பரந்தூர் பசுமைவெளி விமான நிலையம் அமைக்க எதிர்ப்பு தெரிவித்து தீபாவளி திருநாளிலும் விடாமல் 475வது நாளாக தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வரும் ஏகனாபுரம் கிராம மக்கள். கொடுக்க மாட்டோம், கொடுக்க மாட்டோம், ஒரு பிடி மண்ணைக் கூட விமான நிலையம் அமைக்க கொடுக்க மாட்டோம் என கோஷமிட்டு கைகளில் தீபம் ஏந்தி போராட்டத்தில் ஈடுபட்டனர்.
அமர்ந்து தொடர் போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர்
காஞ்சிபுரம் ( Kanchipuram News ) காஞ்சிபுரம் மாவட்டம் பரந்தூர் சுற்றுவட்டார 13 கிராம பகுதிகளை உள்ளடக்கி பரந்தூர் பசுமை வெளி விமான நிலையம் அமைக்கப்படும் என மத்திய மாநில அரசுகள் அறிவிப்பு வெளியிட்டு பணிகளை மேற்கொண்டு வருகிறது. பரந்தூர் பசுமை வெளி விமான நிலையம் அமைப்பதால் நெல்வாய், தண்டலம், மடப்புரம்,நாகப்பட்டு, ஏகனாபுரம், மேலேறி,ஆகிய கிராமங்களில் விவசாய நிலங்கள் மட்டுமின்றி குடியிருப்புகளும் அகற்றப்பட உள்ளதால், தங்களின் இருப்பிடமும், வாழ்வாதாரமான விளைநிலங்களும் பறிபோய்விடும் எனக் கூறி விமான நிலையம் அமைக்க, எதிர்ப்பு தெரிவித்து, நாள்தோறும் இரவு நேரங்களில் ஊர் மைதானத்தில் கிராம மக்கள் ஒன்று கூடி அமர்ந்து தொடர் போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர்.
ஏகனாபுரம் கிராம மக்கள்
இந்நிலையில் தீபாவளி திருநாளான இன்றும் கூட விடாமல் 475-வது நாளாக ஏகனாபுரம் கிராம மக்கள் அனைவரும் ஒன்று கூடி கைகளில் தீபம் ஏந்தி கொடுக்க மாட்டோம், கொடுக்க மாட்டோம்,ஒரு பிடி மண்ணைக் கூட விமான நிலையம் அமைக்க கொடுக்க மாட்டோம், வேண்டாம் வேண்டாம் விமான நிலையம் வேண்டாம், என கோஷமிட்டு விமான நிலையம் அமைக்க எதிர்ப்பு தெரிவித்தும், விமான நிலையம் அமைக்க மாற்று இடத்தை தேர்வு செய்ய வேண்டும் என மத்திய மாநில அரசுகளை வலியுறுத்தி கண்டன கோஷங்களை எழுப்பி தொடர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
475-வது நாளாக நடந்த தொடர் போராட்டத்தில், கிராம மக்கள் ஏராளமானோர் கலந்து கொண்டு தீபாவளி திருநாளில் வேதனையுடன் விமான நிலையம் அமைக்க எதிர்ப்பு தெரிவித்து தொடர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
சென்னை பசுமை விமான நிலையம் ( Chennai green field airport )
சென்னையில் இரண்டாவது விமான நிலையத்திற்காக பரந்தூர், ஏகனாபுரம், நெல்வாய், நாகப்பட்டு மற்றும் அதை ஒட்டியுள்ள மொத்தம் 13 கிராமங்களில் இருந்து சுமார் 4800- க்கும் அதிகமான ஏக்கர் பரப்பிலான நிலத்தை கையகப்படுத்த அரசு முடிவு செய்திருக்கிறது. இந்த திட்டத்திற்கான மதிப்பு சுமார் 20,000 கோடி ரூபாய் என கணக்கிடப்பட்டுள்ளது. இதில் சுமார் 3000 ஏக்கர் அளவிற்கு, பட்டா நிலங்களாகவும், மீதம் உள்ள நிலங்கள் அரசு நிலமாகவும் உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. ஏகனாபுரம், நெல்வாய், நாகப்பட்டு ஆகிய கிராமங்களில் பெரும்பாலும் குடியிருப்பு பகுதிகள் மற்றும் விவசாய நிலங்கள் முழுமையாக கையகப்படுத்தப்பட உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. விமான நிலையம் அமைய உள்ள பகுதியில், ஏரி , குளம், கால்வாய் என ஏராளமான நீர்நிலைகள் உள்ளன. இதன் காரணமாக இந்த நிலையில் தீபாவளி நாள் அன்று கூட பகுதி மக்கள் தொடர் போராட்டத்தில் ஈடுபட்ட அப்பகுதி மக்கள் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.