(Source: ECI/ABP News/ABP Majha)
வாணியம்பாடி கொரோனா மருத்துவமனை புது முயற்சி.. ஆடல் பாடல் என சிகிச்சை
கொரோனா பயம் மற்றும் குடும்பத்தினரை பிரிந்து மன அழுத்தத்தில் இருக்கும் நோயாளிகளை உற்சாக படுத்தும் முயற்சியாக திருப்பத்தூர் மாவட்ட ஆட்சியர் சிவன் அருள் முயற்சியால் வாணியம்பாடி மருத்துவமனையில் கொரோனா நோயாளிகளுக்கு சிரிப்பு பயிற்சி , யோகா மற்றும் கலை நிகழ்ச்சிகள் நடத்தப்படுகிறது.
திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி அடுத்த ஜனதபுரம் பகுதியில் அரசு சித்த மருத்துவ சிகிச்சை மையம் செயல்பட்டு வருகிறது. கடந்த மாதம் 15ஆம் தேதி கைத்தறி மற்றும் துணிநூல் அமைச்சர் காந்தி வேலூர் பாராளுமன்ற உறுப்பினர் கதிரவன் ஆம்பூர் சட்டமன்ற உறுப்பினர் வில்வநாதன் ஜோலார்பேட்டை சட்டமன்ற உறுப்பினர் தேவராஜ் திருவண்ணாமலை பாராளுமன்ற உறுப்பினர் அண்ணாதுரை ஆகியோர் துவக்கி வைத்த இந்த மருத்துவமனையில் 100 படுக்கை வசதிகளுடன் நோயாளிகள் இயற்கை எழில் சூழ்ந்த வளாகத்தில் சித்தமருத்துவ சிகிச்சை பெற்று வருகின்றனர். தற்போது இம்மையத்தில் 45 கொரோனா நோயாளிகள் சிகிச்சை பெற்று வரும் நிலையில் இவர்களுக்கு தரமான சித்த மருந்துகளும் சத்தான உணவு வகைகளும் வழங்கப்பட்டு வருகிறது.
கொரோனா நேரத்தில் உடலில் ஏற்படும் மாற்றங்களை விட மனதில் ஏற்படும் மாற்றங்களே மக்களை பெரிய அளவில் பாதிக்கிறது. வாய்விட்டு சிரிங்க நோய் விட்டு போகும் என்கிற பழமொழிக்கு ஏற்றார் போல் நோயாளிகள் மன இறுக்கத்தில் இருந்து விடுபட இவர்களுக்கு சிரிப்பு பயிற்சி (laughing theraphy) பயிற்றுவிக்கப்பட்டு வருகிறது. இதில் நோயாளிகள் பங்கேற்று வாய்விட்டு சிரித்து பகிர்வதன் மூலம் தங்களின் கவலைகளை மறந்து மகிழ்கின்றனர். தினந்தோறும் மன இறுக்கத்தைப் போக்க மாலை நேரத்தில் கலைநிகழ்ச்சிகளும் நடத்தப்படுகிறது . இதன் மூலம் கொரோனா நோயாளிகள் உடல் நிலையில் நல்ல முன்னேற்றம் தெரிவதாகவும் மிக வேகமாக குணமடைந்து வருவதாகவும் இங்குள்ள சித்த மருத்துவர்கள் தெரிவிக்கின்றனர்.
இதன் தொடர்ச்சியாக நேற்று சித்த மருத்துவர் விக்ரம் குமார் 34 தனது குழுவினருடன் இன்னிசை கச்சேரி நிகழ்த்தி நோயாளிகளை மகிழ்ச்சிக்கடலில் ஆழ்த்தினார். தற்பொழுது இந்த வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரல் ஆக பரவி கொண்டு வருகிறது .
ABP செய்தி குழுமத்திடம் பேசிய விக்ரம் குமார் , திருப்பத்தூர் மாவட்டத்தில் வாணியம்பாடி , நாட்றம்பள்ளி ,மற்றும் திருப்பத்தூர் பகுதிகளில் 3 சித்த மருத்துவமனைகள் இயங்கி வருகின்றது . இதில் தற்பொழுது 300 கொரோன நோயாளிகள் அனுமதிக்க பட்டு இருக்கின்றனர் .
‘மருந்து பாதி அன்பே மீதி’ என்ற சொல் சுடர்க்கு ஏற்றார் போல் இங்கு வரும் நோயாளிகளை நாங்கள் எங்களது குடும்ப உறுப்பினர்களை போல் அன்புடன் கவனித்து கொள்கிறோம். பொதுவாக கொரோனா பரிசோதனையில் கொரோனா அறிகுறியில்லாத (asymptomatic ) மற்றும் ஆக்சிஜென் அளவு 90 இல் இருந்து 93 உள்ள , ஆக்சிஜென் வசதிகள் தேவைப்படாத நோயாளிகளுக்கு சித்த மருத்துவமனைகள் பரிந்துரைக்க படுகின்றது . கொரோனா பயம் மற்றும் குடும்பத்தினரை பிரிந்து மன அழுத்தத்தில் இருக்கும் நோயாளிகளை உற்சாக படுத்தும் முயற்சியாக திருப்பத்தூர் மாவட்ட ஆட்சியர் சிவன் அருள் அலசோணையின்படி இங்கு கொரோனா நோயாளிகளுக்கு சிரிப்பு பயிற்சி (LAUGHING THERAPHY) , யோகா மற்றும் கலை நிகழ்ச்சிகள் நடத்த படுகின்றது . தினமும் இதற்காக மாலையில் இருந்து மணி நீரம் ஒதுக்கப்படுகின்றது
இதுவரை இந்த 3 மையங்களில் இருந்து கடந்த 2 மாதங்களில் 350 கும் மேற்பட்ட கொரோனா நோயாளிகள் குணமடைந்து சென்றுஇருக்கிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது. அரசு ஒதுக்கும் நிதியை தண்டி திருப்பத்தூர் மாவட்டத்தில் இருக்கும் சில தன்னார்வலர்கள் இந்த கலைநிகழ்ச்சி உள்ளிட்ட முயற்சிகளுக்கு பண உதவி செய்து இதனை சிறப்பாக நடத்த வழி வகை செய்கின்றனர் . மேலும் இந்த நேரத்தில் யோகா எங்கள் முயற்சிக்கு பெரிதும் துணையை இருக்கும் யோகா பயிற்றுநர் ரமேஷ் உள்ளிட்ட அனைவருக்கும் மாவட்ட நிர்வாகம் மற்றும் மருத்துவ துறை சார்பில் எங்களது நரியை தெரிவித்து கொள்கிறோம் என்று கூறினார் . சென்ற ஆண்டு கொரோனா அச்சத்தால் உலகமே நடுங்கி கொண்டு இருந்த வேலையில் , சித்த மருத்துவர் விக்ரம் PPE KIT அணிந்து கொண்டு நாட்ராம்பள்ளியில் உள்ள சித்த மருத்துவமனையில் கொரோனா நோயாளிகளுடன் சேர்ந்து நடனம் ஆடி அவர்களை மகிழ்வித்தார் என்பது குறிப்பிடத்தக்கது .