிய சந்தைகளான விருகம்பாக்கம், பாரிமுனை, தி.நகர், அமைந்தகரை, ஆலந்தூர், திருவல்லிக்கேணி, வடபழனி, மயிலாப்பூர், சிந்தாதிரிப்பேட்டை, ராயப்பேட்டை, மீர்சாகிப்பேட்டை, புரசைவாக்கம், சவுகார்பேட்டை, வியாசர்பாடி, சைதாப்பேட்டை உள்ளிட்ட பல்வேறு பகுதிகளிலும் விநாயகர் சிலைகள் விற்பனைகள் அமோகமாக நடைபெற்று வருகிறது.
மேலும், பல பகுதிகளில் விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு பிரம்மாண்ட விநாயகர் சிலைகள் பொதுமக்கள் வழிபாட்டிற்காக வைக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
மேலும் படிக்க : 32 Forms of Ganesha: பிள்ளைகள் கொண்டாடும் பிள்ளையார்.. விநாயகரின் 32 அவதாரங்கள்..! என்னென்ன தெரியுமா?
மேலும் படிக்க : தேனி, திண்டுக்கல் மாவட்டங்களில் 2 ஆயிரத்திற்கும் மேற்பட்ட விநாயகர் சிலைகள் வைக்க ஏற்பாடுகள் தீவிரம்