மேலும் அறிய
Advertisement
காஞ்சிபுரத்தில் 2 டாஸ்மாக் கடைகள் மூடல்; புதிய கடை திறப்பு - சமூக ஆர்வலர்கள் வேதனை
காஞ்சிபுரம் மாநகராட்சி பகுதியில் செயல்பட்டு வந்த இரண்டு டாஸ்மாக் கடைகள் மூடப்பட்டு உள்ளது.
இரண்டு கடைகள் மூடப்பட்டதற்கு தற்சமயம் ஒரு கடை தேனம்பாக்கம் பகுதியில் போலீசார் பாதுகாப்புடன் புதிதாக திறக்கப்பட்டுள்ளதால் சமூக ஆர்வலர்கள் வேதனை.
காஞ்சிபுரம் நகர் பகுதியில் இரண்டு மதுபான கடைகள் மூடல்
காஞ்சிபுரம் (Kanchipuram News): சட்டசபை தேர்தல் அறிக்கையில் தெரிவித்தபடி தமிழ்நாட்டில் ஆளும் திமுக அரசு கடந்த வாரம் தமிழ்நாடு முழுவதும் 500 அரசு மதுபான கடைகளை மூட உத்தரவு பிறப்பித்தது. அதன்படி காஞ்சிபுரம், செங்கல்பட்டு மாவட்டங்களில் 31 அரசு மதுபான கடைகள் மூடப்பட்டது. இதனைத் தொடர்ந்து காஞ்சிபுரம் பேருந்து நிலையம் மற்றும் சித்ரா குப்தர் கோவில் அருகே இருந்த மதுபான கடை மற்றும் மேட்டுதெரு மதுபான கடை மூடப்பட்டது.
தொடர்ந்து இன்னொரு கடையை மூட எதிர்பார்த்து காத்திருந்த மக்கள்
இந்நிலையில் கோவில் நகரமான காஞ்சிபுரத்தில் எப்பொழுதும் திருவிழா காலங்களில் முக்கியமான கோவில்களில் இருந்து புறப்படும் சாமியானது நான்கு ராஜ வீதிகளில் சுற்றிவரும். அந்த வகையில் சங்கர மடம் மற்றும் பூக்கடை சத்திரம் வரும் சாலையில் உள்ள மதுபான கடை ஒன்று உள்ளது. இந்த வழியாகத்தான் அனைத்து பேருந்துகளும் காஞ்சிபுரம் பேருந்து நிலையத்திற்கு வருகிறது. பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட இந்த மதுபான கடையை தமிழக அரசு மூடாமல் விட்டது பொது மக்களிடையே ஒரு அச்சத்தை ஏற்படுத்தி உள்ளது.
திடீரென திறக்கப்பட்ட மற்றொரு கடை
இந்நிலையில், காஞ்சிபுரம் மாவட்டத்தில் முக்கிய பகுதிகளில் கடையை மூடி, தற்போது காஞ்சிபுரம் மாநகராட்சிக்குட்பட்ட தேனம்பாக்கம் பகுதியில் பலத்த போலீஸ் பாதுகாப்புடன் புதிதாக டாஸ்மாக் கடை திறக்கப்பட்டுள்ளது வேதனைக்குரிய செயலாக இருப்பதாக சமூக ஆர்வலர் குற்றச்சாட்டு
ABP Nadu செய்திகளை டெலிகிராம் செயலி மூலம் உடனுக்குடன் தெரிந்துகொள்ள https://t.me/abpnaduofficial என்ற இணைப்பை க்ளிக் செய்யவும்.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்
சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய Abpnadu-இல் செய்திகளைத் (Tamil News) தொடரவும்.
மேலும் காண
Advertisement
தலைப்பு செய்திகள்
காஞ்சிபுரம்
இந்தியா
தமிழ்நாடு
பொழுதுபோக்கு
Advertisement
Advertisement
ட்ரெண்டிங் செய்திகள்
Advertisement
வினய் லால்Columnist
Opinion