புறநகர் ரயில்களில் பயணிக்க தடுப்பூசி சான்றிதழ் தேவையில்லை - தெற்கு ரயில்வே
ரயில்களில் பயணம் செய்யும் போது முகமூடி மற்றும் சமூக இடைவெளியை கடைபிடிக்க வேண்டும் என்று தெற்கு ரயில்வே வலியுறுத்தியுள்ளது.
பிப்ரவரி 1 முதல் சென்னை புறநகர் ரயில்களில் பயணிக்க தடுப்பூசி சான்றிதழ் தேவையில்லை என்று தெற்கு ரயில்வே கூறியுள்ளது.
பிப்ரவரி 1ஆம் தேதி முதல் புறநகர் ரயில்களில் பயணிப்பவர்களுக்கு தடுப்பூசி சான்றிதழ் தேவையில்லை என தெற்கு ரயில்வே வெளியிட்டுள்ள முக்கிய அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
முன்னதாக, டிக்கெட் கவுண்டரில் இரட்டை டோஸ் சான்றிதழைக் காண்பித்தால் மட்டுமே டிக்கெட் மற்றும் சீசன் பாஸ்கள் வழங்கப்பட்டன. தற்போது, புதிய விதிகளின்படி, டிக்கெட் அல்லது சீசன் பாஸ் வாங்குவதற்கு சான்றிதழ் தேவையில்லை. ரயில்களில் பயணம் செய்யும் போது முகமூடி மற்றும் சமூக இடைவெளியை கடைபிடிக்க வேண்டும் என்று தெற்கு ரயில்வே வலியுறுத்தியுள்ளது. மேலும், புறநகர் ரயிலுக்கான UTS மொபைல் செயலி சேவையும் இனி தொடரும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
தமிழ்நாட்டில் கொரோனா தொற்று குறைந்து வருவதன் காரணமாக இன்று முதல் இரவு ஊரடங்கு மற்றும் ஞாயிறு முழு ஊரடங்கு ரத்து செய்து தமிழ்நாடு அரசு உத்தரவிட்டது. இதனைத்தொடர்ந்து, தெற்கு ரயில்வே சில கட்டுப்பாடுகளை தளர்த்தி தற்போது இந்த புதிய உத்தரவை பிறப்பித்துள்ளது. சென்னையில் மெட்ரோ ரயில் வழக்கமான நேரத்தில் இயக்கப்படும் என்றும் மெட்ரோ ரயில் நிர்வாகம் கூறியது .
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்