Vinayagar Chaturthi 2023: விநாயகர் சதுர்த்தி: ரசாயனங்களை பயன்படுத்தாதீர்கள்; அதிகாரிகள் எச்சரிக்கை
பெரம்பலூர் மாவட்டத்தில் விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு சிலைகளை நிறுவுதல் மற்றும் கரைத்தல் தொடர்பான விதிமுறைகள் குறித்து ஆலோசனை கூட்டம் நடந்தது.
![Vinayagar Chaturthi 2023: விநாயகர் சதுர்த்தி: ரசாயனங்களை பயன்படுத்தாதீர்கள்; அதிகாரிகள் எச்சரிக்கை Vinayagar Chaturthi 2023: Legal action will be taken if idols are made with toxic and non-biodegradable chemicals. Vinayagar Chaturthi 2023: விநாயகர் சதுர்த்தி: ரசாயனங்களை பயன்படுத்தாதீர்கள்; அதிகாரிகள் எச்சரிக்கை](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2023/09/15/7752cb1155daa2f85daeabfb0d1fe6ac1694777163769184_original.jpeg?impolicy=abp_cdn&imwidth=1200&height=675)
ஆண்டு தோறும் விநாயகர் சதுர்த்தியன்று மண்ணாலான என் உருவத்தை பொன்னால் செய்த பாவனையுடன் அமைத்து பல பூக்களால் பூஜித்த பின் இரவில் கண் விழித்து முறையாகப் பூஜித்தால், அவ்வாறு செய்பவனுக்கு அவன் தெடங்கிய காரியத்தில் வெற்றியையும், ஸகல காரியங்களில் சித்தியையும் அளிக்கிறேன்' என்று விநாயகரே சந்திரனுக்குக் கூறுவதாக அமைந்துள்ளது. சியமந்தக மணி என்ற ரத்தினத்தின் காரணமாகப் பல அபவாதங்களுக்கு ஆளான கிருஷ்ணனுக்கு நாரதர் இக்கதையைக் கூறி, கிருஷ்ணனே சங்கடஹரண சதுர்த்தி பூஜை செய்து அவப்பெயர் நீங்கப் பெற்றார் என்று அறிகிறோம். இந்து மக்கள் அனுட்டிக்கின்ற விரதங்களில் விநாயக சதுர்த்தி விரதம் முக்கியமான ஒன்று ஒவ்வோர் ஆண்டும் ஆவணி மாதச் சுக்கிலபட்ச சதுர்த்தித் திதியன்று விநாயக சதுர்த்தி அனுட்டிக்கப்படுகின்றது. அன்றைய தினம் உலகெங்கணுமுள்ள இந்துக்கள் பய பக்தியோடு விநாயக வழி பாடியற்றி, உண்ணா நோன்பிருந்து, தான தர்மங்கள் செய்து கொண்டாடுகின்றனர். நாட்டுக்கு நாடு அந்தக் கொண்டாட்டங்கள் வேறுபட்ட முறைகளில் கொண்டாடப்படுவதைக் காணலாம். ஆகையால் இந்தாண்டு விநாயகர் சிலைகலை அதிக அளவில் கைவினை தொழிலாளர்கள் தயாரித்து வருகிறார்கள். குறிப்பாக இம்மாதம் வரும் 18 ஆம் தேதி விநயகர் சதுர்த்தி கோலாகலமாக கொண்டாபட உள்ளது.
இந்நிலையில் பெரம்பலூர் மாவட்டத்தில் விநாயகர் சதுர்த்தி விழாவை அரசின் விதிமுறைகளை பின்பற்றி அமைதியான முறையில் பாதுகாப்பாக நடத்துவது குறித்தும், சிலைகளை நிறுவுதல் மற்றும் கரைத்தல் தொடர்பாக கடைபிடிக்க வேண்டிய விதிமுறைகள் குறித்து விளக்கும் வகையிலும் விழா அமைப்பாளர்களுடனான ஆலோசனை கூட்டம் கலெக்டர் அலுவலகத்தில் நடந்தது. கூட்டத்திற்கு மாவட்ட கலெக்டர் கற்பகம் தலைமை தாங்கினார். மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஷ்யாம்ளா தேவி முன்னிலை வகித்தார். மேலும் விநாயகர் சிலையை நிறுவ உள்ள இடம் அரசு இடமாக இருப்பின் சம்பந்தப்பட்ட உள்ளாட்சி துறையிடம் இருந்து தடையின்மை சான்று பெறப்பட வேண்டும். சம்பந்தப்பட்ட போலீஸ் நிலைய அதிகாரியிடம் இருந்து ஒலிப்பெருக்கி பயன்படுத்துவதற்கான அனுமதி பெறப்பட வேண்டும். மின்சாரம் பெறப்படும் இடம் அல்லது தற்காலிக மின் வினியோகத்திற்கான கடிதம் தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகத்திடம் இருந்து பெறப்பட வேண்டும். இவ்வாறு விண்ணப்பிக்கும் விண்ணப்பங்கள் மீது வருவாய் கோட்டாட்சியரால் பரிசீலனை செய்து அனுமதி வழங்கப்படும்.
குறிப்பாக விழா அமைப்பாளர்களின் வேண்டுகோளை ஏற்று, மேற்சொன்ன அனுமதிகளை ஒவ்வொரு துறை அலுவலராக சந்தித்து பெறும் நிலையினை மாற்றி, ஒற்றை சாளர முறையில் அனுமதி வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. சம்பந்தப்பட்ட துறை அலுவலர்கள், வருவாய் கோட்டாட்சியர் அலுவலகத்தில் விழா அமைப்பாளர்கள் உங்களது அனுமதிகோரும் கடிதங்களை துறை அலுவலர்களிடம் வழங்கினால் முறையாக ஆய்வு செய்து ஓரிரு நாளில் உங்களுக்கான அனுமதி வழங்கப்படும்.
மேலும் நீரில் கரைக்க பயன்படுத்தப்படும் சிலையானது தூய களிமண்ணால் செய்யப்பட்டிருக்க வேண்டும். நச்சு மற்றும் மக்காத ரசாயனங்களை கொண்டு சிலைகள் செய்யப்படுவது தவிர்க்கப்பட வேண்டும். அவ்வாறு சிலை தயாரிப்பதோ, அந்த சிலையினை நீரில் கரைக்க பயன்படுத்துவதோ கண்டறியப்பட்டால் சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும். நிறுவப்பட உள்ள சிலையின் உயரம் 10 அடிக்கு மிகாமல் இருக்க வேண்டும். இதர வழிபாட்டு தலங்கள், மருத்துவமனைகள், கல்வி நிலையங்கள் அருகில் சிலைகள் நிறுவப்படுவதை தவிர்க்க வேண்டும். விநாயகர் சதுர்த்தி விழா அமைதியான, பாதுகாப்பான முறையில் சிறப்பாக கொண்டாட அனைவரும் முழு ஒத்துழைப்பு அளிக்க வேண்டும் என தெரிவித்தார்.
தலைப்பு செய்திகள்
ட்ரெண்டிங் செய்திகள்
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)
![வினய் லால்](https://cdn.abplive.com/imagebank/editor.png)