மேலும் அறிய
பிறந்த நாள் பார்ட்டி.. செம போதை...! பைக்கில் வீடு திரும்பியவர்கள் விபத்தில் பலி!
காஞ்சிபுரம் அருகே நண்பனின் பிறந்த நாள் விழாவில் கலந்து கொண்டு வீடு திரும்பிய இருவர் விபத்தில் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது

பாலகிருஷ்ணன் , கருணாகரன்
காஞ்சிபுரம் மாவட்டம் ஸ்ரீபெரும்புதூர் அடுத்த அறநெறி பகுதியை சேர்ந்தவர்கள் பாலகிருஷ்ணன் மற்றும் கருணாகரன் .இதில் பாலகிருஷ்ணன் சுங்குவார்சத்திரம் அருகே தனியார் கண்ணாடி நிறுவனத்தில் பணிபுரிந்து வருகிறார். மேலும் சொந்தமாக டாட்டா ஏஸ் என்ற மினி லாரி வைத்து டிராவல்ஸ் நடத்தி வருகிறார். அந்த வாகனத்திற்கு கருணாகரன் என்பவர் ஓட்டுனராக பணிபுரிந்து வருகிறார்.

நேற்று இரவு காஞ்சிபுரத்தில் நடைபெற்ற நண்பரின் பிறந்தநாள் கொண்டாட்டத்தில் கலந்து கொள்ள இருவரும் இருசக்கர வாகனத்தில் காஞ்சிபுரம் வந்தனர். பின்பு பிறந்தநாள் விழாவில் கலந்து கொண்டு இருவரும் மது அருந்தியதாக கூறப்படுகிறது. பின்னர் இருவரும் தங்களது இருசக்கர வாகனத்தில் தங்களது சொந்த ஊருக்கு, ஏனாத்தூர் வழியாக தேசிய நெடுஞ்சாலைக்கு செல்லும் சாலையில் சென்ற பொழுது அங்கிருந்த தரைப்பாலத்தில், இரவு நேரம் காரணமாக மோதி நிலைதடுமாறி இருசக்கர வாகனத்தோடு கீழே விழுந்தனர். பாலத்தின் கீழே தண்ணீர் தேங்கி இருந்த காரணத்தினால் மூச்சுத்திணறி பாலகிருஷ்ணன் என்பவர் சம்பவ இடத்திலேயே பலியானார் .

தகவலறிந்த காவல்துறையினர் மற்றும் தீயணைப்பு துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து இறந்து போன பாலகிருஷ்ணன் மற்றும் உயிருக்கு போராடிக்கொண்டிருந்த கருணாகரனை மீட்டு காஞ்சிபுரம் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுமதித்தனர்.

அங்கு சிகிச்சை பெற்று வந்த நிலையில் கருணாகரன் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். பிறந்தநாள் விழாவில் கலந்து கொண்டு மது அருந்திய காரணத்தினால், இந்த விபத்து ஏற்பட்டு இருக்கலாம் என முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது. ஒரே கிராமத்தை சேர்ந்த இரண்டு இளைஞர்கள் உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்
சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய Abpnadu-இல் செய்திகளைத் (Tamil News) தொடரவும்.
மேலும் படிக்கவும்
தலைப்பு செய்திகள்
தமிழ்நாடு
பொழுதுபோக்கு
உலகம்
அரசியல்





















