Nagammal Vandalur : வண்டலூர் பூங்காவில் புலிகளை பராமரித்து வரும் சிங்கப்பெண் நாகம்மாளின் கதை இது..
"புலியை பராமரிப்பதால் தனக்கு மாதச் சம்பளம் கிடைப்பதாகவும் இதன் மூலமே தனது குடும்பம் வாழ்ந்து வருவதாகவும் தழுதழுத்த குரலில் பேசுகிறார் நாகம்மாள்"
மகளிர் தினம் 2023
சமூகத்தின் ஒரு அங்கமாக உள்ள பெண்கள் தேசத்தை கட்டியெழுப்புவதில் பெரும் பங்களிப்பை செய்கிறார்கள். ஆனால், ஆண்களுக்கு நிகரான மரியாதையும் உரிமையும் பெண்களுக்குக் கிடைப்பதில்லை. பல சமயங்களில் பெண் என்பதாலேயே பின்னுக்குத் தள்ளுகிறார்கள். பெண்களுக்கு சம உரிமை, முன்னேற்றத்திற்கான சம வாய்ப்புகள் மற்றும் அனைத்துத் துறைகளிலும் பெண்களின் பங்களிப்பை அதிகரிப்பதை நோக்கமாகக் கொண்டு உலக நாடுகள் அனைத்திலும் சர்வதேச மகளிர் தினம் கொண்டாடப்படுகிறது. உலகம் முழுவதும் பெண்கள் அதிகளவில் இயற்கை வளங்களை நம்பி வாழ்ந்தாலும், அவர்களுக்கு அவை குறைவாகவே கிடைப்பதோடு, பெண்கள் உணவு, நீர், எரிபொருள் முதலானவற்றைப் பெறுவதில் அவர்களின் பொறுப்பு அதிகரிக்கப்பட்டிருப்பது’ என ஐக்கிய நாடுகள் அமைப்பு கூறியுள்ளதோடு, காலநிலை மாற்றத்தை ஏற்றுக் கொள்வது, தீர்வை நோக்கி நகர்வது முதலான பணிகளை மேற்கொள்வது பெண்களின் தலைமை இன்றியமையாதது எனவும் கூறியுள்ளது.
இவ்வருட கருப்பொருள்
2023 ஆம் ஆண்டு சர்வதேச மகளிர் தினத்திற்கான கருப்பொருள் "டிஜிட்டல்: பாலின சமத்துவத்திற்கான புதுமை மற்றும் தொழில்நுட்பம்" ஆகும். பெண்களின் நிலை குறித்த ஆணையத்தின் (CSW-67) வரவிருக்கும் 67வது அமர்வுக்கான முன்னுரிமைக் கருப்பொருளுடன் இந்தத் தீம் சீரமைக்கப்பட்டுள்ளது, இது “புதுமை மற்றும் தொழில்நுட்ப மாற்றம், பாலின சமத்துவத்தை அடைவதற்கான டிஜிட்டல் யுகத்தில் பெண்கள் அனைவருக்கும் கல்வி மற்றும் அதிகாரம் அளிக்கிறது. பாலின சமத்துவத்தை முன்னேற்றுவதிலும், பெண்களுக்கு அதிகாரமளிப்பதிலும் புதுமை மற்றும் தொழில்நுட்பத்தின் உருமாறும் திறனை இந்த கருப்பொருள் அங்கீகரிக்கிறது