மேலும் அறிய
பராமரிப்பாளரை தாக்கிய வெள்ளைப் புலி..! வண்டலூர் உயிரியல் பூங்காவில் பரபரப்பு ...!
வண்டலூர் அறிஞர் அண்ணா உயிரியல் பூங்காவில் வெள்ளைப் புலி தாக்கிய பராமரிப்பாளர் நலமுடன் இருப்பதாக பூங்கா நிர்வாகம் தகவல்

வெள்ளைப் புலி
வண்டலூர் பூங்கா நிர்வாகம் சார்பில் ஒவ்வொரு விலங்குகளுக்கும் தனித்தனி பராமரிப்பாளர்கள் நியமிக்கப்பட்டு, விலங்குகள் பராமரிக்கப்பட்டு வருகிறது. விலங்குகள் நடமாட்டம் சிறு பாதிப்புகள் ஏற்பட்டாலும் உடனடியாக மருத்துவர் குழு வரவழைக்கப்பட்டு பராமரிப்பாளர்கள் உதவியுடன் விலங்குகளுக்கு உரிய நேரத்தில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. வண்டலூர் உயிரியல் பூங்காவில் அரிய வகையான வெள்ளை புலி இனம் பார்வையாளர்களுக்காக வைக்கப்பட்டுள்ளது. வண்டலூர் உயிரியல் பூங்காவில் சுமார் 6 வெள்ளி புலிகள் தற்போது இருந்து வருகிறது.

வண்டலூர் பூங்கா நிர்வாகம் சார்பில் ஒவ்வொரு விலங்குகளுக்கும் தனித்தனி பராமரிப்பாளர்கள் நியமிக்கப்பட்டு, விலங்குகள் பராமரிக்கப்பட்டு வருகிறது. விலங்குகள் நடமாட்டத்தில் சிறு பாதிப்புகள் ஏற்பட்டாலும், உடனடியாக மருத்துவர் குழு வரவழைக்கப்பட்டு பராமரிப்பாளர்கள் உதவியுடன் விலங்குகளுக்கு உரிய நேரத்தில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. வண்டலூர் உயிரியல் பூங்காவில் அரிய வகையான வெள்ளை புலி இனம் பார்வையாளர்களுக்காக வைக்கப்பட்டுள்ளது. வண்டலூர் உயிரியல் பூங்காவில் சுமார் 6 வெள்ளி புலிகள் தற்போது இருந்து வருகிறது.

இதில் நகுலன் என்ற பெயரிட்ட வெள்ளைப் புலி கடந்த சில நாட்களாகவே உணவு எடுத்துக்கொள்ளாமல் உடல்நலக் குறைவுடன் இருந்து வந்துள்ளது. இதனையடுத்து பராமரிப்பாளர்கள் உடனடியாக நகுலன் என்ற புள்ளியை மருத்துவ பரிசோதனை மேற்கொள்வதற்காக மருத்துவ குழுவினர் தெரிவித்தனர். இதனைத் தொடர்ந்து மருத்துவ குழுவினர் பராமரிப்பாளர் உதவியுடன் வெள்ளைப் புலி கூண்டில் அடைத்து, மருத்துவ பரிசோதனை மேற்கொள்வதற்காக முயற்சி மேற்கொண்டனர்.

அப்பொழுது ஆசனவாய்ப் பகுதியில் வெள்ளைப் புலிக்கு மாதிரி சேகரிக்க முயன்ற பொழுது சரிவர கூண்டு அடைக்கப்பட்டதால் புலி வெளியேறியது, தொடர்ந்து பராமரிப்பாளர் செல்லையாவை வெள்ளைப்புலி தாக்கியது. உடனடியாக சுதாரித்துக் கொண்ட பூங்கா ஊழியர்கள் கூண்டை சரியான நேரத்தில் பூட்டியுள்ளனர். புலி தாக்கியதில் நிலை குலைந்து தடுமாறி கீழே விழுந்து செல்லையா படுகாயமடைந்தார். உடனடியாக அவரை மீட்டு பூங்கா ஊழியர்கள் குரோம்பேட்டை அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர் . தற்போது மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த செல்லையா வீடு திரும்பியதாக பூங்கா நிர்வாகம் சார்பில் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. விலங்கு பராமரிப்பாளரை வெள்ளைப்புலி தாக்கிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்
சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய Abpnadu-இல் செய்திகளைத் (Tamil News) தொடரவும்.
மேலும் காண
Advertisement
தலைப்பு செய்திகள்
க்ரைம்
இந்தியா
கல்வி
அரசியல்
Advertisement
Advertisement
ட்ரெண்டிங் செய்திகள்
Advertisement


வினய் லால்Columnist
Opinion