Cooking Challenge: உணவுக்கண்காட்சிக்கு ரெடியா? சென்னையில் மாபெரும் சமையல் சவால் போட்டி - முழு விபரம் இதோ!
Cooking Challenge: மாபெரும் சமையல் சவால் போட்டியை சுற்றுலாத் துறை தலைமை செயலாளர் மணிவாசன் தொடங்கி வைத்தார்.
![Cooking Challenge: உணவுக்கண்காட்சிக்கு ரெடியா? சென்னையில் மாபெரும் சமையல் சவால் போட்டி - முழு விபரம் இதோ! Tourism Chief Secretary Manivasan inaugurated grand cooking challenge competition in Chennai for first time in India Cooking Challenge: உணவுக்கண்காட்சிக்கு ரெடியா? சென்னையில் மாபெரும் சமையல் சவால் போட்டி - முழு விபரம் இதோ!](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2023/09/15/74c22096bfed085f6aac733b2abb7c5d1694786461818333_original.jpg?impolicy=abp_cdn&imwidth=1200&height=675)
மாபெரும் சமையல் சவால் போட்டியை சுற்றுலாத் துறை தலைமை செயலாளர் மணிவாசன் தொடங்கி வைத்தார்.
இந்தியாவிலேயே முதன்முறையாக சர்வதேச நடுவர்கள் முன்னிலையில் சென்னையில் இந்த சமையல் போட்டி நடைபெறுகிறது. நந்தம்பாக்கதில் உள்ள வர்த்தக மையத்தில் தென்னிந்திய செஃப் அசோசியேஷனின் 6 வது சமையல் சவால் சர்வதேச செஃப் அசோசியேசன் சமூக (WACS) ஒப்புதலுடன் இந்த போட்டிகள் நடைபெறுகின்றன.
தென்னிந்திய செஃப் அசோசியேஷன் தலைவர் செஃப் தாமு மற்றும் பொதுச் செயலாளர் செஃப் சீதாராம் பிரசாத் ஆகியோர் முன்னிலையில் தொடங்கியுள்ளது. இந்தப் போட்டி வரும் 17 ஆம் தேதி வரை நடைபெறுகிறது. உணவு கண்காட்சியும் நடைபெற உள்ளது.
சமையல் சவால் போட்டி பரிசு
இந்த சமையல் சவால் போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு வரும் 18 ஆம் தேதி பரிசுகள் வழங்கப்பட உள்ளன. சமையல் சவால் போட்டியின் முதல் நாளான இன்று, சமையல் துறை வல்லுனர்கள், 5 நட்சத்திர உணவு விடுதிகளி்ன் முன்னணி சமையல் கலைஞர்கள் உள்ளிட்ட சுமார் 1000 பேர் போட்டிகளில் பங்கேற்றனர். த்ரீ டயர் வெட்டிங் கேக், பட்டர் மற்றும் மார்கரின் ஸ்கல்ப்சர், பரோட்டா மற்றும் லைவ் பிரியாணி பிரிவுகளில் போட்டிகள் நடத்தப்படுகின்றன.
இந்த போட்டிகளில் ஜூனியர் மற்றும் சீனியர் பிரிவு போட்டியாளர்கள் பங்கேற்றுள்ளனர். சென்னையில் சர்வதேச அளவில் சமையல் கலைஞர்கள் பங்கேற்கும் போட்டி என்பதால் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது.
இன்றைய போட்டியில் பல்வேறு உணவு கலைஞர்கள் கோட்டை, ட்ராகன், சிங்கம், மயில், இந்தியாவின் முன்னாள் குடியரசுத் தலைவர், விஞ்ஞானி ஏ.பி.ஜே. அப்துல கலாம் உள்ளிட்ட பலரின் உருவங்கள் மில்க் சாக்லேடில் வடிவமைத்திருந்தனர்.
மேலும் வாசிக்க..
Vinayagar Chaturthi 2023: விநாயகர் சதுர்த்தி: ரசாயனங்களை பயன்படுத்தாதீர்கள்; அதிகாரிகள் எச்சரிக்கை
தலைப்பு செய்திகள்
ட்ரெண்டிங் செய்திகள்
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)
![வினய் லால்](https://cdn.abplive.com/imagebank/editor.png)