மொத்தமா மாறும் வடசென்னை.. இனி நல்ல காலம்தான்.. பக்கா பிளான் ரெடி..!
Vada Chennai Valarchi Thittam: வடசென்னையை தென் சென்னை அளவிற்கு உள்கட்டமைப்பில் மேம்படுத்த தமிழக அரசு பணிகளை மேம்படுத்தி வருகிறது.

தமிழநாடு அரசு மாநிலத்தில் பல்வேறு வளர்ச்சி திட்ட பணிகள் மேற்க்கொண்டு வருகிறது. தென் சென்னை வளர்ச்சி அடைந்த அளவிற்கு வடசென்னை வளரவில்லை என்கிற குற்றச்சாட்டு இருந்து வருகிறது. இதனால் வடசென்னையை தென் சென்னை அளவிற்கு உள்கட்டமைப்பில் மேம்படுத்த தமிழக அரசு பணிகளை மேம்படுத்தி வருகிறது. அதன் ஒரு பகுதியாக வட சென்னை பகுதியை மேம்படுத்தும் நோக்கில் வடசென்னை வளர்ச்சி திட்டம்(Vada Chennai Valarchi Thittam) என்கிற புதிய திட்டத்தை அரசு கொண்டு வந்துள்ளது.
ஒதுக்கப்பட்ட நீதி:
இந்த திட்டத்திற்காக தமிழக அரசு 1000 கோடி ரூபாய் நிதியை ஒதுக்கி திட்டத்திற்கான பணிகள் நடந்து வருகின்றன, இந்த நிலையில் கடந்த வாரம் தமிழக முதல்வர் .மு.க.ஸ்டாலின் வடசென்னையில் ஆய்வுகளை மேற்க்கொண்டு பணிகளை விரைந்து முடிக்க அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார். இதனால் வடசென்னையில் உள்கட்டமைப்பு சீரமைக்கப்படும் என்று தெரிகிறது. மேலும் டிசம்பர் 2025க்குள், குறைந்தபட்சம் 80% பணிகளை முடிக்க தமிழக அரசு முடிக்க திட்டமிட்டுள்ளதாக அமைச்சர் சேகர் பாபு குறிப்பிட்டார்.
திட்டங்கள் பற்றிய விவரங்கள்:
இந்த வளர்ச்சி திட்டங்களில் பேருந்து நிலையங்கள், பொது சுகாதார வசதிகள், குடிநீர் வசதி, வர்த்தக நிலையம், பள்ளிகள், விளையாட்டு மைதானங்கள், ஏழைகளுக்கான வீடுகள் மற்றும் இளைஞர்களின் திறன் மேம்பாடு போன்றவை அடங்கும் என்பது குறிப்பிடத்தக்கது.
மாதவரம் மண்டலம் 30வது வார்டு கவுன்சிலர் திரு. ஜி. துரைசாமி, விநாயகபுரத்தில் கட்டப்பட உள்ள பேருந்து நிலையம் வடசென்னையில் உள்ள பொதுப் போக்குவரத்துக்கு உதவும் என்று குறிப்பிட்டார். பின்னர் அவர் பேசியதாவது: கடந்த 9 ஆண்டுகளாக நவீன பேருந்து நிலையம் அமைக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர். சென்னையின் முக்கிய இடங்களுக்குச் செல்ல, அப்பகுதியைச் சேர்ந்த பல மாணவர்கள் மற்றும் பெண்கள் பேருந்து சேவைகளை மட்டுமே நம்பியுள்ளனர். நவீன பேருந்து நிலையம் கட்டப்பட்டு ஓராண்டில் கோயம்பேடு, ஜார்ஜ் டவுன் போன்ற பகுதிகளுக்கு பேருந்து போக்குவரத்து மேம்படும் என்று அவர் கூறினார்.
இதையும் படிங்க: தாம்பரம் - செங்கல்பட்டு இடையே நீங்க நினைத்தது வரப்போகிறது.. இனி தொல்லை இல்லை
பேருந்து நிலைய பணி துவங்கியது:
மாதவரம் மண்டலத்தில், பேருந்து நிலையம் கட்டுவதற்கான பூமி பூஜை பணிகள் நடைபெற்று, விரைவில் கட்டுமானப் பணிகள் தொடங்கவுள்ளது.வடசென்னை வளர்ச்சி திட்டத்தில் 36 திட்டங்களுக்கு மாநகராட்சி கவுன்சில் தீர்மானம் நிறைவேற்றியதையடுத்து, பல்வேறு திட்டப்பணிகளை அந்தந்த பகுதியை சேர்ந்த கவுன்சிலர்கள் பணியின் முன்னேற்றத்தை கண்காணித்து வருகின்றனர்.
வடகிழக்கு பருவமழை தொடங்குவதற்கு முன், தண்டையார்பேட்டை மண்டலத்தில் சுற்றுச்சூழல் பூங்கா கட்டி முடிக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் தண்டையார்பேட்டை மண்டலம் மற்றும் ராயபுரம் மண்டலம் உள்ளிட்ட பகுதிகளில் வெள்ளத்தடுப்பு பணிகள் மேற்கொள்ளப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.






















