மேலும் அறிய
Advertisement
Prophet Mohammad Row : ”இதுவரை உள்ளூர் தகராறு.. இப்போது உலகத் தகராறு” : பாஜகவை சாடிய கே.எஸ் அழகிரி
இதுவரை உள்ளூரில் தகராறு பண்ணி கொண்டு இருந்தீர்கள்.. இப்பொழுது உலகம் முழுவதும் தகராறு பண்ணுகிறீர்கள்.
செங்கல்பட்டு மாவட்டம், சென்னை கிழக்குக் கடற்கரைச் சாலையில் , மாமல்லபுரம் ரோட்டில் உள்ள ஒரு தனியார் ரிசார்டில் உதய்பூர் காங்கிரஸ் கொள்கைப் பிரகடனம் பயிற்சி முகாம் தொடங்கியது.அகில இந்திய காங்கிரஸ் தமிழக மேலிட பொருப்பாளர் தினேஷ் குண்டுராவ் முன்னிலையில், தமிழக காங்கிரஸ் தலைவர் அழகிரி துவங்கி வைத்தார். இந்த பயிற்சி முகாமில் காங்கிரஸ் கட்சி வளர்ச்சி குறித்து தலைவர்கள், நிர்வாகிகள் பலர் பேசினர்.
இதில் முன்னாள் காங்கிரஸ் கமிட்டி தலைவர்கள் இ.வி.கே.எஸ். இளங்கோவன், கே.வி.தங்கபாலு, மற்றும் சுதர்சன நாச்சியப்பன், விஜயதாரினி உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.
மகாபலிபுரம் சிந்தனை அமர்விலிருந்து... pic.twitter.com/l3qlt7Lpj8
— K.S.ALAGIRI (@KS_Alagiri) June 6, 2022
இதையடுத்து பத்திரிக்கையாளர்களை சந்தித்த கட்சியின் மாநில தலைவர் கே.எஸ். அழகிரி, மேகதாது ஆணை விவகாரத்தில் பாரதிய ஜனதா கட்சி தமிழகத்திற்கு துரோகம் இழைத்து விட்டது. கர்நாடகா அரசின் வரைவு அறிக்கைக்கு ஒப்புதல் அளித்துள்ளது. காவிரி ஆறு எந்த எந்த மாநிலத்தில் ஓடுகிறதோ அந்த மாநிலத்தின் ஒப்புதல் இல்லாமல் அனுமதி அளித்துள்ளதை காங்கிரஸ் கட்சி வன்மையாக கண்டிக்கிறது. விரைவில் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி சார்பில் ஆர்பாட்டம் நடத்த போகிறோம் .
— K.S.ALAGIRI (@KS_Alagiri) June 6, 2022
பாரதிய ஜனதா கட்சியின் செய்தி தொடர்பாளர் நுபுர் ஷர்மா ஒரு டிவி விவாதநிகழ்ச்சியின் போது ஒட்டுமத்த இஸ்லாமியர்கள் குறித்து அவதூறாக பேசி இருக்கிறார். இஸ்லாமியர்களை பற்றி பேசுவதற்கு முல்லா இருக்கிறார், கிறிஸ்தவர்களை பற்றி பேசுவதற்கு பிஷப் இருக்கிறார். அவர்களை பற்றி பாரதிய ஜனதா கட்சி பேச தேவையில்லை. பாஜகவால் தான் உலக போர் ஏற்பட வாய்ப்பு இருக்கிறது என அழகிரி தெரிவித்தார்.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்
சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய Abpnadu-இல் செய்திகளைத் (Tamil News) தொடரவும்.
மேலும் காண
Advertisement
தலைப்பு செய்திகள்
தமிழ்நாடு
இந்தியா
க்ரைம்
சென்னை
Advertisement
Advertisement
ட்ரெண்டிங் செய்திகள்
Advertisement
வினய் லால்Columnist
Opinion